இங்கிலாந்து நாட்டில் வோஸ்டர்ஷயர் பகுதியில் ரெட்டிச் என்ற இடத்தில் உள்ளது இங்கிலாந்து வாக்வுட் சர்ச் நடுநிலை பள்ளி. மிகவும் புகழ்பெற்ற இந்த பள்ளியில் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் படிக்கின்றனர். இந்த பள்ளி நிர்வாகம் இப்போது வெளியிட்டுள்ள உத்தரவில், ஒன்பது வயதுக்கு மேற்பட்ட மாணவிகள் குட்டை பாவாடை அணிந்து வரக் கூடாது என்று அறிவித்துள்ளது. இந்த உத்தரவு செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும் அறிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த பள்ளி மாணவர்களும், மாணவிகளும் 2014ம் ஆண்டு முதல் ஒரே மாதிரியான பேன்ட் அணிந்து வர வேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும் மாணவர்கள், மாணவிகள் இருதரப்பினரும் முழுக்கை சட்டை அணிய வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில், சிறுமிகள் அநியாயத்துக்கு மிகமிக குட்டையாக பாவாடை அணிந்து வருகின்றனர். ஸ்கர்ட்டை கொஞ்சம் நீளமாக அணிந்து வாருங்கள் என்று கூறினால் கேட்பதில்லை. ஒன்பது வயதிலேயே மாணவிகள் இளம் பருவ தோற்றத்தை அடைந்து விடுகின்றனர்.
இதனால் மாணவிகள் குட்டை பாவாடை அணிவது அவர்களை இளம்பெண்கள் போல தோற்றம் அளிக்க செய்து விடுகிறது. அதை தவிர்க்கவும் கீழே உட்கார்ந்து படிக்கும் போது தர்ம சங்கடத்தை தவிர்க்கவும் ஸ்கர்ட் அணிய தடை கொண்டு வரப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.ஆனால், இந்த திட்டம் மாணவிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஏற்கனவே இங்கிலாந்தில் 63 பள்ளிகளில் ஸ்கர்ட் அணிய தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆந்தைரிப்போர்ட்டர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக