வன்னியில் இறுதிப்போரில் புலிகளால் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். தப்பியோடியவர்கள்.ஊனமுற்றவர்கள். மற்று புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டு சித்திரவதை முகாம்களில் இருந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர். இறுதி யுத்ததின்போது கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாதவாறு எரிக்கப்ப்பட்டு அவர்கள் இராணுவத் தாக்குதலில் இறந்ததாக புலிகளின் பிரச்சார ஊடகங்களால் உலகெங்கும் காண்பிக்கப்பட்டது.
ஷெல் தாக்குதலில் இறந்தவ்ர்கள் எப்படி ஒரே இடத்தில் கும்பலாக எரிந்து கருகிப் போனார்கள் என்ற கேள்விக்கே இடமில்லாமல் அதனை புலம் பெயர்ந்தவர்களும்,தமிழகத்துக் கேள்விச் செவியர்களும் நம்பினார்கள்.
இந்த எரிந்த உடல்களை மக்கள் நின்று வேடிக்கை பார்ப்பதைப் பார்த்தாலே தெரிகிறது இது திட்டமிட்டுச் செய்யப்பட்டதென்று!. புலிகளின் சிறைகள் பல கைப்பற்றப்பட்டன. ஆனால் அங்கே சிறை வைக்கப்பட்டிருந்தவர்கள் எல்லோரும் எங்கே? சமாதான காலத்தில் புலிகள் பலரைக் கடத்திச் சென்றனர். கொழும்பிலிருந்து மனோ மாஸ்டர், பொலிஸ் அதிகாரி ஜெயரத்தினம்,வவுனியாவிலிருந்து புளொட் இயக்க உறுப்பினர் பாரூக் ஆகியோர் அடங்குவர்.
இவர்கள் இன்று உயிருடன் இல்லை. மஞ்சுளா இல்லம்,மயூரி இல்லம் என்று புலிகளின் பராமரிப்பு இல்லங்களில் இருந்த பார்வையற்ற, கை கால்களை இழந்த புலி உறுப்பினர்கள் எங்கே? அவர்களை இராணுவம் கைப்பற்றவில்லை. இந்தக் கேள்விகளை யாரும் எழுப்பவில்லை.
நோயல் நடேசன் அவர்கள் வன்னிக்குச் சென்றபோது ஊனமுற்றவர்கள் அடைக்கப்பட்டு குண்டுவைத்துக் கொல்லப்பட்ட அந்த றோசா மினி பஸ்ஸைப் படம் பிடித்து வந்தார். அந்தக் கொலையைப் பார்த்த பலர் சாட்சி சொன்னார்கள். நெடுமாறன் என்ற புலிதான் அந்தக் கொலையைச் செய்ததாக கண்கண்ட சாட்சியங்கள் விபரிக்கின்றன. இந்தக் குண்டுவெடிப்பை நிகழ்த்திக் கொலைசெய்த புலி உறுப்பினர் பிரான்சில் தன்னுடன் இருப்பதாக தமிழ்நேசன் என்ற ஈபிடிபி பொறுப்பாளர் இலங்கைத் தூதரகத்தில் பலர் முன்னிலையில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக