டெஸ்க்டாப் ஐகான் கிளீன் அப் விஸார்ட் ஒரு தனி பயன்பாட்டு புரோகிராமாக, விண்டோஸ் எக்ஸ்பியில் கொடுக்கப்பட்டது. விண்டோஸ் 7ல் இது இல்லை. அதாவது, எக்ஸ்பியில் இருந்தது போல இல்லை. System Maintenance wizard என்ற ஒரு பெரிய தொகுதிக்குள் இது தரப்பட்டுள்ளது. பொதுவாக, இவை தாமாகவே இயங்கி வேலையை மேற்கொள்ளும். நீங்கள் இதனை இயக்க விரும்பினால், கீழ்க்கண்டபடி செயல்படவும்.
1. Troubleshooting மெனுவினைத் திறக்கவும். இதற்கு ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்து, கிடைக்கும் தேடல் கட்டத்தில் "Troubleshooting" என டைப் செய்து என்டர் தட்டவும். கிடைக்கும் தேடல் முடிவுகளில், முதல் லிங்க்கினைத் தேர்ந்தெடுத்துத் திறக்கவும்.
2. அடுத்து கிடைக்கும் விண்டோவில், System and Security என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Run Maintenance Tasks என்பதில் கிளிக் செய்திடவும்.
3.அடுத்து, வரிசையாக சில சோதனைகள் நடத்தப்பட்டு, விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்குவதில் பிரச்னைகள் உள்ளதா எனக் கண்டறியப்பட்டு, அதற்கான தீர்வுகளை வழங்கும். இதில் ஒன்று டெஸ்க்டாப் ஷார்ட்கட் சுத்தம் செய்வதாகும்.
இது பயன்படுத்தாத, பழைய ஷார்ட்கட் ஐகான்களின் பிரச்னையைத் தீர்க்கவில்லை என்றால், நீங்கள் சிகிளீனரைப் (CCleaner) பயன்படுத்தலாம். நிறுவனத்தின் இணைய தளத்தி லிருந்து இதனை இலவசமாகத் தரவிறக்கம் செய்து இயக்கலாம். இந்த புரோகிராம் தரும் சிஸ்டம் மெனுவில், என்று உள்ளதன் அருகே டிக் அடையாளத்தினை ஏற்படுத்த மறக்க வேண்டாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக