‘தீயாய் வேலை செய்யணும் குமாரு’ படம் தமிழில் தனக்கு நிலையான ஒரு இடத்தைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சித்தார்த்.
தெலுங்கில் முன்னணியில் இருந்தாலும் தமிழில் தனக்கான அங்கீகாரம் கிடைக்க வில்லையே எனும் ஏக்கம் இன்னமும் அவரிடம் நிறையவே இருக்கிறது.
நீங்களாகத்தானே தெலுங்குப் பக்கம் சென்றீர்கள், பிறகு ஏன் வருத்தம்?
“என்ன செய்வது? அன்று எனக்கான வாய்ப்புகளைத் தர யாரும் இங்கு முன்வர வில்லையே? நானும் பிழைக்க வேண்டாமா? அதனால்தான் அங்கே சென்றேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர்.சி. படம் மூலம் எனக்கான இடம் கிடைக்கும் என நம்புகிறேன். இம்முறை எனக்கென கிடைக் கும் இடத்தை நிச்சயம் விட்டுக் கொடுக்க மாட்டேன்,” என்று சிரிக்கிறார் சித்தார்த்.
திடீரென வசந்தபாலன், கார்த்திக் சுப்பு� ராஜ் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளீர்களே?
“யாருமே நம்மை அழைக்கவில்லையே என்று யோசித்துப் பார்த்து, அதன் முடிவில் சொந்த நிறுவனம் தொடங்கினேன். இப்போது நிறைய பேர் அழைக்கிறார்கள். இப்போது புதிதாக வரும் இயக்குநர்களின் மனதிலும் நான் இருக்கிறேன். அதனால் குழப்பம் ஏதும் இல்லை.
“வசந்தபாலன் படம் என்னை இன்னும் ஆழமாகப் போகச் சொல்லும். சுப்புராஜின் கதை ரொம்ப இளமையானது. எனக்குப் பிடித்ததைச் செய்யும்போது, அதிலும் ரசிகர் களின் அலைவரிசையில் அமையும்போது, உற்சாகமாக இருக்கிறது.
தமிழை விட்டு ஏன் தெலுங்கு பக்கம் சென்றோம் என்று எப்போதாவது யோசித்து வருத்தப்பட்டதுண்டா?
“தெலுங்கிலும் எனக்கு ஆதரவு தந்த னர். அந்த நன்றி உண்டு. நம்ம ஊர் மக்களும் என்னை நன்றாகத்தான் வைத்தி ருக்கிறார்கள். ‘உதயம்’ படத்தை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். இந்த இடம் வேண்டாம் என்று ஓடிப்போன பிறகும்கூட என் மீது பாசம் வைத்திருப்பது பெரிய விஷயம்தான்.”
சுந்தர்.சி. படத்தில் நடித்தது குறித்து?
“அவர் ரொம்ப ஜாலியான மனிதர். ‘கலகலப்பு’ என்னை ரொம்பக் கவர்ந்த படம். ஒருமுறை நேரில் சந்தித்தபோது, ‘சார்... நானும் உங்க படத்துல நடிக்கணும்’ என்று தமாஷாக சொன்னேன். உடனே ‘என்ன தலைவா கலாய்க்கறீங்களா?’னு கேட்டார்.
நான் உண்மையாகவே அப்படிக் கேட்டது தெரிந்ததும், ஒரே வாரத்தில் ‘தீயாய் வேலை செய்யணும் குமாரு’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார்.
இது எனக்குப் பிடித்தமான கதை. கூடவே அழகான ஹன்சிகாவுக்கு ஜோடி எனும்போது கேட்கவா வேண்டும்?
எனக்கும் ஹன்சிகாவுக்கும் இடையே காதல் டாக்டர் என்ற பெயரில் சந்தானம் வருவார். ரொம்ப ஜாலியாகப் போகும் கதை இது. ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பாங்க.”
Tamil Murasu

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக