பாஸ்டனில் பயன்படுத்தப்பட்ட பிரஷர் குக்கர் குண்டுகள் தெற்காசியாவில் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படுகிறது என்றும், அவற்றை தயாரிப்பதும் எளிது, அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம் என்றும் இந்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
2006ம் ஆண்டில் மும்பை ரயிலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் குக்கர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இந்த சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் அதே ஆண்டு வாரனாசியில் 5 பேர் பலியான குண்டுவெடிப்பிலும் குக்கர் குண்டு தான் பயன்படுத்தப்பட்டது. முன்னதாக 2005ம் ஆண்டில் டெல்லியில் உள்ள சரோஜினி நகர் அருகே நடந்த குண்டுவெடிப்பிலும் குக்கர் குண்டுகள் தான் பயன்படுத்தப்பட்டன என்று நம்பப்படுகிறது.
இந்தியா தவிர பாகிஸ்தானில் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த குண்டுவெடிப்பு, அதே ஆண்டில் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தை தாக்க முயன்றது, ஆப்கானிஸ்தானில் மேற்கத்திய ராணுவத்தை தாக்க குக்கர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.
இருக்கமான மூடி கொண்ட குக்கரில் கன் பவுடர், மெட்டல் பொருட்கள், ஆணிகள், கூரான நுனி கொண்ட பொருட்கள் மற்றும் டெட்டனேட்டரை வைத்து மூடிவிடுகின்றனர். பின்னர் அதை தூரத்தில் இருந்தபடியே ரிமோட் மூலம் வெடிக்கச் செய்கின்றனர். குக்கர் குண்டு வெடிக்கையில் அதன் உள்ள மெட்டல் பொருட்கள், ஆணிகள் ஆகியவை பறந்து வந்து சம்பவ இடத்தில் உள்ளவர்கள் மீது பாய்கின்றன.
குக்கர் குண்டை தயாரிக்க தீவிர பயிற்சி தேவையில்லையாம். குக்கர் குண்டை தயாரிப்பது எப்படி என்று இன்டர்நெட் மூலம் கூட அறிந்துகொள்ள முடியுமாம். உலோகத்தால் ஆன குக்கரில் உள்ள குண்டு வெடிக்கையில் குக்கர் தூள் தூளாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது. பாஸ்டன் மாரதான் போட்டியை குறி வைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குக்கர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று எஃப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக