2007-ம் ஆண்டு செப்டெம்பர் 16-ம் தேதி, விடுதலைப் புலிகளின் முதலாவது கப்பல் இலங்கை கடற்படை கப்பலில் இருந்தவர்களது பார்வையில் பட்டது. புலிகளுடைய கப்பல், எண்ணை ஏற்றிச் செல்லும் ஒரு டேங்கர் ரக கப்பல். இந்தோனேசிய கடல் பகுதியில் நின்றிருந்த அந்த கப்பலை அணுகின இலங்கை கடற்படையின் 4 கப்பல்கள்.
புலிகளின் கப்பலில் இருந்தவர்களுடன் சயூரா கப்பலில் இருந்து ரேடியோ தொடர்பை ஏற்படுத்தி, “நீங்கள் யார்? உங்கள் கப்பலின் அடையாள விபரங்களை கூறுங்கள்” என்று கேட்டார்கள், இலங்கை கடற்படையினர்.
விடுதலைப் புலிகளின் கப்பலில் இருந்தவர்கள், தம்மிடம் தகவல் கேட்பவர்கள், இந்தோனேசிய கடல் பகுதியில் அதிகம் நடமாடும் ஆஸ்திரேலிய கடற்படை என்றே நினைத்தார்கள். இலங்கை கடற்படையினர் அவ்வளவு தொலைவுக்கு வருவார்கள் என புலிகளின் கப்பலில் இருந்தவர்கள் நினைத்தும் இருக்கவில்லை.
புலிகளின் கப்பலில் இருந்து ஒருவர் தமிழ் உச்சரிப்புடன் கூடிய ஆங்கிலத்தில் ரேடியோவில் பதில் கூறினார். “நாங்கள், அல்ஜீரியாவை சேர்ந்த எண்ணைக் கப்பல்” என்றார்.
“நீங்கள் அல்ஜீரியா கப்பல் அல்ல என்பதும் எங்களுக்கு தெரியும், நீங்கள் யார் என்பதும் எங்களுக்கு நன்றாகவே தெரியும்” என்ற பதில், இலங்கை கடற்படையின் சயூரா கப்பலில் இருந்து போனது.
இந்த நிமிடத்திலாவது, புலிகளின் கப்பலில் இருந்தவர்கள் உஷாரடைந்து, தமது கப்பலை எதிர் திசையை நோக்கி வேகமாக செலுத்த தொடங்கியிருக்கலாம். ஆனால், ஏனோ அப்படி செய்யவில்லை. கப்பலை அசைக்காமல், அந்த இடத்திலேயே வைத்திருந்தார்கள்.
காரணம், நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல, இலங்கை கடற்படையினர் அவ்வளவு தொலைவு வரை வருவார்கள் என புலிகளின் ஆயுத கப்பலில் இருந்தவர்கள் எதிர்பார்க்கவில்லை. “நாங்கள் அல்ஜீரியாவை சேர்ந்த எண்ணைக் கப்பல்தான். இதோ எமது அடையாளங்கள்” என்று ரேடியோவில் பதில் கொடுத்தார்கள்.
அடையாளம் என்று அவர்கள் கொடுத்த கப்பலின் பெயர், மற்றும் லாயிட்ஸ் பதிவு எண் ஆகிய இரண்டுமே போலியானவை.
இந்த இடத்தில் மற்றொரு விஷயத்தை சொல்ல வேண்டும். செப். 11 தாக்குதலின் பின், அல்-காய்தாவினர் அமெரிக்க கப்பல்களை தாக்கலாம் என உளவுத் தகவல் கிடைத்ததை அடுத்து, அமெரிக்கா கடலில் செல்லும் கப்பல்களை அடையாளம் தெரிந்து கொள்ள புதிய சிஸ்டம் ஒன்றை உருவாக்கியது. 2003-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த அந்த சிஸ்டத்தின் பெயர், AIS. விரிவாக்கம், Automatic Identification System.
சாட்டலைட் மூலம் இயங்கும் இந்த சிஸ்டத்தை அநேக கடற்படை கப்பல்களும் சில சிவிலியன் கப்பல்களும் பொருத்தியுள்ளன. இதில் ஒரு கப்பலின் பெயரை டைப் செய்தால், குறித்த கப்பல் யாருக்கு சொந்தமானது, தற்போது எந்த கடல் பகுதியில் நிற்கிறது என்பது உட்பட பல விபரங்கள் தெரியவரும்.
இந்த சிஸ்டத்தை கப்பலில் பொருத்துவது செலவு பிடிக்கும் விஷயம் என்பதால், AIS Class A equipment என்ற இந்த கருவியை 2007-ம் ஆண்டில் மிக சில சிவிலியன் கப்பல்களே பொருத்தியிருந்தன. (2010-ம் ஆண்டு, ஐரோப்பிய கடலில் பயணிக்கும் அனைத்து கப்பல்களும் இந்த கருவியை பொருத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் சட்டம் கொண்டு வந்தது)
2007-ம் ஆண்டில், அநேக நாடுகளின் கடற்படை போர்க் கப்பல்கள், ரோந்துக் கப்பல்களில் இந்த கருவி பொருத்தப்பட்டிருந்தது. இலங்கை கடற்படையின் சயூரா கப்பலிலும் இந்த கருவி பொருத்தப்பட்டிருந்தது.
புலிகளின் கப்பலில் இருந்தவர்கள், தமது கப்பலின் பெயர் இதுதான் என்று கூறிய பெயரும் பதிவு எண்ணும் போலியானவை என்பதை, AIS Class A equipment மூலம் உறுதி செய்து கொண்டனர், சயூரா கப்பலில் இருந்தவர்கள்.
“இது விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் என்று எமக்கு தெரியும். நீங்கள் பேசாமல் சரணடைந்து விடுங்கள். அல்லது நாம் உங்கள் கப்பலை தாக்குவோம்” என்ற ரேடியோ மெசேஜ், புலிகளின் கப்பலுக்கு போனது. உடனே, புலிகளின் கப்பல் தமது ரேடியோ தொடர்பை துண்டித்துக் கொண்டது.
இதையடுத்து, இலங்கை கடற்படை கப்பலில் இருந்து தாக்குதல்களை மேற்கொள்ள தொடங்கினார்கள். புலிகளின் கப்பலில் இருந்தவர்கள் திருப்பி தாக்கினார்கள். நடுக்கடலில் தொடங்கியது சண்டை.
இந்த இடத்தில் இரு விஷயங்களை சொல்ல வேண்டும். முதலாவது, புலிகளின் கப்பல் நின்றிருந்த பகுதி, இந்தோனேசிய கடல் எல்லைக்கு வெளியே சர்வதேச கடல் பகுதி. இதனால், இந்த சண்டையில் மூன்றாவது தரப்பு, முக்கியமாக இந்தோனேசிய கடற்படை தலையிடவில்லை.
இரண்டாவது, புலிகளின் கப்பல், சிவிலியன் கப்பல் என்ற போர்வையில் நடமாடியதால், அந்த எண்ணைக் கப்பலின் மேல் தளத்தில், ஆயுதங்கள் ஏதும் பொருத்தப்பட்டு இருக்கவில்லை. ஆனால், இலங்கை கடற்படை கப்பல்களின் மேல் தளத்தில் கனரக ஆயுதங்கள் நிரந்தரமாக பொருத்தப்பட்டு இருந்தன.
இதனால், இந்த கடல் சண்டையில் இலங்கை கடற்படை கனரக ஆயுதங்களால் தாக்க, விடுதலைப் புலிகள் கைகளில் வைத்து தாக்கும் சிறு ஆயுதங்களால் திருப்பி தாக்கி கொண்டிருந்தனர்.
இலங்கை கடற்படை கப்பல்கள் கனரக ஆயுதங்களால் தாக்கினாலும், சண்டையின் ஆரம்பத்தில், புலிகளின் கப்பலை மூழ்கடிக்க முடியவில்லை. கப்பலில் சேதத்தை மட்டுமே ஏற்படுத்த முடிந்தது. அதையடுத்து, இலங்கை கடற்படை தாக்குதல் ஆபரேஷனுக்கு பொறுப்பாக இருந்த டி.எல்.சின்னையா, சயூரா கப்பலில் இருந்தபடி, சமுதுரா (இலக்கம் – P-621) கப்பலுக்கு மற்றொரு உத்தரவை கொடுத்தார்.
அந்த உத்தரவின்படி, சமுதுரா கப்பல், புலிகளின் கப்பலை நெருங்கிச் சென்றது. சமுதுரா கப்பலில் இருந்து புலிகளின் கப்பலின் மேல் தளத்தில் நின்றவர்களை நோக்கி தாக்காமல், கப்பலின் கீழ்ப் பகுதியை நோக்கி தாக்குதல் நடத்தினார்கள். ஆர்.பி.ஜி. (RPG – Rocket-Propelled Grenade) மூலம் கடல் கோடு மட்டத்தில் (waterline) நடத்தப்பட்ட தாக்குதல்களில், புலிகளின் ஆயுதக் கப்பலின் கீழ்ப்பகுதி உடைந்தது.
கப்பல் நடுக் கடலில் மூழ்கியது. வன்னியில் நடந்த யுத்தத்தில் புலிகளுக்காக கொண்டு வருவதற்காக அதில் ஏற்றப்பட்டிருந்த ஆயுதங்கள் அனைத்தும், கப்பலுடன் கடல் அடியே போயின. புலிகளின் கப்பலில் இருந்த யாருமே உயிர் தப்பவில்லை.
இந்த தாக்குதல் முடிந்தபின், வெவ்வேறு இடங்களில் இருந்து இரு தொலைத் தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டன.
முதலாவது, இலங்கை கடற்படையின் சயூரா கப்பலில் இருந்து இலங்கை கடற்படை தலைமையகத்தை தொடர்பு கொண்டு, விடுதலைப் புலிகளின் அடுத்த கப்பல் நிற்கும் பொசிஷன் எது என்ற விபரத்தை கேட்டார்கள்.
இரண்டாவது, கொழும்புவில் உள்ள கடற்படை தலைமையகத்தின் கன்ட்ரோல் ரூமில் இருந்தவர், சி.ஐ.ஏ. கொடுத்திருந்த தனி தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டார். அந்த அழைப்பு, 2007-ம் ஆண்டின் ஆரம்பத்தில் சி.ஐ.ஏ.வால் அமெரிக்கா, வர்ஜீனியா மாநிலம், லாங்க்லியில் உள்ள சி.ஐ.ஏ. அலுவலகத்தில் அமைக்கப்பட்ட ‘ஸ்ரீலங்கா ஆபரேஷன் டெஸ்க்’குக்கு சென்றது.
கொழும்புவில் உள்ள கடற்படை தலைமையக கன்ட்ரோல் ரூமில் இருந்தவர், “விடுதலைபுலிகளின் ஒரு கப்பல் அழிக்கப்பட்டது” என்ற விபரத்தை தெரிவித்தபோது, மறுமுனையில், “அது எங்களுக்கு தெரியும். நாங்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தோம்” என்று கூறியதுடன், புலிகளின் அடுத்த ஆயுதக் கப்பல் நிற்கும் பொசிஷனை துல்லியமாக தெரிவித்தார் சி.ஐ.ஏ. அதிகாரி.
விறுவிறுப்பு இணையம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக