இரவு நேரத்தில் படுக்கையில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த நபரொருவர் மாடொன்று வீட்டுக் கூரையை உடைத்துக் கொண்டு அவர் மீது விழுந்ததால் பரிதாபகரமாக மரணத்தை தழுவிய சம்பவம் தென்கிழக்கு பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.
கரரிங்கா நகரைச் சேர்ந்த ஜோவோ மரியா டி சொயுஸா (45 வயது) என்ற நபரே இவ்வாறு மரணத்தைத் தழுவியுள்ளார்.
சொயுஸாவின் அருகில் உறங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி லெனி இந்த சம்பவத்தில் எதுவித காயமுமின்றி மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார்.
இரவு வேளையில் பண்ணையொன்றிலிருந்து தப்பி வந்த மாடு செங்குத்து பாறை சரிவின் கீழிருந்த மேற்படி தம்பதியின் வீட்டின் மீது குதித்ததையடுத்து கூரை உடைந்து மாடு, வீட்டினுள் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த சொயுஸாவின் மீது விழுந்துள்ளது.
இந்நிலையில் ஒன்றரை தொன் நிறையுடைய மாட்டின் உடலின் கீழ் சிக்கி அவர் நசுங்குண்டுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சொயுஸா, உடலினுள் ஏற்பட்ட குருதிப் பெருக்கால் மரணத்தை தழுவியுள்ளார்.
மாடு வீட்டின் மீது விழுந்த போது அந்த வீட்டில் பச்சிளம் குழந்தையொன்றும் சிறுவன் ஒருவனும் இருந்துள்ளமை குறிப் பிடத்தக்கது.

The roof of a home in Caratinga, Brazil, was damaged
The cow that fell through the roof of a home in Brazil is believed to have escaped from a nearby farm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக