திங்கள், 25 மார்ச், 2013

இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள்


இந்த ஆண்டில் நமக்கு உறுதியாகத் தொடர்ந்து கிடைக்க இருக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் குறித்து இங்கு காணலாம்.


1. அவாஸ்ட்:

அண்மைக் காலங்களில் அவாஸ்ட் (avast!) ஆண்ட்டி வைரஸ், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடையே பிரபலமாகி வருகிறது. CNET நிறுவனத்தின் டவுண்லோட் தளத்தில், அவாஸ்ட் இலவச புரோகிராம் அதிக எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது. இலவசமாகக் கிடைக்கும், ஏவிஜி மற்றும் அவிரா ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் இது டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது. இலவச பதிப்பு தரும் வசதிகளில், SafeZone, Firewall மற்றும் Antispam தவிர அனைத்து வசதிகளும் இதில் கிடைக்கின்றன என்பதால், மக்கள் இதனை விரும்புகின்றனர். வைரஸ் புரோகிராம்களைத் தடுப்பது மட்டுமின்றி, இதன் செயல்பாட்டிற்கு மிகக் குறைந்த அளவே ராம் மெமரியை அவாஸ்ட் பயன்படுத்துகிறது. மேலும் பல கூடுதல் வசதிகள் (auto sandbox, boottime scan, remote assistance, nonannoying browser protection plugins, 8 different realtime shields and cloud reputation) இதில் தரப்பட்டுள்ளன. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.avast.com/freeantivirusdownload

2. ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் (avg antivirus):

பல ஆண்டுகளாக, இலவச ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு பயன்பாட்டில், ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு தான் முதல் இடத்தில் இருந்தது. வைரஸ், கெடுதல் விளைவிக்கும் மின்னஞ்சல்கள், இணைய வழி வரும் வைரஸ் தாக்குதல்கள் மற்றும் தனிநபர் தகவல் திருட்டு ஆகியவற்றிற்கு எதிராக பாதுகாப்பு தருவதில் சிறப்பாக இயங்குகிறது ஏவிஜி ஆண்ட்டி வைரஸ். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், அதன் யூசர் இன்டர்பேஸ் தளத்திற்கு ஏற்ற வகையில், இந்த இலவச ஆண்ட்டி வைரஸ் கிடைக்கிறது.

ஆனால், இதனை இன்ஸ்டால் செய்வது தான் சற்று சுற்றி வரும் வழியாக உள்ளது. முதலில் 4 எம்பி அளவிலான இன்ஸ்டலேஷன் புரோகிராம் ஒன்றை டவுண்லோட் செய்திட வேண்டும். அடுத்து 60 எம்பி அளவிலான வைரஸ் குறிப்புகளுக்கான குறியீடுகள் அடங்கிய பைலை டவுண்லோட் செய்திட வேண்டும். பின்னர் இவற்றை இன்ஸ்டால் செய்திட வேண்டும். தனித்தனியாக இல்லாமல், மொத்தமாக செட் அப் செய்திடவும் ஒரு எக்ஸ்கியூட்டபிள் பைல் தரப்படுகிறது. இதனை இன்ஸ்டால் செய்திடுகையில் பல டூல் பார்கள், மாறா நிலையில் இன்ஸ்டால் செய்யப்படும். இதற்கான கேள்விகள் வருவதனைப் பார்த்து, உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுப்பது நல்லது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://free.avg.com/inen/downloadfreeantivirus

3. ஆட் அவேர் ஆண்ட்டி வைரஸ் (AdAware Free Antivirus+):

ஒரு முழுமையான வைரஸ் எதிர்ப்பு புரோகிராமாக இது வளர்ச்சி பெற்றுள்ளது. அதனாலேயே, தற்போது மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. ஆனால், கட்டணம் செலுத்திப் பெறும் புரோகிராமில் உள்ள சில மேம்படுத்தப்பட்ட வசதிகள் இதில் இல்லை என்பது வருத்தம் தரும் தகவலாகும். இதனைப் பெற செல்ல வேண்டிய முகவரி: http://www.lavasoft.com/products/ad_aware_free.php

4. அவிரா (Avira):

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குள், எந்த வழியில் நுழைந்தாலும், அந்த கெடுதல் புரோகிராமினைக் கண்டறிவதில், இது சிறந்த புரோகிராமாகக் கருதப்படுகிறது. இதனை இன்ஸ்டால் செய்தவுடன், இயக்கவும், நிறுத்தவுமான பட்டன் மட்டுமே காட்டப்படுகிறது. இதனை இன்ஸ்டால் செய்தால், பிரவுசரின் மாறா நிலை தேடல் சாதனம் ASK.com என்பதாக மாற்றப்படுகிறது. தினந்தோறும் இதனை அப்டேட் செய்திடுமாறு கிடைக்கும் பாப் அப் செய்தி பலருக்கு எரிச்சலாக உள்ளது. ஓராண்டுக்கு முன்னர் இது முதல் இடத்தில் இருந்தது. ஆனால், மேற்கூறப்பட்ட காரணங்களினால், தற்போது நான்காம் இடத்திற்கு வந்துள்ளது. இதனைப் பெற http://www.avira. com/en/avirafreeantivirus என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

5. ஸோன் அலார்ம் இலவச ஆண்ட்டி வைரஸ் மற்றும் பயர்வால்:

வைரஸ் தடுப்பிற்கென இலவசமாக பயர்வால் தந்து வந்த ஸோன் அலார்ம், தற்போது முழுமையான ஆண்ட்டி வைரஸ் செயல்பாட்டினையும் கொண்டுள்ளது. இதற்கான வைரஸ் தடுப்பு தொழில் நுட்பத்தினை காஸ்பெர்ஸ்கி வழங்கியுள்ளது. பொதுவாக, அனைத்து இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களும், குறிபிட்ட அளவில் தான் பாதுகாப்பு வசதிகளை வழங்கும். கட்டணம் செலுத்தினால்தான், முழுமையான பாதுகாப்பு கிடைக்கும். ஆனால், ஸோன் அலார்ம் முழுமையான வைரஸ் பாதுகாப்பினை வழங்குகிறது. இதன் யூசர் இன்டர்பேஸ் மிக மிக எளிதானதாக உள்ளது. இதற்கு பாஸ்வேர்ட் கொடுத்தும் செட் செய்திடலாம். http://www.zonealarm.com/security/en-us/zonealarm-free-antivirus-firewall.htm என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனைப் பெறலாம்.

6. மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் (Microsoft Security Essentials):

மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, அதன் விண்டோஸ் இயக்கத்தினைக் கட்டணம் செலுத்திப் பெறுபவர்களுக்கு மட்டுமே இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இலவசமாகக் கிடைக்கிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாகவே, கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை ஸ்கேன் செய்திடும் வசதி இதில் கிடைக்கிறது. அதுவும், கம்ப்யூட்டரில் எந்த வேலையும் மேற்கொள்ளாத போது இது கிடைக்கிறது. இதில் ஸ்கேன் மேற்கொள்ளப்பட வேண்டாம் என என்னும் பைல்களுக்கு விலக்கு அளிக்கும் வசதியும் உள்ளது. விண்டோஸ் 8 சிஸ்டத்திலும் இது தரப்படுகிறது. ஆனால், இதன் பெயர் அங்கு Windows Defender என உள்ளது. மைக்ரோசாப்ட் தரும் இந்த வைரஸ் எதிர்ப்பு புரோகிராம், அனைத்து வைரஸ்களுக்கும் எதிராகப் போராடும் என உறுதியாக நம்ப முடியாது. எனவே வேறு ஏதேனும் ஒரு ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினையும் வைத்து செயல்படுத்துவது நல்லது.

7. பண்டா க்ளவுட் ஆண்ட்டி வைரஸ் (Panda Cloud Antivirus):

வழக்கமான ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளிலிருந்து மாறுபட்டு, க்ளவுட் கம்ப்யூட்டிங் முறையில் செயல்படுவோருக்காகவும் பாதுகாப்பு தரும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பாக முதலில் வந்தது இந்த தொகுப்பு. இலவசமாகவே இது கிடைக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்கையில் சற்று கவனத்துடன் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். கம்ப்யூட்டரில் உள்ள தேடல் சாதனம் மற்றும் ஹோம் பேஜ் ஆகியவற்றை இது மாற்றுகிறது. மேலும், டூல்பார்களையும் பதிக்கிறது. க்ளவுட் கம்ப்யூட்டிங் முறையில் செயல்படுபவர்களுக்கு இது தேவை. முழுமையான மற்ற வகை பாதுகாப்பிற்கு வேறு ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைப் பயன்படுத்தலாம். http://www.cloudantivirus.com/en/ என்ற முகவரியில் இது கிடைக்கிறது.

8. ரைசிங் ஆண்ட்டி வைரஸ் (Rising Antivirus):

இது ஒரு சீன நாட்டு தயாரிப்பு. முதலில் சீன மொழியில் மட்டுமே கிடைத்து வந்த இந்த இலவச தொகுப்பு, தற்போது ஆங்கில மொழியிலும் கிடைக்கிறது. கட்டணம் செலுத்திப் பெறும் இதன் பதிப்பில் கிடைக்கும் பெரும்பாலான வசதிகள் இதிலும் கிடைக்கின்றன. பன்னாட்டு தொகுப்பு www.risingglobal.com என்ற முகவரியில் கிடைக்கிறது. ஆனால், இன்னும் 2011 ஆம் ஆண்டு தொகுப்பு தான் வழங்கப்படுகிறது. இதன் சீன தளத்திற்குச் (http://www.rising-global.com/) சென்றால், V16 2012 என்ற அண்மைக் காலத்திய பதிப்பு கிடைக்கிறது. இருப்பினும், ஆங்கில வழி புரோகிராமின் வைரஸ் டெபனிஷன் குறியீடுகள் தொடர்ந்து அப்டேட் செய்யப்படுவதால், அதுவும் மேம்படுத்தப்பட்ட தொகுப்பாகவே இயங்குகிறது. இன்னும் பல இலவச ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் பயன்படுத்த கிடைக்கின்றன. அவற்றின் பெயர்களையும், கிடைக்கும் தள முகவரிகளையும், ஒரு சில சிறப்புகளையும் இங்கு காணத் தருகிறேன்.

9. கிங்சாப்ட் ஆண்ட்டி வைரஸ் (Kingsoft Antivirus):

கடந்த 11 ஆண்டுகளாக இந்த சீன நிறுவனம் இயங்கி வருகிறது. வேறுபட்ட பல வசதிகளை இது தருகிறது. தள முகவரி: http://en.softonic.com/s/free-kingsoft-antivirus-2011-download

10: போர்ட்டி கிளையண்ட் (FortiClient):

நெட்வொர்க் செக்யூரிட்டி நிறுவனமான Fortinet வழங்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம். 11 வகை செயல்பாடுகளை இது தருகிறது. தள முகவரி: http://www.forticlient.com/

11. அன்த்ரெட் (UnThreat):

ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் பிரிவில், 2011 முதல் செயல்படும் நிறுவனத்தின் தொகுப்பு. இன்ஸ்டலேஷன் செய்திட 100 எம்பி அளவிலான பைல்கள் தேவை. கிடைக்கும் தளம்: http://www.unthreat.com/free-antivirus

12. கொமடோ ஆண்ட்டி வைரஸ் (Comodo Antivirus):

ஆண்ட்டி வைரஸ் மற்றும் டிபன்ஸ் என இரு பிரிவுகளில் செயல்படுகிறது. புதிய வைரஸ்கள் வந்தாலும் அவற்றை வடிகட்டி எதிர்கொள்ளும் தொழில் நுட்பம் கொண்டுள்ளது. பெறுவதற்கு http://www.comodo.com/home/internet-security/antivirus.php என்ற முகவரிக்குச் செல்லவும்.

13. நானோ ஆண்ட்டி வைரஸ் (NANO AntiVirus)

ரஷ்யாவிலிருந்து கிடைக்கும் தொகுப்பு. தற்போது சோதனைத் தொகுப்பு மட்டுமே இலவசமாகக் கிடைக்கிறது. மிக எளிமையான யூசர் இன்டர்பேஸ் உள்ளது. தள முகவரி: http://www.softpedia.com/get/Antivirus/NANO-AntiVirus.shtml
இன்னும் பல இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களும் இணையத்தில் கிடைக்கின்றன. இவை தொடர்ந்து அதே திறனுடன் இயங்குமா என்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளன. இருப்பினும், இவை குறித்த ஆய்வு குறிப்புகளைப் படித்துப் பார்த்து பயன்படுத்தலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல