மரணத்தின் மடியில் போராடிக் கொண்டிருந்த எத்தனையோ பேரின் கடைசி நாள் நிலைமையை அவர்களின் சொந்த பந்தங்களுக்குப் போய்ச் சொன்ன தந்தி சேவைக்கு இன்று கடைசி நாள் என்பதை நினைக்கும் போது கஷ்டமாகதான் இருக்கிறது..இதையடுத்து கடைசி நாளான இன்று தந்தி
கொடுக்க வருபவர்களை வீடியோ படம் எடுக்க உள்ளனர்.மேலும்
தந்தி சேவை நிறுத்தப்படவுள்ள நிலையில், இ-போஸ்ட் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தபால் துறை அழைப்பு விடுத்துள்ளது.
துரித வகையில் செய்தி பரிமாற்றம் செய்வதற்கு ஏராளமான மின்னணு சேவைகள் உருவாகி விட்ட சூழலில் தனித்துவமான தும், தொன்மை கால சேவையுமான தந்தி சேவை ஜூலை 15 அன்று இந்தியாவில் மூடப்படு கிறது. இதையடுத்து தந்தி சேவையை கடைசியாக பயன்படுத்த ஜூலை 14 தேதி இரவு 7 மணிக் குள் தங்களது ஆசையை தீர்த்துக் கொள்ளலாம்.
ஒரு காலகட்டத்தில் தந்தி என்று சொன்னால் மக்கள் அஞ்சிய காலம் அது. வேலை நியமனத்துக்கு தந்தி வந்தால் கூட அது என்னவென்று தெரியாமல் அழுது புரண்ட காலமும் உண்டு. காலமானார் என்ற செய்தியை அனுப்பவே பெரும்பாலும் தந்தி பயன்பட்டதால் இந்த அவலம் நடந்தது. உங்களால் ஒரு திருமணத்துக்கு செல்ல முடியவில்லை என்றால் வாழ்த்துச் செய்தியை கூட தந்தி மூலம் அனுப்பி விடலாம். இன்று வரை கூட அந்த நடைமுறை உள்ளது.
இந்நிலையில் தந்தி சேவை நட்டத் தில் ஓடுவதால் அதை மூடுவ தாக பாரதிய சஞ்சார் நிகாம் லிமிடெட் கூறுகிறது. ”தந்தி சேவையின் மூலம் ஆண்டுதோறும் ரூ.75 லட்சம் மட்டுமே வருவாய் கிடைக்கிறது.
ஊழியர்களின் சம்பளம் மற்றும் பராமரிப்புப் பணிக்காக ஆண்டுக்கு ரூ. 100 கோடியை பி.எஸ்.என்.எல். நிறுவனம் செலவிடுகிறது. செல்போன் மற்றும் இணையத்தின் பயன்பாடு அதிகரித்துவிட்டதால், தந்தி சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது” என்று தந்தி சேவையை நிறுத்துவதற்கு சொன்ன காரணங்களை ஊழியர் சங்கங்கள் ஏற்றுக் கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அரசு தன் முடிவை மாற்றிக் கொள்ள தயாராயில்லை. வழக்கறிஞர்கள் சங்கங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதற்கிடையில் தந்தி சேவையைப் போன்றே இ-போஸ்ட் சேவையை இந்திய தபால்துறை வழங்குகிறது. இச்சேவையில், ஏ4 பக்க அளவிலான செய்திக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.மின்னஞ்சலின் வேகத்துடன் இணைந்து இச்சேவை வழங்கப்படுகிறது.கணினிமயமாக்கப்பட்ட அனைத்து தபால் நிலையங்களிலும் இச்சேவை அளிக்கப்படுகிறது.
அச்சடிக்கப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட தகவலை, இ-போஸ்ட் மையத்தில் கொடுத்தால், அது ஸ்கேன் செய்யப்பட்டு இணையம் மூலம் மின்னஞ்சல் செய்யப்படும். விநியோகிக்கப்படும் மையத்தில் அத்தகவல் பிரின்ட் எடுக்கப்பட்டு, உறையிலிடப்பட்டு தபால்காரர் மூலம் உரிய முகவரியில் சேர்க்கப்படும்.தபால் முகவரி தவிர, உலகின் எந்தப்பகுதியில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் கொண்டு சேர்ப்பதற்கும் இச்சேவையைப் பயன்படுத்தலாம்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக இ-கார்ப்பரேட் எனும் சிறப்புத் திட்டம் அமலில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒரே சமயத்தில் 9,999 முகவரிகளுக்கு தகவல் அனுப்பலாம். இதற்கு ஏ4 பக்க அளவிலான தகவலுக்கு ரூ.6 கட்டணமாக வசூலிக்கப்படும். ஒரே முறை குறைந்தது 50 அல்லது அதற்கு அதிகமான முகவரிக்கு தகவல் அனுப்பும் நிறுவனங்களுக்கு ஒரு பக்கத்துக்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும்.பொதுமக்களும், வர்த்தக நிறுவனங்களும் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தபால் துறை அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக