சனி, 27 ஏப்ரல், 2013

அரை மணித்தியாலத்துக்குள் ஆயிரம் ரூபா.....

வாழ்க்கையில் சில சம்பவங்கள் யதார்த்தங்களாக இருக்கும். ஆனால் ஒரு கணம் ஆளமாக சிந்திக்கும் போது அவை எமது வாழ்க்கைக்கு படிப்பினைகளைப் பெற்றுத் தருகின்றன. தினமும் ஆயிரம் பேரை சந்திக்கிக்கும் நாம் அவர்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவதில்லை. ஆனால் ஒரு சிலரின் செயற்பாடுகள் எண்ணத்தில் இருந்து எளிதாக மறைந்து விடுவதும் இல்லை.

அன்று ஒரு வெள்ளிக்கிழமை. அலுவலக வேலைகள் முடிந்து இரவு 8.30 மணியிருக்கும். சோர்வும் பசியும் ஒன்றுசேர அருகில் இருந்த ஆமர் வீதி சந்தியிலுள்ள உணவகம் ஒன்றினுள் புகுந்தேன். ரொட்டி, கொத்து, பராட்டா ஆப்பம் போன்ற உணவு வகைகள் இருந்தன. இவைதான் அங்குள்ள இரவு உணவுகள்.

சரி, வழமைபோன்றே கொத்து எனது மேசைக்கு வந்தது. சாப்பிட ஆரம்பித்தேன். சில விநாடிகளில் ஒருவர் பத்து, இருபது ரூபாவென நிறைய தாள்களுடன் வந்து குறித்த உணவகத்தில் காசாளரிடம்; கொடுத்தார். அதை வாங்கிய அவர் ஒரு முறைக்கு பல முறை எண்ணிப்பார்த்துவிட்டு 350 ரூபாவை கொடுத்தார். குறித்த தொகையை வாங்கிக் கொண்டு சென்று விட்டார் அந்த நபர்.

அவர் பஸ் நடத்துனராக இருப்பார் போல... அதுதான் சில்லறைக் காசுகளை மாற்றுகின்றார் என்று நினைத்துக்கொண்டு நான் உணவு அருந்துவதில் கவனத்தை செலுத்திக்கொண்டிருந்தேன். சுமார் 15 நிமிடம் இருக்கும். மீண்டும் அதே நபர் பத்து, இருபது என பல ரூபா நாணயத்தாள்களுடன் வந்து காசாளரிடம் கொடுத்தார். காசாளரும் வாங்கி நாக்கில் விரலை வைத்து விட்டு பல முறை எண்ணிவிட்டு 400 ரூபா கொடுத்தார். ஆனால் அதனை வாங்க வில்லை. ஆதை வைத்துகொள்ளுங்கள்.. சில விநாடிகளில் வந்து விடுகின்றேன் என கூறி அவசரமாக வெளியில் சென்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. சரி யாராக இருந்தால் நமக்கென்ன என நினைத்துக்கொண்டே சாப்பிட்டு முடித்து விட்டு வெளியில் சென்றேன். திடீரென ரபானுடன் சேர்ந்து பாடல் சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையை நோக்கி கண்கள் திரும்பியது. பார்த்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பஸ்சினுள் அதே நபர். நிமிர்ந்து நடக்க முடியாத வகையில் காலை ஒரு புறமாக மடக்கி வைத்துக்கொண்டு பாடல் பாடிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் முன்னிருந்தவர்களிடம் ரபானை நீட்ட பத்து, இருபது என நாணயத்தாள்கள் விழுந்தன.

அந்த பணத்தினை எடுத்துக்கொண்டு மீண்டும் அதே கடையினுள் புகுந்தார். அதாவது ஆமர் வீதி பஸ் தரிப்பிடத்தில் வந்து நிற்கும் பஸ்களில் பாடல் பாடி பணம் சம்பாதிக்கும் யாசகரே அவர் என அப்போது புரிந்தது எனக்கு. அந்த அரை மணித்தியாலத்துக்குள் நான் கண்ட நபர்தான் அந்த யாசகர்.

அதாவது பார்ப்பதற்கு உடலில் எந்தக் குறையும் இல்லாத அந்த நபர் தினமும் இரவு நேரத்தில் பஸ்களினுள் ஏறி, தனது தோற்றத்தை பார்ப்பவர்களை நெகிழவைக்கும் வகையில் வைத்துக்கொண்டு மனதை உருக்கும் பாடல்களைப் பாடி பணம் சம்பாதிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

குறித்த நபர் சுமார் எட்டு மணியிலிருந்து 10 மணிவரையில் பஸ்களில் இவ்வாறு யாசகம் செய்து சம்பாதிக்கிறார். சுமார் அரை மணித்தியாலத்துக்குள் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபா சம்பாதிக்கும் இவருக்கு பிரயாணம் செய்பவர்கள் பணத்தைக் கொடுகத்தான் செய்கிறார்கள். வீட்டிற்குத் தானே போகின்றோம் ஒரு புண்ணியமாகப் போகட்டும் என நினைத்துக்கொண்டு பணத்தை கொடுத்துச் செல்கின்றனர்.

ஊனமாக இருப்பவர்களுக்கு இவ்வாறு உதவி செய்தவது நல்லது. ஆனால் உடலில் எவ்வித குறையும் இல்லாமல் ஊனமாக நடித்து மற்றவர்களை ஏமாற்றி யாசகம் செய்பவர்களுக்கு உதவுவது முட்டாள் தனமான விடயம்.

ஊனமாக இருப்பவர்களை விட உடல் ஆரோக்கியமாக இருக்கின்றவர்களே கூடுதலாக யாசகம் செய்கின்றனர்.

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. அதனிலும் அரிது கூன், குருடு, செவிடு இல்லாமல் பிறத்தல் பெரிது,…. மனிதப்பிறவி என்பது கிடைத்தல் அரிது. அதிலும்; கூன் குருடு இல்லாமல் பிற்பதற்கு நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என தமிழ் பெண் புலவரான ஒளவை அற்புதமாகப் கூறியுள்ளார்.

ஆனால் இவ்வாறு போற்றக் கூடி மனிதப் பிறவியை வைத்து சிலர் தன்னையும் ஏமாற்றி பிறரையும் ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் கூன், குருடு, செவிடாக பிறந்து சாதித்தவர்கள் அநேகர்.
-ஸ்டீபன் ஹாகிங். இவர் ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி. இவரால் கதைக்க முடியாத அதேவேளை கை, காலும் இயங்காது முடமாக வாழ்ந்தார். ஆனால் கண், மனம் ஆகிய இரண்டை மாத்திரம் வைத்து உலக மக்களையே தன்பக்கம் திரும்பச் செய்தார்.

இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியது கடவுள் அல்ல, இயற்பியலின் கோட்பாடுகளின் விளைவுகளே காரணம் என்று கூறியுள்ளார். விண்வெளியில் இவர் ஆய்வுக்கு ஆற்றிய சேவை மிகப் பெரியது.

உலகம் போற்றும் இயற்பியல் மேதையான இவரால் பிறர் உதவியில்லாமல் நடக்க, படிக்க, எழுத முடியாது. பேசும் திறனும் போய்விட்டது. இவரது மொத்த நடமாட்டமும் ஒரு சின்ன சக்கர நாற்காலியில் அடக்கம். ஆனால், இந்த மனிதரின் சிந்தனைகளோ பிரபஞ்சத்தையும் தாண்டிச் சிறகடிக்கின்றன.

-பெத்தோவன் (1770 - 1827) 32 வயதில் அரைகுறை காது கேட்காதவராக இருந்த இவர், தன்னுடைய 46ஆவது வயதில் முழுவதுமாக காது கேட்காத நிலையை அடைந்தார். சங்கீதத்தில் அவர் படைத்த இசைக் காவியங்கள் அனைத்தும் 46ஆவது வயதுக்குப் பிறகுப் படைத்தவையே.

ஜோர்ஜ் லுயிஸ் போர்கஸ் (Jorge Luis Borges) (1899 - 1986) இவர் ஆர்ஜன்டீனா நாட்டைச் சேர்ந்த கவிஞர், கதை ஆசிரியர், இவருடைய படைப்புக்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இவருக்குக் கண் பார்வை கிடையாது.

சாரா பெர்ன் ஹார்ட் (Sarah Bern Hardt) (1844 - 1923) 1905 இல் மூட்டுக் காயம். 1914 இல் ஒரு காலை வெட்டி எடுத்துவிட்டார்கள். தன் கடைசி மூச்சு இருக்கும் வரை நடிப்புத் தொழிலை விடவில்லை. பிரான்ஸ் நாட்டின் - டிவினி சாரா rhuh Divine Sarah என்று அழைக்கப்பட்டவர்.

ஹோமர் (Homer) கிரேக்க காவியங்களான இலியட், ஒடிஸி படைத்த இவர் கண் பார்வை அற்றவர்.

பிரேங்க்லின் ரூஸ்வெல்ட் (Franklin D. Roosevelt) (1882 - 1945) 39 வயதில் பக்கவாதத்தால் 2 கால்களும் முடமாயிற்று. 4 தடவை அமெரிக்க ஜனாதிபதியாகிப் பெரும் புகழ் அடைந்திருக்கிறார்.

ஜேம்ஸ் தர்பர் டானி, கிரே தொம்ஸன், ஜோன் மில்டன் , லூயி பிரெயில் என ஊனமடைந்து பிறந்து அதனை வென்று சாதனை படைத்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

அதாவது மனிதப்பிறவி எனும் அரிய பிறவியை வீணாக்காமல் மேற்குறிப்பிட்ட சாதனையாளர்கள் சரியாக பயன்படுத்தி பலன் அடைந்ததோடு மட்டுமல்லாது பலரும் பயன் அடையவும் செய்துள்ளனர்.

இவர்களும் எனக்கு ஊனம் தானே… என்னால் என்ன செய்ய முடியும் என ஒரு கணம் நினைத்திருந்தால் உலகமானது தற்போது பிச்சைக்காரர்களின் தேசமாகத்தான் இருந்திருக்கும்.

இவ்வாறு ஒருபுறம் இருந்தாலும் உடல் ஆரோக்கியமாக இருந்து மற்றவர்களை ஏமாற்றி பிச்சையெடுப்பவர்ளின் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன. தன்னம்பிக்கையற்றவர்கள் இவ்வாறு செயற்படுகின்றார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

பஸ்களிலும் ரயில்களிலும் பிச்சை எடுப்பது அரசாங்கத்தினால் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பகல் வேளைகளில் பிச்சைக்காரர்களைக் காண்பது அரிதாக இருந்தாலும் இரவு நேரங்களில் பிச்சைகாரர்களின் தொல்லை அதிரித்துள்ளது.

என்னதான் அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்தாலும் ஏதோ ஒரு வகையில் இவர்களின் தொல்லை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் ஏமாற்றிக்கொண்டேதான் இருப்பார்கள் என்பதைப் போன்று ஏமாற்றுப் பேர்வழிகளைக் கண்டு அவர்களுக்கு உதவாமல் இருப்Nபுhமானால் இவ்வாறானவர்களைத் திருத்த முடியும்.

எனினும் புதுப்புது உத்திகளை கையாண்டு யாசகம் செய்பவர்கள் தொடர்ந்து நம்மிடம் வந்த வண்ணம்தான் உள்ளனர். நாமும் சிந்திக்காமல், யோசிக்காமல் பணத்தைக் கொடுத்து ஏமாறுவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. எனவே இவர்களிடம் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.


-எம்.டி.லூசியஸ்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல