தெலுங்கு ஸ்டார் வெங்கடேஷிற்கும்,அஞ்சலிக்கும் இடையில் துளிர்த்த நட்பு அண்மைக்காலமாக பலரும் பொறாமைப்படும் அளவிற்கு வளர்ந்து விட்டது.அஞ்சலி சம்பாதித்த பணத்தை வைத்து செல்வம் கொழித்துக் கொண்டிருக்கும் அந்த இயக்குனரைப் பார்த்து,"அவருக்கு வாய்த்தது போல் ஒரு கதாநாயகி எல்லாருக்கும் வாய்த்து விட்டால் எத்தனை முறை தோற்றாலும் படம் எடுத்துக் கொண்டே இருக்கலாமே" என்கிறது தமிழ சினிமா உலகம்.தெலுங்கிலோ, "அஞ்சலிக்கு வாய்த்தது போல் ஒரு கொடை வள்ளல் சூப்பர் ஸ்டார் கிடைத்துவிட்டால் எத்தனை படத்தில் தோற்றாலும் ஜெயித்துக் கொண்டே இருக்கலாம்" என்று பொறாமைப்படுகிறார்கள்.
அஞ்சலிக்கு வீட்டுக்குள் பிரச்னை இருக்கிறது,என்றைக்கு இருந்தாலும் அவர் வெளியில் வர வேண்டி இருக்கும் என் பது வெங்கடேஷிற்கு தெரியும்.அப்படியொரு சூழல் வந்தால் அந்தப் பெண் எங்குபோய் நிற்கும்? அதற்காகவே ஹைதராபாத்தில் தன்னுடைய ஏற்பாட்டில் அஞ்சலிக்கு அழகான பங்களா ஒன்றை வாங்கித் தந்தார். இத்தனையையும் ஏன் திரைமறைவில் செய்ய வேண்டும்.அதற்கு காரணம் வெங்கடேஷின் அப்பா பிரபல தயாரிப்பாளர் ராம நாயுடு என்கிறார்கள்.அஞ்சலிக்கும் தனக்கும் உள்ள நெருக்கம் அப்பாவுக்கு தெரிந்தால் அது பெரும் பிரச்னையாகி விடும் என்று பயந்தாராம் வெங்கடேஷ்.
அதனாலேயே இந்த நிமிடம் வரை அவர் அஞ்சலிக்கு ஆதரவாக நேரடியாக களத்திற்கு வரவில்லை. ஆனால்,அங்கிருந்தபடியே அஞ்சலியின் சித்தி பாரதி தேவிக்கு தனது சினிமா உலக நண்பர்கள் மூலம் பிரஷர் கொடுத்தார் வெங்கடேஷ்."அஞ்சலிக்கு தொல்லை கொடுப்பதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் உங்களைப் பற்றிய விஷயங்களை அஞ்சலி வாயால் சொல்ல வைப்போம்" என்று வெங்கடேஷ் தரப்பிலிருந்தும், தெலுங்கு சினிமா உலக பிரபலங்களிடம் இருந்தும் மிரட்டல் தொனியில் எச்சரிக்கைகள் வந்ததாம்.
இதையடுத்துத்தான்,"இனிமேல் எனக்கும் அஞ்சலிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவள் சம்பந்தப்பட்ட விஷ யங்களை அவளது அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டேன்" என்று அவசரமாய் வந்து அறிக்கை விட்டார் பாரதி தேவி.ஆனால், அஞ்சலிக்காக தெலுங்கு பட உலகம் மிரட்டல் தொனியில் பேசியதை களஞ்சியத்தால் தாங்கிகொள்ள முடியவில்லை."அடுத்த வேளை சாப்பாட்டிற்கு கூட இல்லாமல் தெலுங்கிலிருந்து வருகிறார்கள்.இங்கு வந்து நடித்து தமிழனின் காசில் பெரிய ஆளாய் ஆனதும் வளர்த்துவிட்ட இயக்குனர்கள் மீதே அவதூறு பரப்புகிறார்கள்" என்று பாய்ந்தார்.
அஞ்சலிக்கு ஆதரவாக தெலுங்கு சினிமா உலகம் வருவது போல் தனக்கு ஆதரவாக தமிழ் சினிமா உலகம் வரவேண் டும் என்று எதிர்பார்த்தார் களஞ்சியம்.இதற்காக தமிழ் இயக்குனர்கள் சிலரிடம் ஆதரவும் கேட்டார்.ஆனால், ஏனோ தெரியவில்லை களஞ்சியத்திற்கு ஆதரவாக யாரும் களத்திற்கு வரவில்ல.அஞ்சலிக்கு வீட்டிற்குள் தொடங் கிய பிரச்னை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.இப்போது,அஞ்சலிக்கு பின்னால் வெங்கடேஷ் இருக்கும் விஷயம் ராமநாயுடு தரப்பிற்கு தெரிந்து விட்டதாக சொல்கிறார்கள்.ஆக,இதுவரை அந்நிய மண்ணில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அஞ்சலி, இனி சொந்த மண்ணில் சோதனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கலாம்.
இப்போதைக்கு அஞ்சலியிடமிருந்து விடை பெறுவோம்...
Vikatan
அஞ்சலியின் மறுபக்கம் - மினி சினி தொடர் : பகுதி 1
அஞ்சலியின் மறுபக்கம் - மினி சினி தொடர் : பகுதி 2
அஞ்சலியின் மறுபக்கம் - மினி சினி தொடர் : பகுதி 3
அஞ்சலியின் மறுபக்கம் - மினி சினி தொடர் : பகுதி 4
அஞ்சலியின் மறுபக்கம் - மினி சினி தொடர் : பகுதி 5

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக