பல்வேறு அப்ளிகேஷன் புரோகிராம்களைத் திறந்து வைத்து பணியாற்றிக் கொண்டிருக்கும் சூழ்நிலையை உணர்ந்து பாருங்கள். எடுத்துக்காட்டாக வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட், நோட்பேட், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், அக்செஸ் என பல புரோகிராம்கள் திறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
அப்போது புரோகிராம்களுக்கிடையே பயணம் செல்ல ஆல்ட்+ டேப் அழுத்தித் திரையில் கிடைக்கும் புரோகிராம் ஐகான்களுக்கிடையே பயணம் செய்து தேவையான புரோகிராம்களில் கிளிக் செய்து திறக்கிறீர்கள். இதில் என்ன சிக்கல் என்றால் ஆல்ட் + டேப் அழுத்துகையில் அது இடது புறத்தில் இருந்து வலது புறமாகச் செல்லும். பின்னால் வராது. எடுத்துக் காட்டாக ஏழு புரோகிராம்களைத் திறந்திருக்கிறீர்கள்.
முதலாவதாக வேர்ட். அதனை அடுத்து இரண்டாவதாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஐகான் உள்ளது. நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சென்று விட்டால் மீண்டும் வேர்ட் வர அனைத்து புரோகிராம்களின் மீதும் தாவித்தான் வர முடியும். ஆனால் பேக் டிரைவிங் செல்ல ஒரு வழியும் உள்ளது.
ஆல்ட் + டேப் கீகளுடன் ஷிப்ட் கீயை அழுத்துங்கள். உங்கள் கர்சர் பின் நோக்கி அடுத்தடுத்த ஐகான்களுக்குச் செல்லும். தேவையான புரோகிராம் கிடைக்கையில் நிறுத்தி அதனைத் திறக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக