இலங்கையில் எதிர்வரும் நவம்பரில் நடக்க இருக்கும் பொதுநலவாய உச்சிமாநாட்டில் உடல்நிலை காரணமாக பிரித்தானிய மகாராணி எலிசபெத் கலந்துகொள்ள மாட்டார் என பக்கிங்காம் அரண்மனையிலிருந்து வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.
54 நாடுகள் உறுப்பினர்களாகக் கொண்ட பொதுநலவாய அமைப்பின் தலைவியான பிரித்தானிய மகாராணி எலிசபெத் 1971ஆம் ஆண்டிற்கு பின்னர் ஒரே ஒரு முறைதான் பொதுநலவாய உச்சி மகாநாட்டில் கலந்துகொள்ள தவறியிருந்தார்.
பிரித்தானிய மகாராணிக்கு பதிலாக அவரது வாரிசான, இளவரசர் சார்ள்ஸ் , இந்த மாநாட்டில் நிச்சயம் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
87 வயதாகும் பிரித்தானிய மகாராணி இத்தகைய நீண்டதூர விமானப் பயணங்கள் ஏற்படுத்தும் உடல் நலப் பிரச்சினைகளை மீளாய்வு செய்த பின்னர், இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கையின் மனித உரிமைகள் செயல்பாடு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கும் , பிரித்தானிய மகாராணி இந்த மாநாட்டில் கலந்துகொள்ளாமல் தவிர்த்திருப்பதற்கும் எந்த விதத் தொடர்பும் இல்லவே இல்லை என்றும் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக