உறவில், ஏதேனும் சந்தேகம் முளைக்கத் தொடங்குகிறதா? ஏதோ ஒன்று தவறாக நடக்கிறது என்று உள்ளுணர்வு சொல்லுகிறதா? வாழ்க்கை தடம் புரள்வதாக உணர்கிறீர்களா? அப்படியென்றால் அவ்வுறவில் ஏதோ ஒரு பிரச்சனை வரப்போகிறது என்று பொருள்.
ஒன்றும் தவறாக நடந்துவிடாது என்று சமாதானப்படுத்திக் கொள்வதன் மூலம் உங்களையே ஏமாற்றிக் கொள்கிறீர்கள். ஆனால் உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.
தக்க மதிப்பினைத் தர மறுக்கும் அல்லது தாழ்வாக மதிப்பிடும் உறவுகள் சுய மரியாதைக்குத் ஏற்றவை அல்ல. அந்த உறவுகளை தொடர்வதற்கு ஏற்றவையா என்பதையும் அல்லது நெறிப்படுத்த முடியுமா? என்பது குறித்தும், சோதனை செய்து பாருங்கள். உறவுகளுக்கிடையேயான நடவடிக்கைகளில், ஆராய வேண்டிய சில விஷயங்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளன.
ஒன்றும் தவறாக நடந்துவிடாது என்று சமாதானப்படுத்திக் கொள்வதன் மூலம் உங்களையே ஏமாற்றிக் கொள்கிறீர்கள். ஆனால் உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.
தக்க மதிப்பினைத் தர மறுக்கும் அல்லது தாழ்வாக மதிப்பிடும் உறவுகள் சுய மரியாதைக்குத் ஏற்றவை அல்ல. அந்த உறவுகளை தொடர்வதற்கு ஏற்றவையா என்பதையும் அல்லது நெறிப்படுத்த முடியுமா? என்பது குறித்தும், சோதனை செய்து பாருங்கள். உறவுகளுக்கிடையேயான நடவடிக்கைகளில், ஆராய வேண்டிய சில விஷயங்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளன.
உணர்வுகள்
எப்போதும் ஆதங்கமாகவும், படபடப்பாகவும் உணர்கிறீர்களா? இது வாழ்க்கை துணை எப்போதும் மட்டம் தட்டுவதால் ஏற்பட்டதா? அல்லது அவர் உங்களை கண்டு கொள்வதே இல்லை என்பதால் ஏற்பட்டதா என்று பாருங்கள். தன்னம்பிக்கையினை ஊக்குவிக்காமல் மட்டம் தட்டிக் கொண்டுள்ளாரா என்றும் ஆராயுங்கள். பொது இடங்களிலும், தனிமையான இடங்களிலும், அவர் உங்களிடம் நடந்து கொள்ளும் முறையை பற்றி ஆராய்ந்து வேறுபாட்டினைக் கண்டுபிடியுங்கள்.
விட்டுக்கொடுத்தல்
உறவுக்குள் அமைதி ஏற்படுத்தும் முறையாக ஒவ்வொரு நிகழ்விலும் விட்டுக் கொடுக்கிறீர்களா? துணைவரை மகிழ்விப்பதற்காக தனித்தன்மையை விட்டுக்கொடுக்க வேண்டியுள்ளதா? அப்படியென்றால், இந்த உறவு குறித்து யோசிக்க வேண்டிய அபாயக் கட்டம் இது.
வேலைகள்
சந்திப்புக்கு நாளும் நேரமும் ஒதுக்குவது, இடம் தேர்ந்தெடுப்பது தொலைபேசியில் அழைத்து ஞாபகப்படுத்துவது, முக்கியமான நாட்களில் வாழ்த்து தெரிவிப்பது என்று அனைத்து வேலைகளையும் நீங்கள் தான் செய்து கொண்டு வருகிறீர்களா? ஆம் என்றால் அவ்வுறவு அடிப்படை உணர்வுகளை விட்டு விலகிக் கொண்டு வருகிறது என்று பொருள்.
அவரை பற்றி மட்டு்ம்
சேர்ந்து சிரித்து மகிழ்வது , எதிர்பார்ப்புகள், ஆசைகளைப் பற்றிப் பேசுவது, எதிர்காலத்தைப் பற்றிப் பேசுவது ஆகியவை இவ்வுறவில் எதிர்பார்ப்பாக இருக்கும் பொழுது, துணைவரின் செயல் அனைத்தும் அவரைப் பற்றி மட்டுமே இருக்கின்றனவா? ஒரு பார்வையாளராக மட்டும் இருக்கிறீர்கள் என்றால் இவ்வுறவு தொடர வேண்டுமா? என்று உங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய நேரம் இது.
உணர்வுகளில் மாற்றம்
எந்த காரணத்திற்காக உறவை விரும்பினீர்களோ அந்த காரணம் மறையத் தொடங்குகிறதா? ஆரம்ப காலத்தில் இருந்த இணைப்பு காணாமல் போகிறதா? இருவரையும் இணைத்திருந்த ஒரு விஷயம் இப்போது பலவீனமாகிறதா? இது உறவுக்கு ஒரு சிவப்புக் கொடிதான். துணைவர் உங்களை விட்டு விலகிப் போகிறார் என்பதன் தெளிவான அறிகுறி இதுவாகும். துணைவரை சந்திக்கும் பொழுது அன்பின் நிமித்தமாக சந்திக்கிறோம் என்பதை விட கடமைக்காகச் சந்திக்கிறோம் என்று உணர்கிறீர்களா? இந்த அறிகுறிகள், உறவு முறிக்க முதல் படி எடுத்து வைக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.
கடந்த காலமே இனிமை!!
கடந்த கால நினைவுகளை அசை போட்டு அந்த நாட்கள் மீண்டும் திரும்பவருமா என்று ஏங்குகிறீர்களா? கடந்த காலத்தில் நடந்த மகிழ்ச்சியான தருணங்களை நினைத்து ஏங்குகிறீர்களா? ஆமெனில் உறவில் ஏதோ ஒரு தேக்கம் ஏற்பட்டுள்ளது என்று பொருள்.
நடவடிக்கைகள்
துணைவரது நடவடிக்கைகள் எரிச்சல் ஏற்படுத்துகின்றனவா? கோபத்தினை ஏற்படுத்துகிறதா? அச்செயல்களை அவர் நிறுத்தவேண்டும் என்றோ, அது போன்ற நடவடிக்கைகளை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? ஆமெனில், அவரிடமிருந்து விலகுவதற்கு ஏற்ற நேரம் இதுவாக இருக்கலாம்.
கருத்து வேறுபாடு
விவாதங்கள், குரலை உயர்த்துதல், கோபத்தினால் விளைந்த மௌனம், மற்றவருக்காக எதையும் செய்ய விருப்பமின்மை ஆகியவை அடிக்கடி நடக்கின்றனவா? ஜோடிகள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொள்வார்கள். அப்படியென்றால், உறவு விரிசல் விட்டு வருகிறது என்று பொருள். அந்த உறவுக்கு சிவப்புக் கொடி காட்டும் உகந்த நேரம் இதுவாகும்.
அறிவுரை
உண்மையாக இருங்கள். உணர்வுகளை மதித்து, திறமைகளுக்கு இடம் கொடுத்து முன்னேற்ற வைத்து மகிழ்ச்சிப்படுத்தும் உறவே உன்னதமானது. மனதைக் காயப்படுத்தாமல், எப்போதும் மகிழ்ச்சியுற வைப்பதைப் பெருமையாக எண்ணும் துணைவரே தகுந்தவர். அவரே வாழ்க்கைக்கும் உடன் இருக்கத் தக்கவர். அவ்விதம் உள்ளவரோடு மேற்கொள்ளும் வாழ்க்கை என்றும் விரிசலுக்கு இடமின்றி இனிதே மகிழ்ச்சியாகச் செல்லும்.
Thatstamil
Thatstamil

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக