சனி, 27 ஜூலை, 2013

தெரிஞ்சுக்கலாமா!

USB Universal Serial Bus: (யுனிவர்சல் சீரியல் பஸ்) கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் பிற சாதனங்களை எளிதாக இணைத்துப் பயன்படுத்த ஒரு வழி. ஸ்கேனர், மவுஸ், பிளாஷ் ட்ரைவ், பிரிண்டர் எனத் தற்போது அனைத்து சாதனங்களும் இதன் வழியே தான் கம்ப்யூட்டருடன் இணைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும்போதே இதனைப் பயன்படுத்தி சாதனங்களை இணைக்கலாம், நீக்கலாம்.

Control Panel: (கண்ட்ரோல் பேனல்) விண்டோஸ் இயக்கத்தின் ஸ்டார்ட் மெனுவில் தரப்படும் ஒரு டூல் என இதனைச் சொல்லலாம். இதன் மூலம் விண்டோஸ் இயக்கத்தின் அடிப்படைச் செயல்பாடுகளை செம்மைப் படுத்தலாம். அத்துடன் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் இணைந்த சாதனங்கள் செயல்படும் தன்மையையும் சீரமைக்கலாம்.

ஈதர்நெட் (Ethernet) என்பது ஸெராக்ஸ் நிறுவனத்தின் ட்ரேட் மார்க். அதே போல யூனிக்ஸ் என்பது ATT நிறுவனத்தின் ட்ரேட் மார்க்.

பைட் (‘byte’) என்னும் சொல் ‘by eight’ என்பதன் சுருக்கமாகும். ‘pixel’ என்பது ‘Picture cell’ or ‘Picture element என்பதன் சுருக்கமாகும்.

வை-பி (WiFi) என்னும் தொழில் நுட்பம் ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்துகிறது. இதனால் டேட்டாவை அனுப்புவர் மற்றும் பெறுபவர் இடையே எந்த வயர் இணைப்பும் தேவையில்லை. பொதுவாக வை-பி இத்தகைய இணைப்பினை 50 மீட்டர் சுற்றளவிற்குத் தருகிறது. அதிக வை-பி இணைப்பு கொண்டிருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தையும் அடுத்ததாக பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவையும் இடம் பெறுகின்றன.

டி.எப்.டி. (Thin Film Transistor): கம்ப்யூட்டர் மானிட்டர் மற்றும் டிஜிட்டல் கேமராக்களுக்கு மிகக் குறைந்த தடிமனில் தட்டை யான வண்ணத்திரை அமைக்கப் பயன்படுத்தும் ட்ரான்சிஸ்டரையும் தொழில் நுட்பத்தையும் குறிக்கிறது. இது நல்ல மேம்படுத்தப்பட்ட திரையைத் தருகிறது. இதனால் இதில் காட்டப்படும் படங்கள் மிகத் தெளிவான தன்மையைக் கொண்டவையாக இருக்கும். படங்களில் பல்லாயிரக்கணக்கில் லட்சக்கணக்கான வண்ணக் கலவை காட்டப்படும்.

ஆஸ்பெக்ட் ரேஷியோ (Aspect Ratio): ஒரு டிவியின் அல்லது மானிட்டரின் திரையின் அகல உயர விகிதத்தை ஆஸ்பெக்ட் ரேஷியோ என்கிறோம். வழக்கமான டிவிக்களின் திரை 4:3 என்ற விகிதத்தில் அமைந்திருக்கும். அதாவது 4 பங்கு அகலம் 3 பங்கு உயரம். தற்போது வருகின்ற புதிய ஸ்கிரீன்கள் 16:9 என்ற விகிதத்தில் அமைக்கப்படுகின்றன.

டபுள் லேயர் (Double Layer): டிவிடி ஒன்றில் இரண்டு அடுக்குகளில் தகவல்கள் பதியப்படுவதனை இச்சொல்லால் குறிக்கிறோம். எனவே வழக்கமான டிஸ்க்குகளின் கொள்ளளவுக்குப் பதிலாக இவ்வகை டிவிடிக்களில் 8.5 கிகாபைட் வரை இதில் தகவல்களைப் பதியலாம்.

Taskbar: (டாஸ்க் பார்) விண்டோஸ் இயக்கத்தில் மானிட்டர் திரையில் கீழாக இயங்கும் நீள் கட்டம். இதில் ஸ்டார்ட் மெனு, விரைவாக அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க ஐகான்கள் அடங்கிய தொகுப்பு, இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் பைல்களுக்கான கட்டங்கள் மற்றும் கடிகாரம், பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்கள் ஆகியவை இருக்கும். இவற்றைத் தேவைப் படும் போது கிளிக் செய்து பெறலாம்.

Driver: (ட்ரைவர்)விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் ட்ரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான டிரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் சிடியில் அவற்றிற்கான டிரைவர்கள் தரப்படும்.

Registry: (ரெஜிஸ்ட்ரி) விண்டோஸ் இயக்கத்துடன் இணைந்த ஒரு டேட்டா பேஸ் (தகவல் தளம்) இதில் அனைத்து ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் குறித்த தகவல்கள் எழுதப்பட்டு பதியப்பட்டிருக்கும். இவற்றுடன் பயன்படுத்துபவருக்கான விருப்பங்கள், செயல்பாடுகளுக்கான நிலைகள் உருவாக்கப்பட்டு பதியப்படும். விண்டோஸ் இயக்கம் இந்த தகவல் தளத்திலிருந்து தகவல்களைப் பெற்று செயல்படுவதால் சற்று கவனமாகவே இதனைக் கையாள்வது நல்லது.

யூசர் இன்டர்பேஸ்: யூசர் இன்டர்பேஸ் என்ற சொல் தொடரை அடிக்கடி இந்த பக்கத்தில் எழுதப்படுகின்ற குறிப்புகளிலும் கம்ப்யூட்டர் தொடர்பான நூல்களிலும் படித்திருப்பீர்கள். ஆனால் அது சரியாக எதனைக் குறிக்கிறது என்று ஒரு நேரமும் நாம் சிந்தித்ததில்லை. இதன் பின்னணியில் என்ன உள்ளது என்றும் எண்ணியதில்லை. கம்ப்யூட்டரில் ஒவ்வொரு முறை நீங்கள், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர், புதிய புரோகிராம் ஒன்றைப் பயன்படுத்தும் போது யூசர் இன்டர்பேஸ் ஒன்றைப் பயன்படுத்துகிறீர்கள். அடிப்படையில் ஒரு புரோகிராமோடு அல்லது கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்ட சாதனத்தோடு உங்களை இணைக்கும் வேலையை அறிமுக அடிப்படையில் செயல்படுவதே யூசர் இன்டர்பேஸின் வேலை. அந்த புரோகிராமுடன் வரும் சிறிய கண்ட்ரோல்கள் (எ.கா. மெனு, லிங்க், பட்டன், பைல், சவுண்ட் போன்றவை) அனைத்தும் இந்த யூசர் இன்டர்பேஸில் தான் காட்டப்படுகின்றன. ஒரு புதிய புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுகையில் உங்களுக்குக் கிடைக்கும் முதல் திரை ஒரு யூசர் இன்டர்பேஸ். அல்லது புதிய ஹார்வேர் சாதனம் ஒன்றை நீங்கள் கம்ப்யூட்டரில் இணைத்தால் கிடைக்கும் முதல் திரை ஒரு யூசர் இன்டர்பேஸ் ஆகும். அந்த புரோகிராம் உள்ளே செல்ல உங்களுக்கு ஒரு லைட் ஹவுஸ் போல செயல்படுவதே யூசர் இன்டர்பேஸ்.

பெரும்பாலும் அனைத்து புரோகிராம்களும் எளிய பயன்படுத்த இலகுவான இன்டர்பேஸையே அளிக்கின்றன. அதனை பயன்படுத்துவது எளிதாக இருப்பின் அதுவே அதனுடைய சிறப்பு தன்மை ஆகும். இன்டர்பேஸ்களில் பல வகை உண்டு. கிராபிகல் இன்டர்பேஸ், வெப் அடிப்படியிலான இன்டர்பேஸ், கட்டளை வரிகளில் செயல்படும் இன்டர்பேஸ் போன்ற வகைகளை எடுத்துக் காட்டுக்களாகக் கூறலாம். இது எத்தகைய புரோகிராமுடன் நீங்கள் செயல்படுகிறீர்கள் என்பதனைப் பொறுத்து மாறும். புதிய புரோகிராம் ஒன்றின் இன்டர்பேஸுடன் பழக சில நாட்கள் ஆகும். அது நீங்கள் அந்த புரோகிராமினைப் பயன்படுத்தும் நேரம் மற்றும் செயல்பாடுகளைப் பொறுத்தது ஆகும்.

ரீசைக்கிள் பின்: பைல்களை அழிக்கிறீர்கள். அவை எங்கே செல்கின்றன? ரீசைக்கிள் பின்னுக்குத்தான். இப்படியே அழித்துக் கொண்டு போகப் போக அவை அங்கு நிரம்பிக் கொண்டே இருக்கும். ஒரு நிலையில் என்ன பைல்களை எல்லாம் அழித்தோம் என்று தெரிய விரும்புகிறீர்களா? அல்லது நீக்கிய பைல்களை கம்ப்யூட்டரிலிருந்தே அழிக்க விரும்புகிறீர்களா? ரீசைக்கிள் பின் ஐகானில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Open என்பதனைக் கிளிக் செய்திடவும். இப்போது நீங்கள் அழித்த பைல்கள் தெரிய வரும். ஆனால் இவற்றை அங்கேயே கிளிக் செய்வதன் மூலம் படிக்க முடியாது. நீங்கள் மீண்டும் படிக்க விரும்பும் பைல்களை அந்த பைல் இருந்த டிரைவ் மற்றும் போல்டருக்குக் கொண்டு சென்ற பின்னரே படிக்க முடியும். இதற்கு மீண்டும் காண விரும்பும் பைலை செலக்ட் செய்து ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Restore என்ற பிரிவைக் கிளிக் செய்திட பைல் அதன் முந்தைய இடத்திற்குச் செல்லும். அங்கு சென்று அந்த பைலைத் திறந்து படித்துக் கொள்ளலாம்.

அப்ளிகேஷன்களுக்கிடையே: பல்வேறு அப்ளிகேஷன் புரோகிராம்களைத் திறந்து வைத்து பணியாற்றிக் கொண்டிருக்கும் சூழ்நிலையை உணர்ந்து பாருங்கள். எடுத்துக் காட்டாக வேர்ட், எக்ஸெல், பவர்பாயிண்ட், நோட்பேட், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், அக்செஸ் என பல புரோகிராம்கள் திறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது புரோகிராம்களுக்கிடையே பயணம் செல்ல ஆல்ட்+ டேப் அழுத்தித் திரையில் கிடைக்கும் புரோகிராம் ஐகான்களுக்கிடையே பயணம் செய்து தேவையான புரோகிராம்களில் கிளிக் செய்து திறக்கிறீர்கள். இதில் என்ன சிக்கல் என்றால் ஆல்ட் + டேப் அழுத்துகையில் அது இடது புறத்தில் இருந்து வலது புறமாகச் செல்லும். பின்னால் வராது. எடுத்துக் காட்டாக ஏழு புரோகிராம்களைத் திறந்திருக்கிறீர்கள். முதலாவதாக வேர்ட். அதனை அடுத்து இரண்டாவதாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஐகான் உள்ளது. நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சென்று விட்டால் மீண்டும் வேர்ட் வர அனைத்து புரோகிராம்களின் மீதும் தாவித்தான் வர முடியும். ஆனால் பேக் டிரைவிங் செல்ல ஒரு வழியும் உள்ளது. ஆல்ட் + டேப் கீகளுடன் ஷிப்ட் கீயை அழுத்துங்கள். உங்கள் கர்சர் பின் நோக்கி அடுத்தடுத்த ஐகான்களுக்குச் செல்லும். தேவையான புரோகிராம் கிடைக்கையில் நிறுத்தி அதனைத் திறக்கலாம்.

Virus: (வைரஸ்) கெடுதலை விளைவிக்கும் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம். கம்ப்யூட்டர் இயக்கத்தில் குறுக்கீடு தந்து எரிச்சலைத்தரும் என்பது முதல் கம்ப்யூட்டர் இயக்கத்தினையே முடக்கி வைக்கும் வரை பலவகையான நாச வேலைகளில் ஈடுபடும். கம்ப்யூட்டர்களுக்கிடையே பைல்கள் பரிமாறப்படுகையில் (இமெயில், சிடி,பிளாப்பி மற்றும் பிளாஷ் டிரைவ்) இவை அவற்றுடன் இணைந்து சென்று நாசத்தை உண்டாக்கும். இமெயில் மூலம் சென்ற பின்னர் அந்த கம்ப்யூட்டரில் இருக்கும் இமெயில் முகவரிகளுக்கு மெயில் அனுப்புவது போலத் தானும் சென்று நாச வேலையில் ஈடுபடும். வைரஸ் புரோகிராம் கள் பொதுவாக எந்த அறிகுறியும் காட்டாது கம்ப்யூட்டருக்குள் இருக்கும். ஏதாவது நாள் அல்லது செயல்பாட்டினை மேற்கொள்கையில் தூண்டிவிடப்பட்டு நாச வேலையை மேற்கொள்ளும்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல