இலங்கைப் பெண்கள் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு தெரிவிக்கின்றது.
இது தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளாதாக அதன் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த விக்ரமசிங்க கூறினார்.
சிங்கப்பூரில் இலங்கை பெண்கள் சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே சிங்கப்பூருக்கு தொழில் நிமித்தம் செல்வோர் கட்டாயமாக வெளிநாட்டு வேலைலவாய்ப்புப் பணியகத்தின் ஊடாக செல்ல வேண்டும் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
பணியகத்தில் பதிவு செய்த பின்னர் சிங்கப்பூருக்கு பயணிப்பதன் மூலம் இவ்வாறான ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்புப் பெற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக