இலங்கை தமிழர் பிரச்னைக்காக, 2009-ல், நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று சொன்னேன். ஆனால், அதை யாரும் கேட்கவில்லை. எனது பேச்சை கேட்டிருந்தால், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனையும், ஆயிரக் கணக்கான தமிழர்களையும் காப்பாற்றியிருக்க முடியும்” என்று கூறியுள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், “வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற அக்கட்சி பொதுக்கூட்டத்தில் பேசுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்த், இலங்கை தமிழர்களின் நலனைக் காக்க நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க தயார் என்று தெரிவித்தார்.
மேலும் தமது கட்சியைப் போன்று இலங்கை தமிழர்களை காக்க மற்ற கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
“நான் எனது மகனுக்கு பிரபாகரன் என்றே பெயர் வைத்திருக்கிறேன். இலங்கையில் தமிழர்கள் துன்பப்படுவதால், எனது பிறந்தநாள் கொண்டாடுவதையே நிறுத்தி விட்டேன்” என்றும் அவர் தெரிவித்தார்.
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணி அமையலாம் எனவும், இதற்கான பேச்சுவார்த்தை இருதரப்புக்குமிடையே நடைபெற்றதாகவும் கூறப்பட்ட நிலையில், விஜயகாந்தின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரப்ரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“துன்பத்தில் வாடும் இலங்கை தமிழர்கள் இனியாவது சிரிக்க வேண்டும். அதற்காக, 2014-ல், நாடாளுமன்ற தேர்தலை, அனைத்து அரசியல் கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும். தே.மு.தி.க.வும் தேர்தலை புறக்கணிக்கும்” என்றும் விஜயகாந்த் பேசினார்.
விறுவிறுப்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக