வெள்ளி, 14 ஜூன், 2013

அலகாபாத் – திரிவேணி சங்கம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்று இந்த அலகாபாத் நகரமாகும். ஹிந்துக்களின் முக்கியமான யாத்ரீக நகரமாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் நவீன இந்தியாவை உருவாக்கியதில் ஒரு முக்கியமான பங்களிப்பையும் இது கொண்டிருக்கிறது. பிரயாக் அல்லது பிரயாகை என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட இந்நகரம் வேதங்கள் மற்றும் ராமாயணம் மஹாபாரதம் போன்ற காவியங்கள் போன்றவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அலகாபாத் புகைப்படங்கள் - ஒளிவெள்ளத்தில் தகதகக்கும் நதிவெள்ளம்!

வரலாற்றுப்பின்னணி

1575ம் ஆண்டில் மாமன்னர் அக்பர் இந்நகரத்தின் பெயரை இல்லாஹாபாஸ் என்று மாற்றினார். அதுவே பின்னர் அலாகாபாத் என்று திரிந்து நிலைத்துவிட்டது.

வட இந்தியாவில் ஒரு முக்கியமான நீர்ப்பாதை கேந்திரமாக திகழ்ந்த இந்த நகரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த அக்பர் இங்குள்ள புனித சங்கம ஸ்தலத்திற்கு அருகேயே ஒரு கோட்டையை உருவாக்கினார்.

நூற்றாண்டுகளுக்கு பின்னர் ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் இந்நகரம் முக்கிய பங்காற்றி வரலாற்றில் தனி இடத்தை பெற்றது. இந்த நகரத்தில் முதல் இந்திய தேசிய காங்கிரஸ் 1885ம் ஆண்டில் பிறந்தது. 1920 களில் மஹாத்மா காந்தி இங்குதான் தனது அஹிம்சா வழி போராட்டத்தை கையில் எடுத்தார்.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது அலாகாபாத் நகரம் வட மேற்கு பிராந்தியத்தின் கேந்திரமாக திகழ்ந்திருந்தது. காலனிய ஆட்சியின் மிச்சங்களை இங்குள்ள மூயிர் கல்லூரி மற்றும் ஆல் செயிண்ட்ஸ் கதீட்ரல் போன்ற வரலாற்றுச்சின்னங்களில் தரிசிக்கலாம்.

அலாகாபாத் நகரத்தின் யாத்ரீக முக்கியத்துவம்

பொதுவாக இன்று அலாகாபாத் நகரம் ஹிந்துக்களின் முக்கியமான புனித யாத்திரை ஸ்தலமாக அறியப்படுகிறது. புராணிக ஐதீகங்களின்படி பிரம்மா இந்த நகரத்தை ‘பிரகிரிஷ்ட யாகத்துக்கான ஸ்தலமாக தேர்ந்தெடுத்ததாக சொல்லப்படுகிறது.

‘தீர்த்த ராஜ்’ என்று இந்த ஸ்தலத்திற்கு அவர் பெயரிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது யாத்ரீக ஸ்தலங்களுக்கெல்லாம் ராஜா என்பது அந்த பெயரின் பொருள்.

சங்கம் எனும் முக்கியமான ஆற்று சங்கம ஸ்தலம் இந்த அலாகாபாத் நகரில் தான் அமைந்துள்ளது. கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று புனித ஆறுகள் அலாகாபாத் பகுதியில் சங்கமிக்கின்றன.

இந்த சங்கம ஸ்தலத்தில் தான் உலகிலேயே அதிக அளவில் மக்கள் திரளும் திருவிழாவான மஹா கும்ப மேளா நடைபெறுகிறது. இந்தியா மற்றும் உலகெங்கிலுமிருந்து ஏராளமான யாத்ரீகர்கள் இந்த கும்ப மேளாவில் கலந்து கொண்டு சங்கமத்தின் புனித நீராடலில் ஈடுபடுகின்றனர்.

இது தவிர பல்வேறு மதச்சடங்குகள் மற்றும் திருவிழாக்களுக்கான ஸ்தலமாகவும் இந்த ஆற்றுச்சங்கமம் பிரசித்தி பெற்றுள்ளது.
மஹா கும்ப மேளா

12 வருடங்களுக்கு ஒரு முறை இந்த மஹா கும்ப மேளா எனும் திருவிழா கொண்டாடப்படுகிறது. கடைசியாக 2001ம் ஆண்டில் இது கொண்டாடப்பட்டது. இதில் 4 கோடி பேர் கலந்துகொண்டதாக சொல்லப்படுகிறது.

உலகிலேயே வேறு எந்த திருவிழாவிற்கும் இவ்வளவு எண்ணிக்கையில் மக்கள் இதுவரையில் திரண்டதில்லை என்று பதிவாகியிருக்கிறது.

மஹா கும்ப மேளாவைத்தவிர அர்த் மேளா எனும் திருவிழாவும் ஆறு வருடங்களுக்கு ஒரு முறை இங்கு கொண்டாடப்படுகிறது. வருடாந்திரமாக மஹா மேளா என்று ஒரு திருவிழா சங்கமப்பகுதியில் நடத்தப்படுகிறது.

எலும்புகளை உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாது மக்கள் தங்கள் பாவங்களை கரைப்பதற்காக அப்போது புனித நீராடலில் ஈடுபடுகின்றனர். மஹா கும்ப மேளாவின்போது அலாஹாபாத் நகரம் முழுமையும் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த யாத்ரீகர்களால் நிரம்பி சுற்றுலா கேந்திரம் போன்று காட்சியளிக்கிறது.

காலப்போக்கில் அலாகாபாத் நகரம் இந்தியாவின் கலாச்சார, ஆன்மீக மற்றும் வரலாற்றும் பரிமாணங்களை நிலை நிறுத்துவதில் முக்கிய பங்காற்றி வந்திருக்கிறது.

மஹாதேவி வர்மா, ஹரிவன்ஷ் ராய் பச்சன், மோதிலால் நேரு , ஜவஹர்லால்நேரு போன்ற பிரபல்யங்கள் இந்த நகரத்தை சேர்ந்தவர்கள் ஆவர். எனவே ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் வரலாறு போன்ற முக்கியமான அம்சங்களைக்கொண்ட சுற்றுலா நகரமாக அலகாபாத் திகழ்வதில் வியப்பில்லை.

அலாகாபாத் நகரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்

கோயில்கள், கோட்டைகள், பல்கலைக்கழகங்கள் என்று எராளமான அம்சங்கள் இந்த நகரத்தில் நிரம்பியிருக்கின்றன. முக்கியமான ஹிந்து யாத்ரீக ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ள இந்நகரில் பாதல்புரி கோயில், ஹனுமான் கோயில், பேட் ஹனுமான் ஜி கோயில், ஷிவ்கோடி மஹாதேவ் கோயில், அலோபி தேவி கோயில், கல்யாணி தேவி கோயில், மண்கமேஷ்வர் கோயில், நக்வாசுகி கோயில் மற்றும் பேனி மஹாதேவ் கோயில் ஆகியவை உள்ளன.

ஆனந்த் பவன் எனும் ஜவஹர்லால் நேரு நினைவு இல்லம் ஒரு முக்கியமான அம்சமாக அலாகாபாத் நகரத்தில் புகழ் பெற்றிருக்கிறது. இந்த இல்லம் சுதந்திர போராட்ட காலத்தில் தலைவர்கள் ஒன்று கூடி அலோசிப்பதற்கு பயன்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் ஆங்கிலேயர் கால மற்றும் முகலாயர் காலத்தை சேர்ந்த பல வரலாற்று மிச்சங்களையும் இந்நகரத்தில் காணலாம். அலாகாபாத் கோட்டை, மின்டோ பார்க், மற்றும் ஆல்ஃப்ரெட் பார்க் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

தோர்ன்ஹில் மேய்ன் மெமோரியல் மற்றும் குஸ்ரோ பாக் எனப்படும் சுற்றுச்சுவருடன் கூடிய பூங்கா ஆகியவையும் இங்குள்ள இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.

இந்தியாவிலுள்ள முக்கிய கல்விக்கேந்திரங்களில் ஒன்றாகவும் அலாகாபாத் நகரம் புகழ் பெற்றிருக்கிறது. இங்குள்ள அலாஹாபாத் பல்கலைக்கழகம் இந்தியாவிலுள்ள பழமையான ஆங்கில மொழிப்பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.

சர் வில்லியம் முயிர் என்பவரால் இந்த பல்கலைக்கழகத்தை துவங்கியுள்ளார். தற்போது அவரது பெயரில் முயிர் கல்லூரி என்று வேறொரு கல்லூரியும் இந்நகரத்தில் உள்ளது.

அலாகாபாத் நகரத்தில் மற்றொரு முக்கியமான் அம்சமாக ஜவஹர் பிளானட்டேரியம் அமைந்திருக்கிறது. இங்கு பயணிகள் சூரிய குடும்பத்து கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் போன்றவற்றை வானோக்கியின்மூலம் தரிசிக்கலாம்.

மேலும், அலாகாபாத் நகரத்தில் உள்ள உயர்நீதிமன்றம் நாட்டில் முதன்முதலாக அமைக்கப்பட்ட உயர்நீதிமன்றங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

பயணத்துக்கு உகந்த பருவம்

நவம்பர் மாதம் முதல் மார்ச் வரையிலான காலம் இந்நகரத்திற்கு சுற்றுலா விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. இவை தவிர்த்த மற்ற மாதங்களில் இந்நகரம் அதிக உஷ்ணம் மற்றும் வறட்சியுடன் காணப்படும். முக்கியமான யாத்ரீக தலமாக இருப்பதால் ஆன்மிக திருவிழாக்காலங்களில் இந்நகரத்திற்கு அதிக பயணிகள் வருகை தருகின்றனர்.
பயண வசதிகள்

விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கம் ஆகிய மூவழிகளின் மூலமாகவும் எளிதில் சென்றடையும்படி போக்குவரத்து வசதிகளை இந்நகரம் கொண்டிருக்கிறது.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல