இளவரசன் மரணம்.. உண்மை அறிய விசாரணை ஆணையம்: ஜெ. உத்தரவு!
சென்னை: தர்மபுரி இளவரசன் மரணத்தில் உண்மை நிலையை அறிய எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தர்மபுரி இளவரசனின் உடல் ரயில் தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டது. அவர் தலையில் அடிபட்டு இறந்திருக்கிறார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார் கூறி வந்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு இன்று விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், இளவரசன் மரணம் தொடர்பாக பலரும் பல கருத்தை தெரிவிப்பதால் உண்மை நிலையை அறிய எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதாக கூறியுள்ளார்.
படம்: இணையத்திலிருந்து பெறப்பட்டது
தகவல்:Thatstamil
இளவரசன் மர்ம மரணம்- விளக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு- ஞானதேசிகன்
சென்னை: தர்மபுரியில் இளவரசனின் மர்ம மரணத்தை பொது மக்களுக்கு விளக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என ஞானதேசிகன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் வெளியிட்ட அறிக்கையில்,தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த இளவரசன் தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் ஒரு பெரிய சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. இளவரசனின் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரு வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் காதலிப்பது என்பது தமிழகத்தில் நடைபெறுகிற ஒரு சாதாரண நிகழ்வு தான். இது ஒன்றும் புதிதல்ல.
ஆனால் ஒரு சமூகத்தைச் சார்ந்த சில பேர் இதற்கு சமூக சாயத்தை பூசியதன் விளைவாக அது சமுதாய மோதலாக மாறி, அதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த பல வீடுகள் தாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இரு சமூகத்தைச் சார்ந்தவர்களும் பாதிக்கப்பட்டனர். இதனால் 144 தடை உத்தரவு சில நாட்கள் முன்பு வரை அம்மாவட்டத்தில் இருந்து வந்தது.
இந்தச் சூழ்நிலையில் இளவரசன் மரணம் நிகழ்ந்திருக்கிறது. இது மிகவும் வருத்தமளிக்கிறது. இளவரசன் எப்படி இறந்தார் என்பதனை தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.
அதேநேரத்தில் இந்த நிகழ்வு சமூக விரோதமாக மாறிவிடக் கூடாது என்பதில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொறுப்பு உள்ளது.
உண்மையை கண்டறியும் முயற்சியில் நீதிமன்றம் தலையிட்டிருக்கிறது. அதே நேரத்தில் இளவரசன் காதலியான திவ்யாவிற்கும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனிமனித உறவுகள், சமூக பிரச்சினைகளாக மாற்றுவது இந்த சமுதாயத்திற்கு நல்லதல்ல. அதைவிட இந்த உறவுகள், அது சம்மந்தமான பிரச்சினைகளை அரசியலாக்குவது இன்னும் மோசமான விளைவுகளைத் தான் உருவாக்கும் என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Thatstamil
இளவரசன் மரணித்தது எப்படி... மனித உரிமைக் கழகத்தின் புலனாய்வுத் தகவல்கள்....!
சென்னை: தர்மபுரி இளவரசன் மரணம் தொடர்பாக மனித உரிமைக் கழகம் என்ற அமைப்பு தனது அமைப்பினருடன் இணைந்து புலனாய்வு நடத்தி தகவல்களை வெளியிட்டுள்ளது.
விவசாய விடுதலை முன்னணி அமைப்பினர் துணையுடன் நடத்தப்பட்ட இந்த புலனாய்வு குறித்த விவரம்...
ரயில் தண்டவாளம் அருகே இளவரசன் உடல் கிடந்தது என்பதால் அவர் ரயில் முன்னே பாய்ந்து தற்கொலை செய்திருப்பதாக ஆரம்ப செய்திகள் தெரிவித்தன. ஆனால் ஒரு ரயிலின் முன்னே ஆடு மாடு பாய்ந்து இறந்தால் கூட சம்பந்தப்பட்ட ரயிலின் டிரைவர் அதை அருகில் உள்ள ஸ்டேசன் மாஸ்டரிடம் தெரிவிப்பது வழக்கம். ஆனால் இளவரசன் உடல் கண்டெடுக்கப்பட்ட நேரத்தில் கடந்து சென்ற குர்லா எக்ஸ்பிரசின் ஓட்டுநர் அப்படி ஒரு தகவலை ஸ்டேசன் மாஸ்டருக்கு தெரிவிக்கவில்லை.
தருமபுரி ரயில் நிலையத்தின் கேங்க் மேன்னாக வேலை செய்து வரும் கவுடு எனும் தொழிலாளிதான் இளவரசன் உடலைக் கண்டு ஸ்டேசன் மாஸ்டருக்கு தெரிவித்திருக்கிறார். இத்தகவல்களை தருமபுரி ஸ்டேசன் மாஸ்டரும், தொழிலாளி கவுடுவும் உறுதி செய்திருக்கிறார்கள்.
3-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் இளவரசன் தருமபுரியில்தான் இருந்திருக்கிறார். அன்று நத்தம் காலனி இளைஞர்களுடன் வழக்கம் போலவே கலகலப்பாக பழகியிருக்கிறார்.
4-ம் தேதி காலையில் சுமார் 7 மணிக்கு அருகில் உள்ள மலையப்பன் நகருக்குச் சென்று அங்கே உள்ள தனது மாமா முருகனை, இளவரசன் சந்தித்திருக்கிறார். மாமாவிடம் தினத்தந்தியில் வந்த செய்தியினைக் காண்பித்து திவ்யா இப்படி கூறியிருக்கிறாளே இதற்கு மேல் நான் என்ன செய்ய முடியும் என்று கேட்டிருக்கிறார். இனி தனக்கு கிடைக்க இருக்கும் போலிஸ் வேலைக்கு செல்வதாகவும் கூறியிருக்கிறார்.
திவ்யாவின் தந்தை நாகராஜன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் இளவரசனும் சேர்க்கப்பட்டிருக்கிறார். அந்த வழக்கில் இருந்து தான் நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட பிறகு போலிஸ் வேலை கிடைப்பது உறுதி என்று இளவரசன் கருதியிருக்கிறார். அது வரை ஆந்திரா சித்தூருக்கு நண்பர்களுடன் சென்று வேறு வேலை பார்க்கப் போவதாக இளவரசன் தனது மாமாவிடம் சகஜமாக கூறியிருக்கிறார்.
பிறகு மாமாவிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு தனது அப்பாவிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார். இளவரசனது தந்தை தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேதப் பரிசோதனை துறையில் ரிப்போர்ட்டர் எனும் வேலை பார்த்து வருகிறார். அவரிடம் தொலைபேசியில் பேசிய இளவரசன், அப்பாவிடம் இருக்கும் பல்சர் இரு சக்கர வண்டி வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
அதன்படி அப்பாவைப் பார்த்து பல்சர் வண்டியினை வாங்கியிருக்கிறார். கூடவே ஏடிஎம்மில் எடுக்கப்பட்ட பணம் 9000-த்தை சீட்டு கட்டுவதற்காக அம்மாவிடம் கொடுத்திருப்பதையும் தந்தையிடம் கூறுகிறார்.
பல்சர் வண்டியினை அப்பாவிடம் வாங்கிக் கொண்டு தருமபுரி நகரப்பகுதியான பாரதிபுரத்தில் இருக்கும் அத்தையினை பார்க்கச் சென்றிருக்கிறார் இளவரசன். அங்குதான் அத்தையிடம் தருமபுரி அருகே உள்ள வண்ணாம்பட்டி எனும் நகரப்பகுதியில் இருக்கும் ஒரு நண்பனை பார்க்கச் செல்வதாக கூறியிருக்கிறார்.
இந்த நண்பர் வன்னியர் சாதியினைச் சேர்ந்தவர். 3-ம் தேதி இரவு இவர் நத்தத்தில் இளவரசனோடு அவரது வீட்டில் தங்கியிருக்கிறார். இவரை சந்திக்கச் செல்வதாக அத்தையிடம் கூறியிருக்கிறார் இளவரசன்.
அத்தையும் வெளியே தேவையின்றி சுத்தாதே என்றும், அடையாளம் தெரிந்து யாராவது அடித்துவிடக்கூடும், ஹெல்மெட் போட்டுக் கொண்டு போ எனக் கூறியிருக்கிறார். ஹெல்மெட் வேண்டாம் என்று கூறியபடி இளவரசன் நண்பனை பார்க்கச் சென்றிருக்கிறார்.
பிறகு மதியம் இளவரசன் தந்தைக்கு அவருக்கு தெரிந்த போலீஸ் பழனியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. அதன்படி தண்டவாளம் அருகே பல்சர் வண்டி நிற்பதாக கூறியிருக்கிறார் அந்த போலீஸ்காரர். அங்கே சென்ற பிறகுதான் தனது மகன் இறந்து கிடப்பது அவருக்கு தெரியும்.
இளவரசன் ரயிலில் பாய்ந்து அடிபட்டதற்கான பெரிய காயங்கள் அவரது உடலில் இல்லை. இடது கையில் ஒரு வெட்டுக் காயமும், தலை பிளந்தது போன்ற காயமும் இருந்தது. மூளை சிதறி இருந்தது. அவரது உடல் அருகே வாழைப்பழத் தோல் மற்றும் திறக்கப்படாத ஒரு மது பாட்டிலும் இருந்தது. கூட இருந்த பையில் 2011-ல் அவர்களுக்கிடையே பறிமாறப்பட்ட காதல் கடிதங்கள் இருந்ததாக போலிஸ் தெரிவித்திருக்கிறது.
இளவரசன் தந்தையிடம் பேசிய போது இது தற்கொலை என்பதை அவர் நம்ப முடியவில்லை. இளவரசனது ஊர் மக்களுடைய கருத்தும் அதுவேதான். ஏனெனில் தனக்கு எப்படியும் போலீஸ் வேலை கிடைக்கும், வேலை கிடைத்ததும் திவ்யா திரும்ப வருவாள் என்றுதான் பலரிடம் அவர் பேசியிருக்கிறார். பிரச்சினை வந்த போது தனது பெற்றோருக்கு அவரே ஆறுதல் சொல்வார் என்று தந்தை கூறுகிறார்.
புகைப்படம் - கவின் மலர்
Thatstamil
இளவரசன் கொலையில் நண்பருக்குத் தொடர்பா?.. புதிய பரபரப்பு
தர்மபுரி: தர்மபுரி இளவரசன் கொலையில் அவரது நெருங்கிய நண்பருக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இளவரசன் மரணத்திற்குப் பிறகு அவரைக் காணவில்லை. எனவே ஒன்று அவர் தலைமறைவாகியிருக்கலாம் அல்லது போலீஸ் பிடியில் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இவர் இளவரசனின் சமூகத்தைச் சாராதவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த நண்பரின் பெயர் பாரதி. இளவரசனுக்கு மிகவும் நெருக்கமானவர். இவருடன்தான் எப்போதும் நெருக்கமாக பழகி வருவார் இளவரசன் என்று கூறப்படுகிறது.
இளவரசன் கல்லூரி இடைவேளையிலும், விடுமுறை நாட்களிலும் அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள தண்டவாளம் அருகே உள்ள திண்டில் அமர்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருப்பார். இந்த விவரம் அவரது நண்பர் பாரதிக்கு தெரியும். அவர்தான் இளவரசனை கொலை செய்ய வந்த கும்பலுக்கு தகவல் தெரிவித்தார் என்று இளவரசனின் தந்தை இளங்கோவனும் கூறியுள்ளார் என்பதால் பரபரப்பு கூடியுள்ளது.
பாரதியின் செல்போன் எண் மற்றும் இளவரசனின் செல்போன் எண்களுக்கு வந்த அழைப்புகள் மற்றும் அவர்கள் யாரிடம் பேசினார்கள் என்ற விவரத்தையும், இளவரசன் இறந்த அன்று அவர் யாருடனெல்லாம் பேசினார் என்றும், அவர் செல்போன் சிக்னல் எந்தெந்த இடங்களை காட்டியது என்ற விவரங்களையும் தனிப்படை போலீசார் சேகரித்து விசாரித்து வருகிறார்கள்.
இருப்பினும் பாரதி விவகாரம் குறித்து போலீஸ் தரப்பில் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
Thatstamil
உயர்நீதிமன்ற நீதிபதிகளை விசாரிக்க வேண்டும்- இளவரசன் தந்தை பரபரப்பு கோரிக்கை
தர்மபுரி: எனது மகனுக்கும், திவ்யாவுக்கும் திருமணம் நடந்தது முதல் இளவரசரனின் மரணம் வரை பாமகவினர் சதித் திட்டம் நடத்தி அரங்கேற்றியுள்ளனர். எனவே டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் விதிமுறைகளை மீறி விசாரணை நடந்ததால் உயர்நீதிமன்ற நீதிபதிகளையும் விசாரிக்க வேண்டும் என்று இளவரசனின் தந்தை இளங்கோவன், தேசிய எஸ்.சி, எஸ்டி ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
ஆணைய இயக்குநர் வெங்கடேசனும், அகில இந்திய உறுப்பினர் சிவண்ணாவும் இன்று தர்மபுரி வந்தனர். பின்னர் இளவரசனின் ஊருக்கு அவர்கள் சென்று நடந்தது குறித்து கேட்டறிந்தனர்.
அப்போது இளவரசனின் தந்தை இளங்கோவன் சிவண்ணாவிடம் ஒரு மனு அளித்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது....
- எனது மகன், திவ்யா திருமணம் முதல் மரணம் வரை பாமகவினர் சதி செய்துள்ளனர். திட்டமிட்டு இதை அரங்கேற்றியுள்ளனர். இது எல்லாவற்றுக்கும் காரணம் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாமகவினர். டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் ஜே.குரு, முன்னாள் தர்மபுரி எம்.பி. செந்தில் ஆகியோர்தான் கூட்டணியாக மறைமுகமாக இந்தசதித் திட்டத்தை தீட்டி செயல்படுத்தியுள்ளனர். இவர்கள் அத்தனை பேர் மீதும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இளவரசனின் உடலை மறு பரிசோதனை செய்ய உத்தரவிடவேண்டும்.
- திவ்யாவுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க பரிந்துரைக்க வேண்டும்.
- இளவரசனின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் பரிந்துரைக்க வேண்டும்.
- உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆட்கொணர்வு மனு மீது சட்டவிதிகளுக்கு மாறாக நடைபெற்ற விசாரணையால் நீதிபதிகள் மீதும் விசாரணை செய்ய வேண்டும்.
-. இளவரசனை இழந்து தவிக்கும் எனது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
- எனது மகனின் மனைவி திவ்யாவை பாமகவினர் பிடியில் இருந்து மீட்க வேண்டும்.
- எனது மகனின் இறுதி ஊர்வலத்தில் ஜனநாயக தலைவர்களும் பங்கேற்க ஏதுவாக தர்மபுரி மாவட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை விலக்க வேண்டும் என்று கோரியுள்ளார் இளங்கோவன்.
Thatstamil
திவ்யா-இளவரசன் காதல் அரசியலுக்கான கருவியாக ஆக்கப்பட்டுள்ளது: சீமான் குற்றச்சாட்டு
சென்னை: தமிழரின் வாழ்வில் நீக்கமுடியாத ஒரு இடத்தைப் பெற்ற காதல் இன்றைக்கு தமிழினத்தை கூறுபோடும் சாதியப் பகைக்கும், தமிழினத்தின் ஒற்றுமைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. திவ்யா இளவரசன் காதல் அரசியலுக்கான கருவியாக ஆக்கப்பட்டுள்ளது என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தர்மபுரியைச் சேர்ந்த இளைஞர் இளவரசனின் மரணம் அவரது குடும்பத்தாருக்கு ஏற்பட்ட பெரும் துயரம் மட்டுமின்றி, காதலையும் வீரத்தையும் போற்றும் எம் தமிழ் தேசிய இனத்துக்கு ஏற்பட்ட ஒரு இழிவாகும்.
ஒரு பெண்ணிற்கும், ஒரு இளைஞனுக்கும் இடையே இயற்கையாகவும், இயல்பாகவும் ஏற்பட்ட ஒரு உறவை, சாதியமாக்கி, அரசியலாக்கியதன் விளைவு, அது முதலில் திவ்யாவின் தந்தையையும், இப்போது அவரை காதலித்து மணமுடித்த இளவரசனையும் பலி கொண்டுள்ளது பெரும் வேதனையாகும்.
தமிழர் வாழ்வில் வீரத்திற்கு இணையான உன்னத இடம் காதலுக்கு தரப்பட்டுள்ளது, நமது கல்வியில் கூட காதல் இலக்கியங்கள் இடம்பெறுகின்றன, காதலை மையக்கருவாக வைத்து வெளியான பல தமிழ்த் திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றதோடு, காலத்தால் அழியாத காவியங்களாக இன்றளவும் போற்றப்படுகின்றன.
இப்படி தமிழரின் வாழ்வில் நீக்க முடியாத ஒரு இடத்தைப் பெற்ற காதல் இன்றைக்கு தமிழினத்தை கூறுபோடும் சாதியப் பகைக்கும், தமிழினத்தின் ஒற்றுமைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. திவ்யா இளவரசன் காதல் அரசியலுக்கான கருவியாக ஆக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் பல நூற்றுக்கணக்கான காதலர்கள் பெற்றோர்களின் சம்மதத்துடனும், ஆதரவுடனும் மணம் செய்து கொண்டுதான் வருகிறார்கள். ஆனால் சில காதல் திருமணங்கள் மட்டுமே இப்படி சாதிய பார்வையாலும், தங்கள் சாதியின் மாண்பைக் காக்க புறப்பட்ட சாதிய அரசியல்வாதிகளாலும் பிரச்சனையாக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட பிரச்சனைகள், தமிழினமும், தமிழ்நாடும் தன்னை எதிர்நோக்கியுள்ள பல்வேறு பெரும் சிக்கல்களுக்காக போராட ஒன்றுபட்டு நிற்க வேண்டிய அடிப்படையை தகர்த்து விடுகிறது.
இதனை தமிழின மக்கள் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக இளைய சமுதாயம், நம் இனத்தின் ஒற்றுமையை பலவீனப்படுத்தும் சக்திகளை, அவைகளின் அரசியலை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும்.
நம்மை பிளக்கும் சாதிய சக்திகளையும், அவைகள் உருவாக்கும் கீழ்த்தரமான உணர்வுகளையும் புறந்தள்ளிட வேண்டும். இதனை செய்யத் தவறினால், தமிழனுக்கு என்று ஒரு அரசியலை உருவாக்கும் நமது முயற்சியும், நம் இனத்தின் விடுதலையும், உரிமை மீட்பும் கேள்விக்குறியாகிவிடும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Thatstamil
இளவரசன் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டதால் உடல் இன்னும் தர்மபுரி அரசு மருத்துவனை பிரேதக் கிடங்கிலேயே வைக்கப்பட்டுள்ளது. திவ்யா, தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். இளவரசன் மறைவுச் செய்தி அவரை சிதறடித்துள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனது ஊரில் தங்கியுள்ளார்.
திவ்யாவுக்கு நேற்று மனநல மருத்துவத்துறை நிபுணர்கள் கவுன்சிலிங் கொடுத்தனர். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மனநலத்துறைத் தலைவர் டாக்டர் ரவிசங்கர், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மனநலத் துறைத் தலைவர் டாக்டர் ராஜேசுவரி ஆகியோர் திவ்யாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கவுன்சிலிங் கொடுத்தனர்.
அப்போது தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க், கோட்டாட்சியர் மேனகா ஆகியோர் உடன் இருந்தனர். கவுன்சிலிங் முடிந்ததும் அவர்களை புகைப்படம் எடுக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவர்களை பார்க்க பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது இளவரசன் மரணம் குறித்து திவ்யாவிடம் கேட்டபோது தற்போது எந்த கருத்தும் தெரிவிக்கும் அளவுக்கு மனநிலை இல்லை என்று மட்டும் தெரிவித்தார் திவ்யா.
இந்த நிலையில் இளவரசன் உடலுக்கு திவ்யா அஞ்சலி செலுத்த வரலாம் என்ற எதிர்ரபார்ப்பு தர்மபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்திருக்கும் மக்களிடையே நிலவியது. பத்திரிக்கையாளர்களும் காத்திருந்தனர். ஆனால் திவ்யா வரவில்லை.
அதேசமயம், இறுதிச் சடங்கு நடக்கும்போது திவ்யா வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், திவ்யா இறுதிச் சடங்குக்கு வர வேண்டும் என்று இளவரசன் குடும்பத்தாரும், ஊர் மக்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் திவ்யா இருக்கும் நிலையில் அவர் வருவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இளவரசனின் முகத்தை கடைசியாகக் காண வருவாரா திவ்யா...?
தர்மபுரி: துணிச்சலுடன் கரம் பிடித்து, கலவரத்திலும் உறுதியாக நின்று, கடைசி வரை மீண்டும் வர மாட்டாளா என்று ஏங்கிப் போய் கடைசியில் உயிரிழந்து பிணமாகி விட்ட தனது காதல் கணவர் இளவரசனின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்க திவ்யா வருவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு இளவரசன் ஊர் மக்களிடம் நிலவுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக