சர்க்கரை நோய் - அதாவது நீரிழிவு நோய்- உள்ளவர்களுக்கு சற்று ஆறுதலளிக்கும் வகையிலான ஒரு செய்தி, ஒரு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
விட்டமின் 'சி' அடங்கிய உணவுகளைப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வ தால், இதயநோய் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் என்பதே அது.
'சி ரியாக்டிவ் புரோட்டீன்' - சுருக்கமாக சி.ஆர்.பி. ஏற்படுவதாலேயே இதய நோயும், சர்க்கரை நோயும் எளிதில் தாக்கக்கூடும் என்றும், சி.ஆர்.பி. பாதிப்பை விற்றமின்-சி சத்து கட்டுப்படுத்துவதால், அந்நோய்கள் பாதிப்பில் இருந்து தப்பலாம் என்றும் கலிபோர்னியாவில் அண்மையில் நடத்தப் பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இதே ஆவில் விற்றமின்-ஈ கொண்ட உணவுப் பொருட்களை அன்றாடம் எடுத்துக் கொள்வதால் உடலுக்கு பெரிய அளவில் பலன் ஏதும் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
விற்றமின் 'சி' சத்து முழு நெல்லிக்காயில் அதிகம் உள்ளது. தொடர்ந்து இரு மாதங்கள் நாள் ஒன்றுக்கு நான்கு நெல்லிக்காய்கள் வீதம் பத்து சர்க்கரை நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. இவர்கள் அனைவருக்கும் இருந்த சர்க்கரையின் அளவு 220 முதல் 280 வரை.
இரண்டுமாத ஆராய்ச்சிக்குப் பின்னர் இவர்கள் அனைவருக்கும் 150 முதல் 170க்குள் சர்க்கரை அளவு குறைந்து வதுள்ளதை இந்த ஆய்வு உறுதி செய்துள்ளது.
இந்த ஆராய்ச்சியானது இரண்டு மாதம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும், நீண்டகால சோதனையில் என்ன விளை வுகள் ஏற்படும் என்பதை தெரிவிக்க இய லாது என்றும் ஆய்வு முடிவு அறிக்கை கூறுகிறது.ஆகையால், முடிந்தவரையில் சர்க்கரை நோயாளிகள் விற்றமின் 'சி' சத்தை எடுத்துக் கொள்வது நல்லது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக