“இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் தீக்குளிப்பு மரணங்கள் நடப்பதாக செய்திகள் வெளியாகின்றன.
ஆனால், 2009-ம் ஆண்டு யுத்தம் முடிந்தபின் இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ எந்தவொரு ஈழத் தமிழரும் தீக்குளித்ததாக செய்திகள் இல்லையே… இது ஆச்சரியமாக இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார், ஐ.நா.வில் இலங்கைக்கான துணை நிரந்தர பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவிந்திர சில்வா.
தற்போது ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை செஷனில் கலந்துகொள்ள வந்திருந்த சவிந்திர சில்வா, நேற்று நியூயார்க் திரும்புகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கேட்ட கேள்விதான் மேலேயுள்ளது.
இந்த சவிந்திர சில்வா, விடுதலைப் புலிகளுடன் நடத்தப்பட்ட இறுதி யுத்தத்தின்போது, இலங்கை ராணுவத்தின் 58-வது படைப்பிரிவின் தளபதியாக இருந்தவர்.
அவர் தொடர்ந்தும் பேசுகையில், “விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தமிழகத்தில் சொல்லிக் கொள்கிறார்கள். அவரது மகன் கொல்லப்பட்ட போட்டோ என்று ஒன்றை காட்டுகிறார்கள். இந்த போட்டோ வெளியான பின்னராவது, பிரபாகரன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று யாரும் ஏன் தீக்குளிக்கவில்லை? …
இந்தியர்களை விடுங்கள். இலங்கையிலும், வெளிநாட்டிலும் வசிக்கும் எந்த ஈழத் தமிழரும் 2009-ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிந்தபின் இதற்காக தீக்குளிக்கவில்லையே? தீக்குளித்தாலும் பிரபாகரன் வரமாட்டார் என்ற நம்பிக்கையா?” என்று கேள்வி எழுப்பினார்.
“இன்று யாழ்ப்பாணத்தில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் பலர் தமது குடும்பங்களுடன் வசிக்கிறார்கள். இவர்களை மீட்டு, வாழ்வளித்திருப்பது யார் பிரபாகரனா? அவர்கள் இன்றும் உயிருடன் வாழ்வதன் அர்த்தம், கட்டுப்பாடாக நடந்துகொண்ட இலங்கை ராணுவம் அல்லவா?” என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் மீடியாவை தொடர்ந்து சந்தித்து வருகிறது இலங்கை அரசு. இப்படியான செய்திகள் அங்கே வருவது அதிகரித்துள்ளதே, அவர்கள் வெளிநாட்டு மீடியாவின் முக்கியத்தை உணர்ந்து செயல்படுவதை காட்டுகிறது.
சவிந்திர சில்வாவின் பேட்டி ஐரோப்பிய ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
அவர்கள் தரப்பில் என்ன சொல்கிறார்கள், எப்படி பிரசாரம் செய்கிறார்கள் என்பது தொடர்பாக தமிழ் மீடியாக்களில் எதுவுமே வருவதில்லை. கண்களை மூடிக்கொண்டு, “ யாவரும் நலம்” என்று இருக்கையில், அமெரிக்க தீர்மானம் உருவம் மாறுகிறது!
“எப்பிடிங்க?” என்று கேட்டால், உலக நாடுகளின் சதி என்று சொல்ல வேண்டியதுதான்!
விறுவிறுப்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக