மத்தியபிரதேச மாநிலத்தில் அரசு சார்பில் நடத்தப்பட்ட இலவச திருமணத்திற்காக 350-க்கும் மேற்பட்ட ஆதிவாசி பெண்களின் கன்னி்த் தன்மையை சோதிக்க அரசு அதிகாரிகள் உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பெடுல் மாவட்டத்தில் அரசு நிர்வாகம் ‘முக்கிய மந்திரிகள் கன்யாதான் யோஜனா’ திட்டத்தின் மூலம் கூட்டுத் திருமணத்தை நேற்று முன் தினம் நடத்தியது. இதில் ஆதிவாசி பெண்களும் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் திருமணத்திற்காக தேர்வு செய்யப்பட்ட பெண்கள் கன்னித்தன்மையுடன் உள்ளனராஅல்லது கர்ப்பிணியாக உள்ளனரா? என மருத்துவ சோதனை நடத்த அரசு அதிகாரிகளே உத்தரவிடப்பட்டதாக 90 ஆதிவாசி பெண்கள் மாவட்ட நிர்வாகம் மீது புகார் கூறினர்.
இது அரசு, அரசியல் மட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.மேலும் இது தொடர்பாக சட்டசபையி்ல் எதிர்க்கட்சிகள் புயலை கிளப்பின. இதனையடுத்து இச்சோதனைகளுக்கு உத்தரவிட்ட அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி ஒரு வார காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக