ஞாயிறு, 28 ஜூலை, 2013

உலகில் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்ற முதலாவது ஆண் விவாகரத்து வழக்கு !! – படங்கள் இணைப்பு

உலகில் முதன்முதல் கர்ப்பம் தரித்து பிள்ளை பெற்ற ஆண் என்கிற பெருமைக்கு உரியவர் Thomas Beatie. வயது 38. 2008 ஆம் ஆண்டில் முதல் குழந்தையை பிரசவித்தார். இவருக்கு மூன்று குழந்தைகள்.

மனைவியின் பெயர் Nancy. வயது 49. 09 வருட திருமண வாழ்க்கையை தொடர்ந்து Nancy இடம் இருந்து விவாகரத்து கோருகின்றார். Nancy மது அருந்துகின்ற பழக்கம் உடையவர் என்றும் மது அருந்திய பிற்பாடு வன்முறையாளராக மாறி விடுகின்றார் என்றும் குற்றம் சுமத்துகின்றார். குறிப்பாக குழந்தைகள் முன்னிலையில் வைத்து அடிக்கின்றார் என்றும் கவட்டுக்குள் அடிக்கின்றார் என்றும் கூறுகின்றார். இதனால் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு வந்து உள்ளது என்கின்றார்.

அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்து உள்ளார். இதில் ஜனவரி மாதம் இடம்பெற்ற சம்பவம் ஒன்றை குறித்து விவரித்து உள்ளார். ஒவ்வொரு இரவைப் போல அன்றும் Nancy உள மற்றும் உணர்வு ரீதியாக துன்புறுத்தினார் என்று Beatie விளங்கப்படுத்தி இருக்கின்றார்.

ஆனால் Nancy இன் குற்றச்சாட்டுக்கள் வேறு விதமாக உள்ளன. இருவருக்கும் இடையிலான உறவை Beatie துஷ்பிரயோகம் செய்து உள்ளார் என்று நீதிமன்றத்துக்கு எழுத்துமூலம் அறிவித்து உள்ளார்.

ஆயினும் Beatie, குழந்தைகள் ஆகியோரை Nancy சந்திக்க கூடாது என்று அமெரிக்க நீதிபதி ஒருவர் தடை பிறப்பித்து உள்ளார்.

Beatie வெளித் தோற்றத்துக்கு ஆணை போல காட்சி அளித்தாலும் பெண்களுக்கு உரிய இனப் பெருக்க உறுப்புகளை பிறப்பில் இருந்து கொண்டிருக்கின்றார். இவர் பிறப்பால் ஒரு பெண். 1974 ஆம் ஆண்டு Hawaii இல் பிறந்தவர். 20 வயது வரை பெண்ணாக வாழ்ந்தவர். மோடல் அழகியாககூட பிரபலம் அடைந்து இருந்தார்.

20 களில் ஆண்களுக்கு உரிய உடுப்புக்களை அணிய தொடங்கினார். பிடித்துக் கொண்டது. மார்பகங்களை அகற்றிக் கொண்டார். ஹோர்மோன் சிகிச்சைகள் பெற்றார். சட்டப்படி ஆணாக பிரகடனப்படுத்திக் கொண்டார். ஆயினும் பிறப்புறுப்புக்களை மாற்றம் செய்யவில்லை. இவர் 2003 ஆம் ஆண்டு Nancy ஐ சந்தித்தார். இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர். Nancy ஒரு விதவை. ஏற்கனவே இரு குழந்தைகளுக்கு தாய். கருப்பை நீக்க அறுவைச் சிகிச்சை செய்தவர். இதனால் Nancy ஆல் மீண்டும் தாய் ஆக முடியாது.


ஆனால் குழந்தைகள் என்றால் Beatie இற்கு ரொம்ப பிடிக்கும். எனவே சட்டரீதியாக ஆண் என்று பிரகடனப்படுத்தப்பட்டு இருந்தாலும்கூட கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றெடுக்க தீர்மானித்தார் Beatie. இவரது உடலுக்குள் செயற்கை முறையில் 2007 ஆம் ஆண்டு விந்தணு உட்செலுத்தப்பட்டது. விந்தணு இன்னொருவரிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்டு இருந்தது. இவர் பெண் உறுப்புக்களை மாற்றி இருக்கவில்லை என்பதாலேயே கர்ப்பம் தரித்து குழந்தை பெற முடிந்து உள்ளது.

அண்மைய நாட்களில்தான் இவர் இனப் பெருக்க உறுப்புக்களை மாற்றிக் கொண்டார். செயற்கை ஆணுறுப்பு இவருக்கு வைத்தியர்களால் பொருத்திக் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆயினும் இதை இன்னமும் மனைவிக்கு காண்பிக்காமல் உள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல