
எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
தக்காளி - 3 (அரைத்தது)
பச்சை மிளகாய் - 3-4 (பொடியாக நறுக்கியது)
எள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து சிக்கன் துண்டுகளைப் போட்டு 7-8 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பின்பு உப்பு, மிளகு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 5 நிமிடம் கிளறி, சிக்கனை தட்டில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதே வாணலியில் எள் மற்றும் சீரகம் போட்டு, 2 நிமிடம் வறுத்து, அரைத்து வைத்துள்ள தக்காளி, மஞ்சள் தூள், உப்பு மற்றும் மல்லி தூள் சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
இறுதியில் தனியாக வைத்துள்ள சிக்கனை சேர்த்து தீயை குறைவில் வைத்து, சற்று தண்ணீர் ஊற்றி சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும். குழம்பானது சற்று கெட்டியானதும், அடுப்பை அணைத்து விட வேண்டும்.
இப்போது சூப்பரான எள்ளு சிக்கன் குழம்பு ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து, சாதத்துடன் பரிமாறினால் அருமையாக இருக்கும்.
Thatstamil

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக