சனி, 27 ஏப்ரல், 2013

விண்டோஸ் 8 இணைந்து வரும் இயக்கங்கள்

விண்டோஸ் 8 சிஸ்டத்தின் புதிய இடைமுகத்துடன் சில அப்ளிகேஷன் புரோகிராம்கள் இணைந்தே தரப்படுகின்றன. விண்டோஸ் ஸ்டோர் அணுகி, ஆயிரக்கணக்கில் நமக்குத் தேவையான அப்ளிகேஷன் புரோகிராம்களை,பெரும்பாலும் இலவசமாகவே பெற்றுக் கொள்ளலாம். இங்கு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து தரப்படும் இருபது அப்ளிகேஷன்கள் குறித்து காணலாம்.


1. ஸ்டோர்:

விண்டோஸ் ஸ்டோர் அணுகி நாம் பல புதிய அப்ளிகேஷன்களைப் பெற்றுக் கொள்ளலாம். இது ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே போலவே இயங்குகிறது. இதில் சர்ச் மூலம் நமக்குத் தேவையான அப்ளிகேஷனைத் தேடி, இன்ஸ்டால் பட்டனை அழுத்துவதன் மூலம் அதனை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். சில அப்ளிகேஷன்கள், அவை வைக்கப்பட்டிருக்கும் இணைய தளங்களில் இருந்து தான் பெற முடியும். தளத்திற்கு இணைப்பு பெற்று, டவுண்லோட் செய்து, பின்னர் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

2. இன்டர்நெட் எக்ஸ்புளோரர்:

விண்டோஸ் 8 சிஸ்டத்தின் மாறா நிலையில் தரப்படும் பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10. முன்னர் வந்த பிரவுசர்களைக் காட்டிலும் இது, கூடுதல் வேகத்தில் இயங்குகிறது. தொடுதலில் இதனை இயக்கலாம். இதில் ஆட் ஆன் மற்றும் பிளக் இன் புரோகிராம்களைப் பெற்று இயக்க முடியாது. சில இணைய தளங்களில் மட்டும் பிளாஷ் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.


3. மெயில், காலண்டர், மக்கள் மற்றும் செய்தி அனுப்புதல்:

விண் 8 சிஸ்டத்தில் Mail, Calendar, People மற்றும் Messaging ஆகிய அனைத்தும் ஒன்றுக் கொன்று இணைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் விண்டோஸ் ஸ்டோரில் கிடைக்கிறது. இவற்றில் ஒரு அப்ளிகேஷனில் ஒரு அக்கவுண்ட்டினை இணைத்தால், அது மற்றவற்றிலும் கிடைக்கும். இதில் கிடைக்கும் மெயில் அப்ளிகேஷன், நமக்கு வரும் மின்னஞ்சல்களைப் பெறுவதற்கான வசதியை மட்டும் தருகிறது. இங்கு ஹாட்மெயில், அவுட்லுக் அல்லது ஜிமெயில் அக்கவுண்ட்களை இணைத்துக் கொள்ளலாம். IMAP, POP, or Exchange ActiveSync (EAS) போன்ற எதனையும் இணைக்கும் ஆப்ஷனையும் கொண்டுள்ளதால், எந்த மெயில் அக்கவுண்ட்டினையும் இணைக்கலாம். காலண்டர் அப்ளிகேஷன், இணைய தள சேவைகள் தரும் காலண்டர்களைக் காட்டுகிறது. ஹாட்மெயில், அவுட்லுக் மற்றும் கூகுள் காலண்டர்களை இணைக்கிறது. People அப்ளிகேஷன் ஒரே இடத்தில் உங்கள் காண்டாக்ட் அனைத்தையும் தருகிறது. ஹாட்மெயில், அவுட்லுக் மற்றும் கூகுள் அக்கவுண்ட்ஸ் மட்டுமின்றி, பேஸ்புக், ட்விட்டர் மற்றும் லிங்க்ட் இன் தொடர்புகளையும் இணைக்கிறது. Messaging அப்ளிகேஷன் நம்முடைய நண்பர்களுடன் தொடர்பு கொள்ள உதவுகிறது. விண்டோஸ் லைவ் மெசஞ்சர் மற்றும் பேஸ்புக் சேட் ஆகியவற்றையும் சப்போர்ட் செய்கிறது. ஆனால், இதில் மற்ற பிரபலமான கூகுள் டாக் போன்றவைகளுக்கு சப்போர்ட் இல்லை.

4. சீதோஷ்ண நிலை (Weather):

இந்த அப்ளிகேஷன், கம்ப்யூட்டர் இயங்கும் இடத்தின் சீதோஷ்ண நிலையைக் காட்டுகிறது. இத்துடன் மற்ற இடங்களுக்கான சீதோஷ்ண நிலையைக் காட்டும்படியும், செட் செய்திடலாம். இதற்குள்ளாகச் சென்று, ஒவ்வொரு மணி நேரத்திற்குமான, சீதோஷ்ண நிலை, வர இருக்கின்ற நிலைக்கான முன்னறிவிப்பு ஆகியவற்றையும் பெறலாம்.

5. செய்தி, நிதி மற்றும் விளையாட்டு (News, Finance, மற்றும் Sports):

மைக்ரோசாப்ட் Bing தளத்திலிருந்து தகவல்கலைப் பெற்று இந்த அப்ளிகேஷன் இயங்குகிறது. News அப்ளிகேஷன் அண்மைச் செய்திகளை, விரல் தொடுதலில் தருகிறது. மாறா நிலையில் “Bing Daily” என்னும் செய்தியைக் கொடுக்கிறது. மற்ற BBC, New York Times, மற்றும் Wall Street Journal போன்ற செய்தி சேனல்களுக்கும் இதில் செட் செய்திடலாம். Finance அப்ளிகேஷன் சந்தை நிலவரத்திற்கேற்ப தகவல்களையும் வரை படங்களையும் தருகிறது. நாம் விரும்பும் பங்குகள் குறித்த தகவல்களை மட்டும் காணும்படி இதனை செட் செய்திடலாம். Sportsஅப்ளிகேஷன், விளையாட்டுத் துறை சம்பந்தமான அண்மைத் தகவல்கள், நடக்க இருக்கின்ற போட்டிகள், நடந்த போட்டிகளின் முடிவுகள் ஆகியவற்றைத் தருகிறது.

6.ட்ராவல் (Travel):

Bing Travel அப்ளிகேஷன் மூலம் நாம் சுற்றுலா செல்லக் கூடிய இடங்கள் குறித்த தகவல்களை அறியலாம். குறிப்பிட்ட இடம் குறித்த தகவல்கள், பயணிக்க வசதிகள், அங்கு இயங்கும் விடுதிகள் போன்றவற்றை அறியலாம்.


7. புகைப்படங்கள் (Photos):

பல்வேறு இடங்களில் நாம் சேவ் செய்து வைத்திருக்கின்ற போட்டோக்களை இந்த அப்ளிகேஷன் மூலம் பார்க்கலாம். ஹார்ட் ட்ரைவ் அல்லது இணைக்கப்பட்டிருக்கும் ட்ரைவ், ஸ்கை ட்ரைவ், பேஸ்புக் அல்லது ப்ளிக்கர் அக்கவுண்ட்ஸ் என எதில் வைத்திருந்தாலும், இதன் மூலம் காணலாம். ஆனால்,கூகுள் பிகாஸா உட்பட மற்ற எந்த புகைப்பட சேவை தளங்களும் இதில் சப்போர்ட் செய்யப்படவில்லை.

8. இசை மற்றும் வீடியோ (Music and Video):

இதன் மூலம் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள பாடல் மற்றும் வீடியோ பைல்களை இயக்கலாம். இணையதள மியூசிக் மற்றும் வீடியோ ஸ்டோர்களும் இதில் இணைக்கப் பட்டுள்ளன. Xbox Music ஸ்டோரிலிருந்து பாடல்களை இந்த அப்ளிகேஷன் மூலம் கட்டணம் செலுத்திப் பெறலாம்.

9. விளையாட்டுக்கள் (Games):

Xboxbranded Windows 8 கேம்ஸ் மட்டும் இதில் பெறலாம்.

10. பிங் (Bing):

மைக்ரோசாப்ட் பிங் தேடல் சாதனத்தை இந்த அப்ளிகேஷன் தருகிறது.
உங்களுக்கு கூகுள் தேடல் வசதிதான் வேண்டுமென்றால், விண்டோஸ் 8க்கான கூகுள் சர்ச் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.


11. மேப்ஸ் (Maps):

இந்த அப்ளிகேஷன் Bing Mapsஐப் பயன்படுத்துகிறது. ஜி.பி.எஸ். இணைந்த டேப்ளட் ஒன்றை நீங்கள் வைத்திருந்தால், நீங்கள் இருக்கும் இடத்தினை இந்த மேப் மூலம் பெறலாம். கூகுள் மேப் பயன்படுத்துவது போல, குறிப்பிட்ட இரு இடங்களுக்கிடையே பயணம் செய்வதற்கான வழியைப் பெறலாம்.


12. ஸ்கை ட்ரைவ் (SkyDrive):

இணையத்தில் உங்கள் SkyDrive அக்கவுண்ட்டில் பதிந்து வைத்துள்ள பைல்களை இந்த அப்ளிகேஷன் காட்டுகிறது. உங்கள் பைல்களை, இந்த அப்ளிகேஷன் மூலம், SkyDrive தளத்திற்கு அப்லோட் செய்திடலாம். நீங்கள் ஸ்கை ட்ரைவ் வசதியை, டெஸ்க்டாப்பிலேயே வைத்துப் பயன்படுத்த வேண்டும் எனில், அதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திட வேண்டும். அதனைப் பெற http://windows.microsoft.com/enUS/skydrive/download என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.


13. ரீடர் (Reader):

PDF மற்றும் XPS பைல்களைப் படிக்க உதவும் ஓர் எளிய அப்ளிகேஷன் இது. இந்த வகையில், விண்டோஸ் சிஸ்டம் முதல் முதலாக ஒரு பி.டி.எப். ரீடர் அப்ளிகேஷனைக் கொண்டுள்ளது.


14. கேமரா (Camera):

உங்கள் வெப் கேமராவினைப் பயன்படுத்தி, கேமரா அப்ளிகேஷன் மூலம் போட்டோ மற்றும் வீடியோவினை எடுக்கலாம். பெர்சனல் கம்ப்யூட்டரிலேயே வெப்கேமரா இணைக்கப் பட்டிருந்தால், அதனையும் பயன்படுத்தலாம். விண்டோஸ் ஸ்டோர் அணுகினால், இன்னும் நிறைய இது போன்ற அப்ளிகேஷன்களைப் பெற்று பயன்படுத்தலாம். மேலே காட்டப்பட்டவை அனைத்தும் விண்டோஸ் 8 சிஸ்டத்துடனேயே நமக்குக் கிடைக்கின்றன. வருங்காலத்தில், மைக்ரோசாப்ட் இந்த அப்ளிகேஷன் தரும் வசதிகளை இன்னும் சீரமைக்கும் என எதிர்பார்க்கலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல