புதன், 20 மார்ச், 2013

எம்.எஸ். பெயிண்ட் புரோகிராம்!

படங்களை வரைய, போட்டோ பைல்களைத் திறந்து பார்க்க, போட்டோ மற்றும் படங்களில் மாற்றங்கள் ஏற்படுத்த மைக்ரோசாப்ட் விண்டோஸ் சிஸ்டத்துடன் தரும் பெயிண்ட் புரோகிராம் உதவுகிறது. நம் இஷ்டப்படி, கற்பனைப்படி பெயிண்டிங், படங்களை எடிட் செய்தல் என படம் சம்பந்தமான அனைத்து வேலைகளையும் இதில் மனதிற்கு திருப்தி ஏற்படும் வகையில் மேற்கொள்ளலாம். புதிதாய் இதனைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த குறிப்புகள் தரப்படுகின்றன.

எம்.எஸ்.பெயிண்ட் என்பது இலவசமாகத் தரப்படும் கிராபிக்ஸ் புரோகிராம் ஆகும். படங்களை எடிட் செய்திட, அளவை மாற்றிட, பெரிதாக்கிப் பார்க்க, படத்தில் டெக்ஸ்ட் அமைக்க, சிறிய சிறிய அளவுகளில் விரும்பும் உருவத்தை அமைக்க, அமைத்த உருவங்களில் வண்ணத்தைப் பூசிப் பார்த்து மகிழ என படம் சம்பந்தமான எத்தனையோ வேலைகளை இதில் மேற்கொள்ளலாம். படங்களின் பார்மட்டுகளை இதன் மூலம் மாற்றவும் முடியும்.

இதனை இயக்க Start menu - All Programs - Accessories - Paint எனச் செல்லவும். பெயிண்ட் புரோகிராம் திறக்கப்பட்டவுடன் மேலாகவும் இடது புறமாகவும் மற்றும் கீழாகவும் பல டூல் பார்கள் இருப்பதனைக் காணலாம். இவை எல்லாம் படங்களைக் கையாள நாம் பயன்படுத்தலாம். இவற்றை உங்களால் பார்க்க முடியவில்லை என்றால் View மெனு சென்று Tool Box, Color Box மற்றும் Status Bar அனைத்தும் டிக் செய்யப்பட்டி ருக்கிறதான் எனப் பார்க்கவும். இல்லை என்றால் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். அனைத்து டூல் பார்களும் உங்களுக்குக் கிடைக்கும். இந்த டூல் பார்கள் எதற்கு என்று தெரிய வேண்டும் என்றால் அந்த ஐகானில் மவுஸின் கர்சரை சிறிது நேரம் வைத்தால் அதன் வேலை என்ன என்று காட்டப்படும்.

அடுத்து ஒரு புதிய படம் ஒன்றை எப்படி வரைவது எனப் பார்ப்போம். File > New என்பதைக் கிளிக் செய்திடவும். படம் வரைவதற்கான கேன்வாஸ் அகலம் நீளம் உங்களுக்கு போதாது என்று எண்ணுகிறீர்களா? Image > Attributes செல்லவும். இதில் உங்கள் கேன்வாஸின் அளவை நீட்டிக்கலாம்; சுருக்க லாம். கீழேயிருக்கும் கலர் பாக்ஸில் ஏதேனும் ஒரு கலரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இனி நீங்கள் படம் ஒன்றை வரையலாம்.

இடது பக்கம் இருக்கும் டூல் பாக்ஸ் உங்களுக்கு படம் வரைய அனைத்து வகைகளிலும் உதவும். எடுத்துக்காட்டாக உங்கள் படத்தில் சிறிய செவ்வகக் கட்டம் வேண்டுமா? Rectangle tool என்னும் டூலைத் தேர்ந்தெடுத்து கேன்வாஸில் மவுஸால் இழுத்தால் ஒரு செவ்வகக் கட்டம் கிடைக்கும். இது நீங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்த கலரில் கிடைக்கும். இனி இன்னொரு வண்ணத்தைத் தேர்ந்தெடுத்து பின் Fill With Colour பட்டனைத் தேர்ந்தெடுங்கள். இனி நீங்கள் ஏற்கனவே வரைந்த கட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் மவுஸால் கிளிக் செய்திடுங்கள். தேர்ந்தெடுத்த வண்ணத்தால் கட்டம் நிறைவடையும். இதே போல இடது பக்கம் உள்ள டூல் பாக்ஸில் கிடைக்கும் கோடு, வளை கோடு, வளைவு உள்ள செவ்வகம் என அனைத்து டூல்களையும் பரிசோதித்து பார்த்து தேவையான சாதனத்தைப் பயன்படுத்தி படம் வரையுங்கள். தவறாக ஏதேனும் செய்துவிட்டால் எரேசர் என்னும் அழி ரப்பர் படத்தை ஒரு முறை கிளிக் செய்துவிட்டு நீக்க வேண்டியதை நீக்கி விடலாம். அப்படியா! என்று ஆச்சரியப் படாதீர்கள். செய்து பாருங்கள்.

படம் வரைந்தாயிற்றா! இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட இடம் மட்டும் நன்றாக வந்திருக்கிறது என்று அபிப்பிராயப்படுகிறீர்களா! அதனை மட்டும் காப்பி செய்து இன்னொரு கேன்வாஸ் திறந்து ஒரு படமாக அமைக்கலாம்.

ஏற்கனவே உள்ள படத்தை எப்படி திருத்துவது? போட்டோக்கள், படங்கள் என ஏற்கனவே உருவான படங்களை இந்த புரோகிராமைப் பயன்படுத்தி திருத்தலாம். ஒருவரின் தலைமுடியை நரைத்த முடியாக மாற்றலாம். அவருக்கு கண்ணாடி மாட்டலாம். மீசை வைக்கலாம். இதுபோல வேடிக்கையான செயல்களையும், பொறுப்பான செயல்களையும் இதில் மேற்கொள்ளலாம். ஏற்கனவே உள்ள பட பைலை இதில் திறக்க File - Open என்ற மெனு மூலம் அந்த படம் உள்ள டைரக்டரி சென்று பட பைலின் பெயர் மீது கிளிக் செய்து இங்கு திறக்கலாம். ஏற்கனவே உள்ள கேன்வாஸில் ஒரு படத்தை அமைக்க Edit - Paste From என்ற மெனு மூலம் மேற்கொள்ளலாம். படத்தின் அமைப்பை மாற்ற Image - Stretch/Skew என்பதைப் பயன்படுத்தலாம். Image மெனுவில் Flip/Rotate பயன்படுத்தி படங்களைச் சுழட்டலாம்.

உங்களின் விருப்பப்படி படத்தை அமைத்து விட்டீர்களா? சேவ் கட்டளை மூலம் படத்தை சேவ் செய்திடுங்கள். சேவ் செய்திடுகையில் படத்தை எந்த பார்மட்டில் சேவ் செய்திட வேண்டும் என்பதனை முடிவு செய்து அந்த பார்மட்டைத் (.BMP, .JPEG, அல்லது .GIF) தேர்ந்தெடுத்து சேவ் செய்திடுங்கள். பின் இதனை பிரிண்ட் செய்திட வேண்டுமென்றால் வழக்கம்போல் பிரிண்ட் செய்திடலாம். அதற்கு முன் பிரிண்ட் பிரிவியூ மூலம் படம் எப்படி அச்சில் கிடைக்கும் என்பதனையும் பார்த்துக் கொள்ளலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல