தன் காதலுக்காக மகளே தன் காதலை கொண்டு பெற்றோரை கொலை செய்த சம்பவம் மட்டக்களப்பு செங்கலடியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 8ஆம் திகதி செங்கலடி பதுளை வீதியிலுள்ள வீடொன்றில், செங்கலடி விப்ரா மளிகை கடை உரிமையாளரான சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி ரகு விப்ரா ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இக்கொலை தொடர்பாக விசாரணை நடத்திய பொலிஸார் கொல்லப்பட்டவர்களின் மகள் மற்றும் அவரின் காதலன், காதலின் நண்பர்கள் என நான்கு பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியில் 11ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவர்கள். இவர்களே இந்த கொலையை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
16வயதான அந்த மாணவி தனது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து காதலை கொண்டு பெற்றோரை கொலை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவ தினம் இரவு மயக்கம் அடையக்கூடிய மருந்து ஒன்றை பெற்றோர் உண்ட சாப்பாட்டில் கலந்து அந்த மாணவி பெற்றோர் நித்திரைக்கு சென்றதும் தன் காதலுக்கும் தகவல் கொடுத்ததாகவும், 16வயதுடைய அந்த மாணவனும் அவரின் நண்பர்கள் இருவரும் வீட்டிற்குள் புகுந்து இந்த கொலையை செய்து விட்டு தப்பி சென்றதாக தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக