இதற்கு இரண்டு வழிகள் உள்ளன. முதலில் கூகுள் டாகுமெண்ட் செல்லுங்கள். அதில் நீங்கள் காப்பி செய்து, வேர்ட் பைலாக மாற்ற விரும்பும் டெக்ஸ்ட் மற்றும் படங்களைக் காப்பி செய்திடவும். முழுவதும் வேண்டும் எனில், Ctrl + A கீகளை அழுத்தி, தேர்வு செய்து, பின்னர், Ctrl + C கீகளை அழுத்தவும். தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த டெக்ஸ்ட்டை, வேர்ட் பைலாக மாற்ற, வேர்ட் புரோகிராமினைத் திறந்து, புதிய பைல் ஒன்றை உருவாக்கி, அதில் அப்படியே Ctrl + V கீகளை அழுத்துவதன் மூலம் பேஸ்ட் செய்திடவும். நீங்கள் கூகுள் டாக்ஸ் கொடுக்கும் Edit>Copy பயன்படுத்தினால், எர்ரர் மெசேஜ் தான் கிடைக்கும்.
அடுத்து கூகுள் டாக்ஸ் பயன்படுத்தி டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கிப் பின்னர், அதனை வேர்ட் பைலாக எப்படி மாற்றுவது எனப் பார்க்கலாம். கூகுள் டாக்ஸ் தரும் File மெனுவினைத் திறக்கவும். அடுத்து, Download as என்பதில் கிளிக் செய்திடவும். இதனைத் தொடர்ந்து Word என்பதில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். இதில் Open with என்ற இடத்தில் கிளிக் செய்து, மைக்ரோசாப்ட் வேர்ட் புரோகிராமுடன் திறந்திடச் சரியான தேர்வை மேற்கொள்ளவும். அடுத்து சேவ் பைல் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால், குறிப்பிட்ட டாகுமெண்ட் வேர்ட் பைலாக சேவ் செய்யப்படும். ஓகே பட்டன் அழுத்தி வெளியேறவும். இனி இந்த வகையில் சேவ் செய்த பைலை வேர்ட் டாகுமெண்ட்டாகத் திறந்து பயன்படுத்தலாம்.
இந்த இரண்டாவது வழி, வேர்டில் தரப்பட்டுள்ள சேவ் அஸ் போலவே இருப்பது போலத் தெரியும். இதில் உள்ள ஒரே வித்தியாசம், கூகுள் டாக்ஸ் சேவ் அஸ் என இந்த செயல்பாட்டிற்குப் பெயர் தராமல், டவுண்லோட் வித் என அழைக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக