தி.மு.க. தனது வசதி போல் நடத்தும் நாடகத்தை (தேவையானபோது வெளிவந்து விடுதல்) இந்திய நாட்டில் உள்ள தமிழர்களும், இலங்கைவாழ் மக்களும் புரிந்துகொள்ளக்கூடியவர்களே. ஆதலால் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:தி.மு.க. தனது வசதி போல் நடத்தும் நாடகத்தை (தேவையானபோது வெளிவந்து விடுதல்) இந்திய நாட்டில் உள்ள தமிழர்களும், இலங்கைவாழ் மக்களும் புரிந்துகொள்ளக்கூடியவர்களே. ஆதலால் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அவர்கள் உண்மையானவர்களாக இருந்திருப்பின் தமிழர்களுக்காக எவ்வளவோ செய்திருக்க முடியும். ஆனால் அதிகாரத்தில் இருக்கும்போது தம் குடும்ப சண்டைகளிலும், சொத்து சேகரிப்பதிலுமே குறியாக இருந்தார்கள். இப்போது கை கழுவி விடுவதும், முதலை கண்ணீர் வடிப்பதும் சரியல்ல என்று கூறியுள்ளார் ரவிசங்கர்.
இலங்கை விவகாரத்தில் தொடர்ந்து அக்கறை காட்டி வருபவர் ரவிசங்கர். இருப்பினும் இந்த விவகாரத்தில் ஒரு அரசியல் கட்சியை குறிப்பாக முக்கியக் கட்சியான திமுகவை பகிரங்கமாக அவரா சாடிப் பேசியிருப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக