சில மேலைநாட்டு (மூட)நம்பிக்கைகளைப் பார்ப்போம்...
மரத்தைத் தொடுவது அதிர்ஷ்டம். உப்பைக் கீழே சிந்துவது துரதிர்ஷ்டம். வீட்டு அடுப்பில் குடும்ப தேவதைகள் வாழ்கின்றன.
முட்டை ஓடு, காய்கறித் தோல்களை நெருப்பில் போடக் கூடாது. இரவில் சாப்பாட்டு மேஜையில் வெள்ளைத் துணியை விரித்தபடி வைக்கக் கூடாது. 13 பேர் சேர்ந்து விருந்து சாப்பிடக் கூடாது. ஏணிக்கடியில் செல்வது தவறு.
இவையெல்லாம் பொதுவாகப் பல நாடுகளில் காணப்படும் நம்பிக்கைகள்.
குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் காணப்படும் நம்பிக்கைகளும் உண்டு.
ஸ்காட்லாந்தில் மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு வரும் என்று நம்புகிறார்கள். கதவில் சாய்ந்துகொண்டு நிற்கக் கூடாது. கிறிஸ்துமஸ் அன்று காதல் கடிதங்களை தபாலில் போடக் கூடாது என்று அவர்கள் நம்புகிறார்கள்.
அயர்லாந்தில் மதுவைத் தரையில் சிந்துவது அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. மால்டாவில் உள்ள தேவாலயங்களில் வெவ்வேறு நேரத்தைக் காட்டும் இரு கடிகாரங்கள் இருக்கும். பிரார்த்தனை நேரம் பற்றிச் சாத்தானைக் குழப்புவதற்காக இப்படி ஓர் ஏற்பாடாம்.
ஐஸ்லாந்தில் படகைத் தொடர்ந்து பறந்துவரும் பறவையைச் சுடக் கூடாது என்கிறார்கள். திருமணம் ஆகாதவன் அப்படிச் சுட்டால் ஏழு வருடங்களுக்கு அவனுக்குத் திருமணம் ஆகாதாம். கர்ப்பிணிப் பெண், விரிசல் கண்ட கோப்பையில் எதையாவது அருந்தினால், அப்பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கு உதடு பிளவுபட்டிருக்கும் என்றும் நம்புகிறார்கள்.
சீனாவில், துர்மரணம் அடைந்தவர்களின் ஆவி ஏழாவது நாள் பழி தீர்க்க வரும் என்று நம்புகிறார்கள். புது வருட தினத்தன்று வீட்டைப் பெருக்குவது அதிர்ஷ்டத்தை வெளியேற்றிவிடும் என்றும் எண்ணுகிறார்கள்.
நைஜீரியாவில் இரவில் வீட்டைப் பெருக்கக்கூடாது என்றும், காலையில் முதல் வேலையாக வீட்டைப் பெருக்குவது தீய சக்திகளை வெளியேற்றும் என்றும் நம்புகிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக