டெக்ஸ்ட்டுடன் விதம் விதமாய் கோடுகள்:
வேர்டில் நாம் உருவாக்கும் டாகுமெண்ட்களில் இடை இடையே அழகாய்க் கோடுகளை அமைத்துப் பார்க்கலாம். இந்த கோடுகளை அமைக்கப் பல சுருக்கு வழிகளை நமக்கு வேர்ட் தொகுப்பு தருகிறது. இவற்றைப் பயன்படுத்திப் பல கோடுகளை மிகவும் அழகாக அமைக்கலாம். இன்னொரு சிறப்பு இவற்றை அமைத்திட பல சுருக்கு வழிகள் இருப்பதுதான்.
இடது பக்கமிருந்து வலது பக்கத்திற்குஎளிமையான ஒரு கோடுஅமைக்க மூன்று மைனஸ் (-) அடையாளங்களை அமைத்து என்டர் தட்டுங்கள். கோடு ஒன்று வரையப்படும்.
மூன்று சமன் (=)அடையாளங்களை அமைத்து என்டர் தட்டினால் இரட்டைக் கோடு கிடைக்கும்.
இதே போல டில்டே (~) அடையாளம் அலை அலையாய் ஒரு கோட்டினை அமைக்கும்.
இதே போல (´) மற்றும் வேறு அடையாளங்களை அமைத்து பரீட்சித்துப் பார்க்கவும்.
இந்த கோடுகளை வேண்டாம் என எண்ணினால் எப்படி நீக்குவது? கோட்டுக்கு மேலாக கர்சரைக் கொண்டு வரவும்.
பின் கண்ட்ரோல் + க்யூ அழுத்தவும். கோடு வரைவதில் இந்த ஏற்பாடு உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வேர்ட் தொகுப்பில் கிடைக்கவில்லை என்றால் உள்ளே செட்டிங்ஸ் மாறி இருக்கலாம்.
இதனை மாற்ற Tools மெனு திறக்கவும். பின் அதில் Auto corrections என்ற பிரிவைத் திறக்கவும். கிடைக்கும் டயலாக் பாக்ஸில் Auto format as you type என்ற பிரிவில் Border Lines பாக்ஸுக்கு எதிராக டிக் அடையாளத்தை அமைக்கவும்.
வேர்டில் பாண்ட் விண்டோ:
வேர்ட் தொகுப்பில் டாகுமெண்ட் தயாரிக்கையில் நாம் விரைவாகச் செயல்பட சில பட்டன்கள் தரப்பட்டுள்ளன. ஒரு சொல்லை தடிப்பாக்க, சாய்வாக அமைக்க, அடிக்கோடிட,கலர் மாற்ற ஆகிய செயல்பாடுகளை இவை மேற்கொள்கின்றன. ஆனால் உங்கள் பாண்ட் அல்லது சொல்லை மாற்றி பார்மட் செய்திட இன்னும் பல வழிகள் உள்ளன.
கேரக்டர் ஸ்பேஸிங், டெக்ஸ்ட் எபக்ட், டெக்ஸ்ட்டின் குறுக்காகக் கோடிடுதல், மேலாகச் சிறிய அளவில் அமைக்கும் சூப்பர் ஸ்கிரிப்ட், அதே போல கீழாகச் சிறிய அளவில் அமைக்கும் சப்ஸ்கிரிப்ட், ஷேடோ, எம்பாஸ்டு டெக்ஸ்ட், என்கிரேவ்டு டெக்ஸ்ட் எனப் பல வசதிகள் மூலம் எழுத்துக்களையும் சொற்களையும் பாலிஷ் செய்திடலாம்; புதிய பார்மட்டிங் அமைத்திடலாம்.
இவை எல்லாம் எங்கே இருக்கின்றன? பார்மட்டிங் டூல் பாரில் இல்லையே என்று கேட்கிறீர்களா? ஆம், இவை எல்லாம் பார்மட்டிங் டூல்பாரில் கிடைக்காது. இங்கு எல்லாரும் அடிக்கடி பயன்படுத்தும் சில விஷயங்கள் மட்டுமே கிடைக்கும். மேலே சொன்னவற்றைப் பெற நீங்கள் செல்ல வேண்டியது பாண்ட் விண்டோ (Font Widow). இதனைப் பெற பார்மட் (Format)மெனு சென்று அதில் பாண்ட்(Font) என்ற பிரிவில் கிளிக் செய்திட வேண்டும். மேலே சொன்ன அனைத்து வசதிகளையும் பெற வழிகள் தரப்பட்டிருக்கும்.
இன்னும் வேகமாக இந்த விண்டோவினைப் பெற வேண்டும் என்றால் கண்ட்ரோல் + டி (Ctrl+D)அழுத்துங்கள். ஏதேனும் டெக்ஸ்ட் ஒன்றில் மேலே குறிப்பிட்ட மாற்றங்களில் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றால் முதலில் அந்த டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்த பின்னர் பின் கண்ட்ரோல் +டி அழுத்துங்கள்.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக