மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்காடு பகுதியில் பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்து கொலைசெய்து புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வவுணதீவு, நாவற்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணின் கணவர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் தவறான உறவின் காரணமாக குறித்த சிசு உருவாகிய நிலையில் நேற்று இரவு குறித்த சிசு பிறந்த போது அதனை மண்ணில் புதைத்துள்ளார்.
இது தொடர்பில் வவுணதீவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சென்ற பொலிஸார் குறித்த சிசுவின் தாயாரை கைது செய்துள்ளதுடன் சிசுவின் சடலத்தையும் மீட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களில் இவ்வாறான ஏழு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவங்களில் அதிகமான சம்பவங்கள் கணவன் பிரிந்து சென்றுள்ள நிலையில் இடம்பெற்றுள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக