தமிழகத்தில் புத்த துறவிகள் தாக்கப்பட்ட விவகாரம், இலங்கையின் சில பகுதிகளில் சீரியஸ் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை டி.வி. சேனல்களில் இது தொடர்பாக காண்பிக்கப்படும் கிளிப்பிங்ஸ், மற்றும் பயன்படுத்தப்படும் வார்த்தைகள், கோப அலைகளை ஏற்படுத்தியுள்ளன என தெரியவருகிறது.
இலங்கை புத்த துறவிகளின் அமைப்புகளில் ஒன்றான சிங்கள ராவய, கொளும்பு கொள்ளுபிட்டியவில் இருந்து ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் பல புத்த துறவிகள் கலந்துகொண்டு, கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம்வரை கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக சென்று, மகஜர் கொடுத்தனர்.
கொழும்பு கொள்ளுப்பிட்டிய பகுதியில் பல வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், மற்றும் கடைகள் இந்திய தமிழர்களுக்கு சொந்தமானவை.
சிங்கள தொழில் அதிபர் ஒருவர் தூத்துக்குடியில் இருந்து பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக, தற்போது கொழும்பு மீடியாக்களில் ஹைலைட் பண்ணப்படுகிறது.
ஏற்கனவே இந்திய வர்த்தகர்களின் கை கொழும்புவில் உயர்ந்திருப்பது தொடர்பாக சிலரிடம் மனக் கசப்புகள் இருந்தன. கொழும்பு வர்த்தகத்தின் பெரும்பகுதி, இந்தியர்களிடமும், இலங்கை முஸ்லீம்களிடமும் உள்ளன.
சமீபத்தில், புத்த துறவிகள் அமைப்புகள் முஸ்லீம் வர்த்தகர்களை குறிவைத்து போராட்டங்களை நடத்தின. ஹலால் பொருள்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று செய்யப்பட்ட போராட்டங்கள், இலங்கை முஸ்லீம் வர்த்தகர்களை குறிவைத்து நடத்தப்பட்டவையே.
இலங்கை முஸ்லீம்களை எதிர்ப்பதில் பிசியாக இருந்ததால், இந்திய தமிழர்கள்மீது கவனம் செலுத்தாமல் விட்டு வைத்திருந்தார்கள். இப்போது, அதற்கான சந்தர்ப்பம் வாய்த்துள்ளது. எந்தளவு வரை போகும் என்பது தெரியவில்லை.
இந்திய வர்த்தகர்கள், ஓரளவு பதட்டத்துடனேயே உள்ளார்கள் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் வசிக்கும் இந்தியத் தமிழர்களின் எண்ணிக்கை 16 லட்சம்! இவர்களில் பெரும்பாலானவர்கள், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து இலங்கை சென்றவர்கள்! கொழும்புவில் இந்திய தமிழர்களுக்கு சொந்தமான சொத்துக்கள், பல கோடிக்கணக்கான மதிப்பில் உள்ளன.
கடந்த தடவை (1983-ல்) கொழும்புவில் இனக்கலவரம் ஏற்பட்டபோது, எந்தெந்த கடைகள், வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட வேண்டும் என்று ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு அதை கையில் வைத்தபடியே தாக்குதல்கள் நடந்தன என்பதே, கொழும்புவில் உள்ள இந்திய தமிழர்கள் சிலருக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் எத்தனை சிங்களர்கள் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதோ, அவர்களுக்கு ஏதாவது வர்த்தகங்கள் உள்ளனவா என்பதோ சரியாக தெரியவில்லை.
பொதுவாக தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ஏதாவது நடந்தால், எதிர்க்கட்சிகள் ஆதரவாக குரல் கொடுப்பது வழக்கம். இலங்கையின் பிரதான எதிர்க்கட்சிக்கு பெயர், ஐக்கிய தேசியக் கட்சி. இவர்கள் குரல் கொடுப்பார்களா?
கடந்த மாதம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காகத் தனது மனைவி மற்றும் மகனுடன் ஆன்மீக சுற்றுலா மேற்கொண்ட இலங்கை எம்.பி. ஒருவர், வைகோ, சீமான் கட்சியின் வீர மறவர்கள் தாக்குதல் காரணமாக, துண்டைக் காணம், துணியைக் காணம் என்று தெறித்து ஓடினார் அல்லவா?
அவரது பெயர் கரு ஜயசூர்யா. இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத்தலைவர்.
இந்த கரு ஜயசூர்யா, இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நடந்தபோது, இலங்கை நாடாளுமன்றத்தில் இலங்கை ராணுவத்தை பரிகாசித்து பேசியவர். “புலிகளை பிடிக்க ராணுவம் ‘அலிமன்கடே’வுக்கு போகிறது என்கிறீர்கள். ராணுவமோ ‘பாமன்கடே’ பக்கமாக ஓடிவருகிறது” என்று பேசி இலங்கை அரசுக்கு கோபமூட்டினார் அவர்.
‘அலிமன்கடே’ என்பது, புலிகளின் கட்டுப்பாட்டில் அப்போது இருந்த ஆனையிறவு என்ற இடத்தின் சிங்கள பெயர். ‘பாமன்கடே’ என்பது, கொழும்பு புறநகரில் உள்ளது. அதாவது, இலங்கை ராணுவம் தோற்று பின்வாங்குகிறது என்று பேசிய அவரைத்தான், சீமான் படையணி, திருக்கடையூரில் இருந்து பின்வாங்கி கொழும்பு ஓட வைத்தது! ராஜதந்திரம்!!
அண்ணன் சீமான் தற்போது ஈழம் எடுக்கும் விஷயமாக ஜெனீவாவில் சென்றிருக்கிறார்.
விறுவிறுப்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக