சமிக்ஞைக்காக வாகனத்தை நிறுத்தி வைத்துக்கொண்டிருப்பதா? இன்றேல் இயக்குவதா? அப்படியின்றேல் முன்னோக்கி செலுத்துவதா? என்று தெரியாமல் சாரதிகள் திண்டாடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை காலைவேளையில் இவ்வாறானதொரு விசித்திரமான சம்பவம் இடம்பெற்றது.
கொழும்பு தர்மபால மாவத்தையில் விஹாரமகாதேவி பூங்காவிற்கு முன்பாகவுள்ள வீதி சமிக்ஞையினாலேயே சாரதிகள் சில மணிநேரம் சங்கடத்திற்கு உள்ளாகினர்.
இதனால் அப்பகுதியிலுள்ள வீதிகளில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது. அவ்விடத்தில் குறித்த நேரத்தில் போக்குவரத்து பொலிஸாரும் கடமையில் இருக்காமையினால் சாரதிகள் பெரும் சிரமத்திற்கு முகம்கொடுத்தனர்.
குறிப்பிட்ட அந்த சமிக்ஞையில் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய மூன்று நிற விளக்குகளும் ஒரேநேரத்தில் செயற்பட்டமையினால் சாரதிகள் குழப்பத்திற்குள்ளானார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக