புதன், 20 மார்ச், 2013

தெரிந்து கொள்ளுங்கள்

ஸ்லாஷ் கோடுகள் (Forward slash backslash)

யு.ஆர்.எல். மற்றும் கம்ப்யூட்டருக்கான கட்டளை வரிகளில் ஏன் இரண்டு வகையான சாய்வு கோடுகள், முன்புறமாக, பின்புறமாக (Forward slash backslash) எனப் பயன்படுத்துகிறோம். ஒன்றின் இடத்தில் இன்னொன்றைப் பயன்படுத்தினால் தவறு எனக் கருதப்படுகிறதே ஏன்?

முன்னோக்கி மற்றும் பின்னோக்கி என இரண்டு வகையான ஸ்லாஷ் கோடுகளைப் பயன்படுத்துகிறோம். இதில் நிச்சயம் ஓர் அடிப்படை செயல் வேறுபாடு உள்ளது.

முன்னோக்கி அமைக்கப்படும் சாய்வு கோடு, கட்டளையில் நீங்கள் சிஸ்டம் இல்லாமல் வெளியே சிலவற்றைத் தேடுகிறீர்கள் என்று பொருள் தருகிறது.

எடுத்துக் காட்டு, இணைய தள முகவரிகள். பின்னோக்கி அமைக்கப்படும் சாய்வு கோடு, அந்த கட்டளை மூலம் நீங்கள், உங்கள் சிஸ்டத்தில் உள்ள ஒன்றைத் தேடுகிறீர்கள் என்று பொருள்.

ஒரு ட்ரைவ் அல்லது பைல் ஒன்றைக் குறிப்பிடுகையில், இந்த வகை சாய்வு கோட்டினை அமைக்கிறோம்.

------------

கட், டெலீட், பேக் ஸ்பேஸ்

டெக்ஸ்ட் எடிட்டிங் செய்கையில் நாம் கட், டெலீட், பேக் ஸ்பேஸ் என ஒரே மாதிரியான கட்டளைகளைப் பயன்படுத்துகிறோம். இவை செயல்படுவதில் உள்ள வேறுபாடு

இந்த கட்டளைகள் எல்லாம் ஒரே மாதிரியான செயல்பாட்டினை மேற்கொள்வது போல் தெரியும். விளைவுகள் ஏறத்தாழ சமமாக இருந்தாலும், இவை செயல்படுவதில் சின்ன சின்ன வித்தியாசம் இருக்கிறது. சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.

ஒரு டாகுமெண்ட், பிரசன்டேஷன், ஒர்க்ஷீட் என எந்த வகையாக இருந்தாலும் இதன் செயல்பாடு டெக்ஸ்ட்டை நீக்கும் வகையிலேயே இருக்கும். ஆனால் நீக்கப்பட்ட டெக்ஸ்ட்டை அல்லது ஆப்ஜெக்ட்டை சிஸ்டம் எப்படி செயல்படுத்துகிறது என்பதில் தான் வேறுபாடு உள்ளது.

இவற்றில் கட் (Cut Ctrl+x) செய்கையில் நீக்கப்பட்ட டெக்ஸ்ட் கிளிப் போர்டுக்குச் செல்கிறது.

அங்கு வைக்கப்படுவதால் அதனை எப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் அணுகி, பெற்று பயன்படுத்தலாம். ஆனால் டெலீட் மற்றும் பேக்ஸ்பேஸ் (Delete/Backspace)பயன்படுத்துகையில் நீக்கப்படும் டெக்ஸ்ட் மறைந்துவிடுகிறது.
இதனை உடனே அன் டூ (Undo Ctrl+z) செய்தால் மட்டுமே மீண்டும் கிடைக்கும்.
எனவே அழிப்பதனைத் தக்கவைத்துக் கொள்ள எண்ணினால், கட் செய்திடுங்கள். மீண்டும் அறவே வேண்டாம் என எண்ணினால் டெலீட் அல்லது பேக் ஸ்பேஸ் பயன்படுத்துங்கள்.

-----------------------
Driver:

(டிரைவர்)விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் டிரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான டிரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் சிடியில் அவற்றிற்கான டிரைவர்கள் தரப்படும்.

Virus:

(வைரஸ்) கெடுதலை விளைவிக்கும் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம். கம்ப்யூட்டர் இயக்கத்தில் குறுக்கீடு தந்து எரிச்சலைத்தரும் என்பது முதல் கம்ப்யூட்டர் இயக்கத்தினையே முடக்கி வைக்கும் வரை பலவகையான நாச வேலைகளில் ஈடுபடும். கம்ப்யூட்டர்களுக்கிடையே பைல்கள் பரிமாறப்படுகையில் (இமெயில், சிடி,பிளாப்பி மற்றும் பிளாஷ் டிரைவ்) இவை அவற்றுடன் இணைந்து சென்று நாசத்தை உண்டாக்கும். இமெயில் மூலம் சென்ற பின்னர் அந்த கம்ப்யூட்டரில் இருக்கும் இமெயில் முகவரிகளுக்கு மெயில் அனுப்புவது போலத் தானும் சென்று நாச வேலையில் ஈடுபடும். வைரஸ் புரோகிராம் கள் பொதுவாக எந்த அறிகுறியும் காட்டாது கம்ப்யூட்டருக்குள் இருக்கும். ஏதாவது நாள் அல்லது செயல்பாட்டினை மேற்கொள்கையில் தூண்டிவிடப்பட்டு நாச வேலையை மேற்கொள்ளும்.

தம்ப் நெயில் (Thumbnail):

பெரிய படத்தின் சிறிய தோற்றம். இதன் மூலம் பட பைலைத் திறக்காமலேயே அது என்ன படம் என அறிய முடியும்.

லைன் இன் (Line In):

கம்ப்யூட்டர் அல்லது சவுண்ட் கார்டில் வெளியில் இயங்கும் ஆடியோ சாதனத்தை இணைக்கும் வழி.

யு.எஸ்.பி. (USB)

வெளியிலிருந்து கம்ப்யூட்டருக்கான துணை சாதனங்களை அதனுடன் இணைக்கும் ஒரு தரப்படுத்தப்பட்ட வழி. இதன் மூலம் மெமரி டிரைவ், ஹார்ட் டிஸ்க், கேமரா, மொபைல், பிரிண்டர், கீ போர்டு எனக் கம்ப்யூட்டருடன் இணைக்க வேண்டிய எந்த சாதனத்தையும் இணைக்கலாம்.

Wizard

Wizard என்பது கம்ப்யூட்டரில் உங்களை வழிகாட்டும் ஒரு பொதுவான வழிகாட்டி. இது அனைத்து புரோகிராம்களிலும் கிடைக்கும். வரிசையாக கேள்வி கேட்டு அல்லது ஆப்ஷன்ஸ் கொடுத்து அதில் உங்களுக்கான ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுக்கச் சொல்லி வழி நடத்திச் செல்லும். சாதாரண விஸார்ட் என்றால் வேர்டில் ஒரு புதிய டாகுமெண்ட்டை திறக்கையில் உங்களிடம் கேள்வி கேட்டு ஆப்ஷன்ஸ் தரும் கட்டமும் ஒரு விஸார்ட் தான். சாப்ட்வேர் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில் உங்களை வழி நடத்துவதும் விஸார்ட் தான். ஒரு டேட்டா பேஸ் பைல் உருவாக்குகையில் கிடைப்பதும் விஸார்ட் தான்.


நெட்வொர்க் (Network):

தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக கம்ப்யூட்டர் களையும் சார்ந்த சாதனங்களையும் இணைத்து உருவாக்கப்படும் ஒரு வலைப்பின்னல். இது கம்பிகள் வழியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. வயர்லெஸ் நெட்வொர்க்குகளும் சாத்தியமே.

ரெசல்யூசன்: (Resolution)

மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த அளவிற்கு டீடெய்ல்ஸ் உள்ளன என்பதைக் குறிக்க இந்த அலகு சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஒரு மானிட்டரில் இது அதன் பிக்ஸெல்களைக் குறிக்கிறது. எடுத்துக் காட்டாக 17 அங்குல மானிட்டரில் இது 1024 x 768 பிக்ஸெல் ஆக இருக்கும். அச்சுப் படிவம் மற்றும் ஸ்கேனரில் ரெசல்யூசன் என்பது ஒரு சதுர அங்குலத்தில் எத்தனை புள்ளிகளில் (Dots per inch) டீடெய்ல்ஸ் தரப்பட்டுள்ளது என்பதை இது குறிக்கிறது. அல்லது ஒரு சதுர அங்குல இடத்தில் எத்தனை துளி இங்க் அல்லது டோனர் தெளிக்கப்படுகிறது என்பதையும் ரெசல்யூசன் என்பதின் மூலம் சொல்கிறோம்.

ஆஸ்பெக்ட் ரேஷியோ (Aspect Ratio):

ஒரு டிவியின் அல்லது மானிட்டரின் திரையின் அகல உயர விகிதத்தை ஆஸ்பெக்ட் ரேஷியோ என்கிறோம். வழக்கமான டிவிக்களின் திரை 4:3 என்ற விகிதத்தில் அமைந்திருக்கும். அதாவது 4 பங்கு அகலம் 3 பங்கு உயரம். தற்போது வருகின்ற புதிய ஸ்கிரீன்கள் 16:9 என்ற விகிதத்தில் அமைக்கப்படுகின்றன.

ஐ.பி. அட்ரஸ் (IP Address):

கம்ப்யூட்டர் நெட் வொர்க் மற்றும் இன்டர்நெட்டில் இணைக்கப்பட்டுள்ள ஒரு கம்ப்யூட்டருக்கு அடையாளம் தரும் முகவரி எண்.
-----------------------
கம்ப்யூட்டரில் Form factor என்பது எதனைக் குறிக்கிறது?

கம்ப்யூட்டரில் Form factor என்பது, மதர்போர்ட் ஒன்றின் அம்சங்களைக் குறிக்கிறது. அதன் அளவு, பொதுவான வடிவமைப்பு, வழங்கப்படும் மின் சக்தி, பின்புறமாக அமைக்கப்படும் போர்ட் மற்றும் பிற வடிவமைப்பு சம்பந்தமான அனைத்தும் இந்த இரு சொற்கள் இணைந்து குறிக்கின்றன.

பொதுவாக இப்போது புழக்கத்தில் இருக்கும் Form factor அளவு ATX (Advanced Technology eXtended) ஆகும். இதனை 1995ல், இன்டெல் நிறுவனம் வடிவமைத்தது.

இன்னும் இதனையே பெரும்பாலான நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன. ATX போர்டுகள் அளவில் பெரியவை. நிறைய விரிவாக்க ஸ்லாட்களை அமைக்கலாம். கிராபிக்ஸ் கார்ட் மற்றும் பிற வசதிக்களுக்கான இணைப்பிற்கு இடம் அளிக்கும். microATX மற்றும் Nano/Pico ITX எனப் பிற வகை போர்டுகளும் உள்ளன.

-------------------------------
tipps

1.அடுத்தடுத்து வேகமாக டைப் செய்கையில் தொடர்ந்து இருக்கும் கீகள் இணைந்து ஜாம் ஆகி நின்றுவிடக் கூடாது என்பதால் தான், கம்ப்யூட்டர் கீ போர்டாக குவெர்ட்டி கீ போர்டு எடுத்துக் கொள்ளப்பட்டது.

2. இணைய இணைப்பின் வேகம் 8Mb/sec என்று சொன்னால், அது விநாடிக்கு 8 மெகா பிட்ஸ் என்று பொருள். மெகா பைட்ஸ் அல்ல.

3.பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றின் முதலுதவிப் பெட்டியில் எமர்ஜென்ஸி பூட் சிடி அல்லது பிளாஷ் ட்ரைவ் இருக்க வேண்டும்.

4.லேப்டாப்பின் பேட்டரி திறனை நீண்ட நாள் பாதுகாப்பாகப் பெற, திரையின் வெளிச்சத்தைக் குறைப்பது நல்லது.

5.விண்டோஸ் எக்ஸ்பியின் திரைத் தோற்றத்தில் மாற்றப்படா நிலையில் மிகப் பெரிய பச்சைப் புல்வெளி மேடும், பின்னணியில் மலையும் உள்ளதல்லவா?

இதனை விண்டோஸ் பிளிஸ் (Bliss) எனப் பெயரிட்டுள்ளது. இந்த அழகான காட்சியைப் போட்டோவாக எடுத்தவர் பெயர் சார்ல்ஸ் ஓ ரியர் (Charles O’Rear). கலிபோர்னி யாவில் சொனாமா கவுண்ட்டி என்ற இடத்தில் இந்த போட்டோ எடுக்கப்பட்டது. இதனைப் பின்னர் மைக்ரோசாப்ட் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி, தன் எக்ஸ்பி சிஸ்டத்தில் மாறா நிலையில் உள்ள டெஸ்க்டாப் இமேஜாகப் பயன்படுத்தியது.

--------------------------------

Failover:

பேக் அப் வழியில் இயங்கும் ஒரு செயல்முறை. சிஸ்டத்தின் முக்கிய சாதனங்களில் பிரச்னை ஏற்பட்டு செயல்பட முடியாமல் போனால் இரண்டாம் நிலையில் உள்ள சாதனங் கள் அந்த செயல்பாட்டினை எடுத்துச் செயல்படும் நிலை. ப்ராசசர், சர்வர், நெட்வொர்க் அல்லது டேட்டாபேஸ் ஆகியவை செயல் இழக்கையில் கூடுதல் திறன் கொண்ட கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும்.


கம்ப்யூட்டரை யார் கண்டு பிடித்தார்கள்?

இன்றைக்குக் கம்ப்யூட்டர் நமக்காக செய்திடும் வேலைகளை வைத்துப் பார்த்தால், சார்ல்ஸ் பாப்பேஜ் (Charles Babbage) என்பவர் வடிவமைத்த அனலிட்டிக்கல் இஞ்சின் என்பதனை முதல் கம்ப்யூட்டர் எனலாம். 1833 முதல் தொடங்கி 1871 வரை இதனை அவர் வடிவமைத்தார். இந்த இஞ்சினாகிய கம்ப்யூட்டர் எத்தனை பெரிது தெரியுமா? 11 அடி நீளம், 7 அடி அகலம். 8,000 க்கு மேற்பட்ட நகரும் பாகங்கள் இருந்தன. 15 டன் எடை கொண்டிருந்தது.


Windows:

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம். இன்று உலகின் பெரும்பாலான பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன் படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம். டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப் பட்டது. தொடர்ந்து இதில் பல வசதிகள் தரப்படுகின்றன. கிராபிக்ஸ் அடிப்படை யில் இதன் யூசர் இன்டர்பேஸ் அமைக்கப் பட்டிருப்பதால் பயன்படுத்த எளிதானது.

Web Browser:

(வெப் பிரவுசர்) இன்டர்நெட் பயன்பாட்டிற்கு அடிப்படைத் தேவையான இயக்கத் தொகுப்பு எனலாம். இதன் வழியே இணையத்தில் உள்ள பக்கங்களைப் பெற்று பயன் படுத்தலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், ஆப்பரா போன்ற பிரவுசர்கள் இன்று பிரபலமாய்ப் பயன்படுத்தப் படுகின்றன.

Hard Disk:

(ஹார்ட் டிஸ்க்) பைல்களைப் பதிந்து வைத்து இயக்கப் பயன்படும் ஓர் அடிப்படை சாதனம். இதில் அனைத்து வகை பைல்களையும் பதியலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் (விண்டோஸ்), அப்ளிகேஷன் சாப்ட்வேர் (எம்.எஸ். ஆபீஸ், பேஜ்மேக்கர் போன்றவை) மற்றும் இவற்றால் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தையும் இதில் பதிய லாம். இதனை முறையாகவும் கவனமாக வும் கையாள வேண்டும். இது கெட்டுப் போவதைத்தான் ஹார்ட் டிஸ்க் கரப்ட் ஆகிவிட்டதாகக் கூறுவார்கள். ஒரு முறை கெட்டுப் போனால் அதனை மீண்டும் சரி செய்வது சிரமமான காரியம். எனவே இதில் பதியப்படும் பைல்களுக்கு நகல் எடுத்து தனியே இதைப் போன்ற வேறு சாதனங்களில் பதிந்து வைப்பது நல்லது.

Registry:

(ரெஜிஸ்ட்ரி) விண்டோஸ் இயக்கத்துடன் இணைந்த ஒரு டேட்டா பேஸ் (தகவல் தளம்) இதில் அனைத்து ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் குறித்த தகவல்கள் எழுதப்பட்டு பதியப்பட்டிருக்கும். இவற்றுடன் பயன்படுத்துபவருக்கான விருப்பங்கள், செயல்பாடுகளுக்கான நிலைகள் உருவாக்கப்பட்டு பதியப்படும். விண்டோஸ் இயக்கம் இந்த தகவல் தளத்திலிருந்து தகவல்களைப் பெற்று செயல்படுவதால் சற்று கவனமாகவே இதனைக் கையாள்வது நல்லது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல