திங்கள், 18 மார்ச், 2013

கேப்சா (CAPTCHA) டெஸ்ட் என்று சொல்லப்படுவது எது?

கேப்சா என்பதன் விரிவாக்கம் Completely Automated Public Turing test to tell Computers and Humans Apartஆகும். இணையத் தொடர்பில், பின்னூட்டங்களைப் பெறுகையில், கம்ப்யூட்டருக்கும் மனிதனுக்கும் இடையே வேறுபாட்டினைக் காண இந்த சோதனை நடத்தப்படுகிறது. ஏனென்றால், ஆன்லைனில், கம்ப்யூட்டரே சில கேள்விகளுக்குப் பதில் அளித்து, பாஸ்வேர்ட், யூசர் நேம் போன்றவற்றை வழங்கும் வகையில் புரோகிராம் அமைக்க முடியும் என்பதால், மனிதர்கள் மட்டுமே பதில்களைத் தரும் வகையில் இந்த சோதனை தரப்படுகிறது. எழுத்துக்கள் மற்றும் எண்கள், பல கோணங்களில் சரியான உருவமற்று இருப்பது போல இவை அமைக்கப்பட்டு காட்டப்பட்டு, அவற்றை உள்ளீடு செய்திடுமாறு செய்வதே கேப்சா சோதனை. இதனை ஒரு கம்ப்யூட்டர் படிக்க முடியாமல் செய்திட எந்த அளவிற்கு முடியுமோ, அந்த அளவிற்கு அமைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


நெட்டிகெட் (Netiquette) என்பது இணையத்தில் எதனைக் குறிக்கிறது?

Internet மற்றும் Etiquette என்ற இரு சொற்களின் இணைவே இந்த சொல். கம்ப்யூட்டர், இணையம்,மின்னஞ்சல்கள் ஆகியவற்றில் கடைப்பிடிக்க வேண்டிய தனி மனித ஒழுக்கத்தினை இந்த சொல் குறிக்கிறது. எப்படி ஓரிடத்திற்குச் செல்கையில் முறையாக உடை உடுத்திச் செல்ல வேண்டும், முறையாகப் பேச வேண்டும், பேச்சில் நாகரிகம் இருக்க வேண்டும் என எண்ணுகிறோமோ, அதே போல, இணையத்தில் நாம் நடந்து கொள்ள வேண்டும். நம் மெயில்கள், இன்டர் நெட் பரிமாற்றங்களில் இவை எதிர்பார்க்கப் படுகின்றன. இந்த வரைமுறைகளை, உலகளாவிய இன்டர்நெட் அமைப்பு, 1995ல் வடிவமைத்தது. http://tools.ietf.org/html/rfc1855 என்ற முகவரியில் உள்ள தளத்தில், மேற்கொண்டு தகவல்களைக் காணலாம்.


எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு போல வேறு தொகுப்புகள்

ஆபீஸ் தொகுப்புகளுக்கு இணையாக இணையத்தில் நிறைய தொகுப்புகள் கிடைக் கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு பட்டியலிடுகிறேன்.

கூகுள் டாக்ஸ் (google docs) – இதனை
http://www.google.com/என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம். க்ளவ்ட் கம்ப்யூட்டிங் என்ற முறையில் இயக்கலாம். வேர்ட் டாகுமெண்ட்ஸ், ஸ்ப்ரெட்ஷீட், பிரசன் டேஷன் மற்றும் படங்களை உருவாக்கலாம். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு அளவிற்கு வளமானதாக அனைத்து வசதிகளும் இருக்காது. ஆபீஸ் டாகுமெண்ட்களை இதில் எடிட் செய்திடலாம்.

அடுத்தது லிப்ரே ஆபீஸ் (libreoffice). இதனை http://www.libreoffice.org/#0 என்ற முகவரியில் காணலாம். மேலே சொன்ன அனைத்து வகை பைல்களை உருவாக்கலாம். டேட்டா பேஸ் அப்ளிகேஷனும் உள்ளது.

மூன்றாவதாக, கிங்சாப்ட் ஆபீஸ் சூட் ப்ரீ 2012 (Kingsoft Office Free 2012). இந்த தொகுப்பு http://www.kingsoftstore.de/writer.html என்ற முகவரியில் கிடைக்கிறது. ஆபீஸ் 2010 போலவே இது செயல்படும். வழக்கமான பைல் பார்மட்களுடன், RTF, TXT, and HTML போன்ற பார்மட்களையும் இது சப்போர்ட் செய்கிறது.

அடுத்ததாக அபாச்சி ஓப்பன் ஆபீஸ் (Apache openoffice). இதனைப் பெற http://www.openoffice.org என்ற முகவரியில் உள்ள இணையதளம் செல்ல வேண்டும். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு போலவே செயல்படும் தொகுப்பு இது. அனைத்து வகை பைல்களையும் உருவாக் கலாம். இறுதியாக, மைக்ரோசாப்ட் தரும் இலவச ஆன்லைன் ஆபீஸ் தொகுப்பினையும் கூறலாம்.
http://office.microsoft.com/enus/webapps/ என்ற தளத்தில் இதனைப் பெறலாம். Microsoft Office Web Apps என இது அழைக்கப்படுகிறது. இதனை இலவசமாகப் பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்துபவர்களுக்கு, ஸ்கை ட்ரைவில் 7 ஜிபி இலவச இடம் தரப்படுகிறது. Word, Excel, PowerPoint, and OneNote ஆகிய பைல்களை இதிலும் உருவாக்கலாம். ஆபீஸ் 2010, 2013 அளவிற்கு நுணுக்கமான வசதிகள் இல்லை என்றாலும், அடிப்படை வசதிகளுடன் இந்த தொகுப்பு இயங்குகிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல