எந்த பைலையும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் திறந்து படிக்கலாம் . ஒரு பைலை அதன் புரோகிராம் மூலம் திறப்பதற்கான நேரத்தைக் காட்டிலும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் குறைவான நேரத்தில் திறந்துவிடலாம்.
குறிப்பாக படங்கள் கொண்ட பைல்களை இந்த வகையில் விரைவாகத் திறக்கலாம்.
மேலும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வெகு விரைவில் கம்ப்யூட்டரில் லோட் ஆகும்.
ஆனால் படங்களைத் திறக்கும் பிக்சர் மேனேஜர், அடோப் போட்டோ ஷாப் போன்ற அப்ளிகேஷன் புரோகிராம்கள் திறந்து இயங்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.
பைலை இதில் திறக்க என்ன செய்ய வேண்டும்? அந்த பைலை அப்படியே மவுஸால் இழுத்து வந்து இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விண்டோவில் போட்டுவிட வேண்டியதுதான்.
பட பைல்கள் மட்டுமின்றி டெக்ஸ்ட் பைல்களையும் இது திறக்கும். அவுட்லுக் இமெயில்கள், ஏன் எம்.எஸ்.ஆபீஸ் டாகு மெண்ட்களையும் இது திறக்கும்.
ஆனால் இதற்கு மட்டும் அந்த கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் பதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இது போதாதா? சரி, அப்படியானால் ஒரு போல்டர் முழுவதையும் அப்படியே இழுத்துவந்து இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விண்டோவில் போடவும். அனைத்து பைல்களும் காட்டப்படும். பின் திறக்கப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக