செவ்வாய், 16 ஜூலை, 2013

திருமண விருந்துபசாரத்தில் கோழி இறைச்சி துண்டுக்காக சண்டை (படங்கள் இணைப்பு)

- மூக்கு உடைபட்டு மயங்கி விழுந்த மணமகளின் சகோதரி

திருமண விருந்துபசார நிகழ்வொன்றில் கோழி இறைச்சித் துண்டுக்காக இடம்பெற்ற கைகலப்பில், மணமகளின் சகோதரி மூக்கு உடைபட்டு மயங்கி விழுந்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

Day of joy: Ben and Karyssa pose for their wedding photo with maid-of-honour Krystal, left, and best man Danny Smethurst, right, before the reception turned sour

நோர்போக்கில் யார்மவுத் எனும் இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மேற்படி திருமண விருந்துபசார கைகலப்பு குறித்து பிரித்தானிய ஊடகங்கள் திங்கட்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.

மணமகனான பென் சமெதேர்ஸ்ட் (26 வயது) மணமகளான கரிஸ்ஸா (28 வயது) ஆகியோரது திருமண விருந்துபசாரம் நோர்போக்கிலுள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்ற போதே இந்தக் கைகலப்பு இடம்பெற்றுள்ளது.

திருமணத்தில் கலந்துகொண்ட குடும்பத்தினர் உணவை எடுப்பதற்காக வரிசையில் காத்திருந்த போது, மாப்பிள்ளைத் தோழனான டன்னி தனது 11 வயது மகனுக்காக கோழி இறைச்சித் துண்டொன்றை எடுப்பதற்காக உணவுக்காக காத்திருந்தவர்களை முண்டியடித்துக்கொண்டு முன்னே சென்றுள்ளார். இதனால் கடும் சினமடைந்த மணமகளின் மாமனாரான கோட் ஹக்கெஸ் (53வயது) டன்னியுடன் ஹக்கெஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
Wedding disaster: Ben and Karyssa Smethurst had their special day ruined when her uncle started a fight with Ben's brother at the buffet and allegedly punched him and Karyssa's father as well as gave Karyssa's sister Krystal a broken nose and two black eyes, leaving her unconscious for 20 minutes

இதன் போது அவரைத் தடுக்க முயற்சித்த மணப்பெண்ணின் சகோதரியான கிறிஸ்டல் கொல்மானின் (29 வயது) மூக்கில் ஹக்கெஸ் முஷ்டியால் குத்தவும் அவர் மயங்கி விழுந்துள்ளார்.

இந்நிலையில் ஹக்கெஸ் மாப்பிள்ளைத் தோழனையும் தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தில் மணப்பெண்ணின் தாயாரான லிஸா கோல்மனும் தள்ளி வீழ்த்தப்பட்டார்.

இதனையடுத்து 8 மாத கர்ப்பிணியான மணப்பெண்ணான கரிஸ்ஸா மயங்கி விழுந்த தனது சகோதரியை காரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

கைகலப்பு இடம்பெற்ற போது ஹோட்டல் நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு அது தொடர்பில் அறிவிக்கவும் சுமார் 10 பொலிஸ் வாகனங்கள் அந்த ஹோட்டலை முற்றுகையிட்டுள்ளன.

தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட ஹக்கெஸ், பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல