திங்கள், 12 ஆகஸ்ட், 2013

வீட்டிற்கு வந்த மதபோதகர்

ஒரு கிறிஸ்தவப் பிரசாரக் கூட்டத்தினர் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். இன்முகத்துடன்தான் வரவேற்றேன். உங்களிடம் சிறிது நேரம் உரையாடலாமா என்று ஆரம்பித்தார்கள். அப்படி என்ன பேச வருகிறார்கள், அவர்கள் பிரசாரத்தை எந்த விதத்தில் எவ்வாறு ஆரம்பிக்கிறார்கள் என்பதை அறியும் ஆர்வம் எனக்கு இருந்ததால் சம்மதம் தெரிவித்தேன்.

முதலில் என்னிடம் ஒரு கேள்வியிலிருந்து தொடங்கினர். “உங்களுக்கு வாழ்வில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா, இருந்தால் எங்களிடம் மனம் விட்டுக் கூறுங்கள். எங்களால் உங்கள் துன்பங்களையும் கவலைகளையும் தீர்க்க முடியாது என்றாலும் நம் தேவனால் கண்டிப்பாக அமைதியைக் கொடுக்க இயலும். அந்த அமைதியை உங்களிடம் கொடுக்கவே தேவன் எங்களை உங்களிடம் அனுப்பி உள்ளான்.”“எனக்கு துன்பம் என்று எதுவும் இல்லை, இருந்தாலும் அவ்வளவு எளிதில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இயலாது” என்றேன் நான்

.“இல்லை. உங்கள் கண்கள் சொல்கின்றன; உங்கள் மனதில் சமாதானம் இல்லை. தேவன் கூறியுள்ளான், எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் மனம் விட்டுக் கூறினால் அழிந்து போகும். கூறுங்கள்!” என்றனர். விடாக்கண்டத்தனம் இருந்தது பேச்சில்.தெரியாமல் இவர்களிடம் மாட்டிக் கொண்டேன் என்பதை உள்ளுணர்வு அப்போதுதான் எச்சரித்தது.

வெளியே போங்கள் என்று அதிர்ந்து கூறவேண்டும் என்றில்லை, “தயவுசெய்து போய்வாருங்கள்,” என்று சமாதானமாகச் சொல்லக்கூட மனதளவில் நான் தயாராகவில்லை.அவர்கள் மேலும் தொடர்ந்து கொண்டே இருந்தனர், இந்த வேளையில்தான் கடைக்குச் சென்றிருந்த என் அம்மா வீட்டிற்குள் வந்தார். யார் இவர்கள் என்று கண்களாலேயே கேட்டார். இதைப் புரிந்து கொண்ட கூட்டம் அவர்களாகவே கூறினார்கள், “உங்கள் மகனுக்குக் கிடைத்த புதிய நண்பர்கள்!”அம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் வந்தவர்களை உபசரிப்பது நம் பழக்கம் என்பதால், “வாழைப் பழம் சாப்பிடுவீர்களா?” என்று கேட்டார். “தேவன் தரும் பழம் இங்கிருந்துதான் கிடைக்கும் என்றால் சந்தோசமாகப் பெற்றுக் கொள்கிறோம்…” என்று அவர்கள் பாணியிலேயே பதில் கூறினார்கள்.

பூஜை அலமாரியில் இருந்த பழத்தை எடுத்துக் கொடுக்குமாறு அம்மா சைகை செய்துவிட்டு, அவர்கள் குடிப்பதற்காக அடுப்பில் பால் சுடவைக்க உள்ளே சென்றுவிட்டார். நானும் வந்தவர்களுக்கு ஆளுக்கொரு பழம் எடுத்துக் கொடுத்தேன்

இந்நிலையில்தான், தற்செயலாக நடந்த அந்த விஷயத்தில் அவர்களிடம் இருந்த விஷமத்தன்மை புரிந்தது. நான் கொடுத்த பழத்தை வாங்க மறுத்தனர். “கடைக்குச் சென்று வேறு பழம் வேண்டுமானாலும் வாங்கித் தாருங்கள்; இந்தப் பழம் வேண்டாம்,” என்று சொல்லிவைத்ததுபோல் அனைவரும் மறுத்தனர்.“இல்லை, இது இன்று வாங்கிய பழம்தான்; நன்றாக உள்ளது” என்றேன் அப்பாவியாக.

ஆனால் அப் பாவிகள், “வேண்டாம் இதை நீங்கள் பூஜை அலமாரியில் இருந்து எடுத்தீர்கள், அது உங்கள் கடவுளுக்குப் படைக்கப் பட்டதாக இருக்கலாம். அந்தப் பழத்தை நாங்கள் சாப்பிடுவது கிடையாது” என்று முகத்தில் அடித்தது போலக் கூறினார்கள். பழத்தை அவர்கள் சாப்பிடவில்லை என்பதை விட, தொடக் கூட இல்லை என்பதுதான் என்னை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

என் வீட்டிற்கே வந்து என்னையே அசிங்கப்படுத்திக் கொண்டிருந்தார்கள். நமது கலாசாரத்தின் மிக உன்னதமான பண்பாடு விருந்தோம்பல், அதையே அசிங்கப்படுத்தும் இவர்களால் என்ன நிம்மதியை எனக்குத் தந்துவிட முடியும்?பொதுவாக, கடையில் இருந்து வங்கி வரும் பழங்களை பூஜை அலமாரியில் வைப்பதுதான் அப்பாவின் பழக்கம். ஏன் என்றால் அப்போதுதான் அது பார்வையாக இருக்கும், நாங்களும் மறக்காமல் எடுத்து சாப்பிடுவோம். இந்தத் தன்னிலை விளக்கம் அளிக்கும் நிலையில் நானும் இல்லை. அதை ஏற்றுக் கொள்ளும் பரிசுத்த நிலையில் அவர்களும் இல்லை. அதற்குமேல் ஒரு நிமிடம் கூட என் வீட்டில் அவர்கள் இருப்பது எனக்குப் பிடிக்காவிட்டாலும் வீட்டுக்குள் வந்தவர்களை வெளியே போகச்சொல்வதற்கான வார்த்தைகள் கிடைக்காமல் திகைத்திருந்தேன்.

எந்த தவறும் செய்யாமலே அவமானத்தில் சிறுத்து நான் அமர்ந்திருக்க, அவர்களோ எந்தக் கூச்சமும் இல்லாமல் என்னிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்து… இல்லை இல்லை திணித்து…. அதற்கு ஐம்பது ரூபாயும் கேட்டனர். அந்தப் புத்தகத்தின் பெயர் “சாத்தானிடம் இருந்து விடுதலை”. நான் வாங்க மாட்டேன் என்று மறுக்கவே, இருபது ரூபாய்க்காவது வாங்கிக் கொள்ளுங்கள் என்று பேரம் பேசினார்கள்.இதற்கு மேலும் என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை. என்னால் வாங்க முடியாது, என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம், எனக்கு வேலை இருக்கிறது. நான் கிளம்பப் போகிறேன் என்றேன். ஆனால் அவர்கள் என்னை விடவில்லை, இலவசமாகவே தருகிறோம் என்று என் கையில் திணித்தனர்.

நான் செய்வதறியாமல் முழிக்கவே என் அம்மா சுதாரித்துக்கொண்டு முன்வந்து, அவர்களைத் திட்டி வெளியே அனுப்பினார். அதற்குப் பின்பு எனக்கும் திட்டு விழுந்தது என்று சொல்லவா வேண்டும்? ஆனாலும் சைத்தான்களிடம் இருந்து விடுதலை கிடைத்ததால் நிம்மதியாகவே இருந்தது.

அவர்கள் சென்ற பின்பு என் மனதில் சில கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தன.உங்கள் கஷ்டங்களைக் கூறுங்கள் அமைதியை தருகின்றோம் என்று நாக்கில் தேன் ஊறக் கூறும் இவர்களின் நெஞ்சில் ஊறுவது நஞ்சு என்பது ஏன் நம் மக்களுக்குத் தெரிவது இல்லை?

இன்று மைனாரிட்டியாக இருக்கும்போதே நம் கடவுளை எந்தக் கூச்சமோ தயக்கமோ இல்லாமல் சைத்தான் என்று கூறுபவர்கள், நாளை பெரும்பான்மை ஆகும்போது என்னையே சைத்தான் என்று கூறிக் கொலை செய்ய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்?

இது என்றோ ஒரு நாள் யாரோ ஒருவருக்கு நடக்கும் அசாதாரண விஷயம் இல்லை. நம்மில் பெரும்பாலானோருக்கு நாள்தோறும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கிறது. மூன்று நாள்களுக்கு முன்னர் கூட என் நண்பன் வீட்டிற்கு இதே போன்று ஒரு கூட்டம் வந்துசென்றதாகக் கூறினார் இப்படி ஒவ்வொரு வீட்டிற்கும் செல்கின்றார்கள் என்றால், இவர்களுக்கு தொழிலே இதுதானா?ர்

வருமானம் எப்படி வருகிறது? இவர்கள் அன்றாடத் தேவைகளை எப்படி பூர்த்தி செய்துகொள்வார்கள், இவர்களது குழந்தைகளை எப்படிப் படிக்க வைப்பார்கள்?ஒவ்வொரு ஊருக்கும் குறைந்தது பத்து பேராவது செயல்பட்டால், மாவட்டம் முழுவதும், மாநிலம் முழுவதும் எவ்வளவு கூட்டங்கள் செயல்படும்?அப்படி என்றால் பல ஆயிரம் மதமாற்ற ஊழியர்களுக்கும் ஏதோ ஒரு பின்புலத்தில் இருந்து பணம் வந்துகொண்டுதான் இருக்கிறது.

இவர்கள் அனைவரும் தங்கள் அன்றாடத் தேவைகளுக்கான பணத்தைப் பெற்றுக்கொண்டு மதமாற்றம் செய்கின்றனர். இறைவனுக்காக, இறைவனின் பெருமைகளைக் கூறுவதற்காக ஒருவனும் மதமாற்றம் செய்யவில்லை. உடல் உழைத்து வேலை செய்ய வலித்து, பேசிப்பேசியே ஒருவனை மதம் மாற்றி காசு சம்பாதிக்கும் கூட்டமாகத்தான் இந்தியா முழுவதும் வலம்வந்துகொண்டு இருக்கிறார்கள்.

பல ஆயிரம், பல இலட்சம் மக்கள் மதமாற்ற அறுவடையில் ஈடுபடுகிறார்கள் என்றால் ஒரு மதமே தீவிரமாக மதமாற்ற வேலையைச் செய்யத் தூண்டிக் கொண்டிருக்கிறது.விதவிதமான பிராத்தனைக் கூட்டங்கள், நற்செய்திப் பெருவிழாக்கள் எல்லாம் நடத்த இவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது. ஒவ்வொரு கிருஸ்துவப் பள்ளியும் நற்செய்திப் பெருவிழாக்கள் நடத்துகின்றது என்றால், நாம் செலுத்தும் பள்ளிக் கட்டணங்கள் மறைமுகமாக நம்மையே மதம் மாற்றும் சக்தியாக மாறுகின்றது.

ஆனால் வெறும் பள்ளிகளினால் வரும் வருவாயை மட்டும் வைத்துக் கொண்டு எல்லா இடங்களிலும் பிரம்மாண்டமான “எழுப்புதல் கூட்டங்க”ளை இவர்களால் எழுப்ப முடியாது.வெளிநாட்டுக் கருப்புப் பணங்களை மதமாற்றம் என்னும் பெயரில் வெள்ளையாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

இதைக் கண்டுகொள்ளாமல் விடும் அரசாங்கமும் இவர்களுக்கு உடந்தையாகவே உள்ளது. மதமாற்றத்திற்குப் பணம் வருகிறது; தீவிரவாதத்திற்குப் பணம் வருகிறது; அதை எல்லாம் கண்டு கொள்ளாத அரசு, நமது கோயில் பணங்களைக் கொண்டுதான் தன் கஜானாவை நிரப்புகிறது. இந்த மைனாரிட்டிகளை மேன்மேலும் போஷிக்கிறது.இவர்கள் மெல்ல மெல்ல நம்மைக் கொல்லும் விஷம் போன்றவர்கள்;

அன்பாகப் பேசுவது இவர்கள் வழக்கம்; ஆனால் பண்பில்லாமல் நடப்பது இவர்களது வாடிக்கை. எங்கள் கடவுளை வணங்குங்கள் குறைகள் தீரும் என்று அன்பாகக் கூறி சாத்தான் வழிபாட்டு முறையை நிறுத்துங்கள் என்று பண்பில்லாமல் ஊளை இடத் தொடங்குவார்கள்.

வஞ்சக நரிகளின் காட்டுமிராண்டித்தனமான ஊளை அது.குழந்தைப் பருவம் முதல் இருந்தே கிருஸ்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மத நூல்களை போதிக்கிறார்கள். அது மதபோதனை வகுப்பாக மட்டும் இல்லாமல் மதவெறி ஏற்றும் வகுப்பாகவும் மாறிப்போனது வேதனை தரும் விஷயமே.

நம் போன்ற பெரியவர்களையே மூளைச் சலவை செய்து மதமாற்றும் இவர்கள் நம் குழந்தைகளை மட்டும் விட்டுவைப்பர்களா என்ன? மத வகுப்புகளை இவர்கள் குழந்தைகளோடு மட்டும் நிறுத்திக் கொள்ள மாட்டார்கள்.

தெருவில் விளையாடும் நம் பிள்ளைகளையும் அழைத்து நயமாகப் பேசி இனிப்பு கலந்த நஞ்சை வாரி வழங்குவார்கள். மதமாற்றத்தின் விதையை குழந்தைகளிடம் ஊன்றும் தந்திரமான முயற்சி இது. இனிப்பில் மயங்கும் பிள்ளைகளிடம் மதம் மாற்றும் அநாகரிகத்தைக் கூட நாகரிகமாகச் செய்ய இவர்களால் மட்டுமே முடியும்.

நய வஞ்சகர்களின் சூழ்ச்சியைக் கூட நம்மால் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு நம்மை மூளைச்சலவை செய்து வருகிறார்கள். இதை அவர்களின் வெற்றி என்பதை விட நமது தோல்வி என்றுதான் கொள்ள வேண்டும்.“

எங்கள் கண்களை மூடி பிரார்திக்கச் சொன்னார்கள்கண்களை மூடிய பொழுது நாடு எங்கள் கைகளிலும்பைபிள் அவர்கள் கைகளிலும் இருந்தது.கண்களை திறந்த போது தான் உணர்ந்தோம்பைபிள் எங்கள் கைகளிலும்நாடு அவர்கள் கைகளிலும் மாறியது”

 –ஆப்பிரிக்கப் பழமொழி

“உலகின் எல்லா நாடுகளிலும் மதமாற்றம் செய்யும் போதுபலத்த எதிர்ப்பு கிளம்பியது ஆனாலும் சில ஆண்டுகளில்அதை கிருஸ்துவ நாடக மாற்றி விட்டோம்.இந்தியாவிலோ எங்களுக்கு பலத்த எதிர்ப்பு இல்லை250 ஆண்டுகளுக்குப் பின்பும்எங்களால் இந்தியாவை இன்னும் கிருஸ்துவ நாடாகமாற்ற முடியவில்லை”

இந்திய கிருஸ்துவர்கள் மொழி

நம் தர்மத்தை யாராலும் அழிக்க முடியாது. ஆனாலும் நாம் விழித்துக் கொள்ளவில்லை என்றால் நம்மை காப்பற்றிக் கொள்ளவே முடியாது

பாதகம் செய்வோரைக் கண்டால்பயங் கொளல் ஆகாது பாப்பாமோதி மிதித்து விடு பாப்பா அவர்முகத்திலே காரி உமிழ்ந்து விடு–என்று கூறிய பாரதியின் கோபம்தான் நினைவுக்கு வருகிறது.

நம்மிடம் இருக்கும் பலவீனங்களை அவர்களது பலமாக மாற்றிக் கொண்டு இருக்கும் இந்த நிலை மாற வேண்டும். நம் கண் எதிரே நடக்கும் அவலங்களைத் தட்டிக் கேட்க வேண்டும். நம்முள் ஒற்றுமை இருந்தால் இது போன்ற சைத்தான்களிடம் இருந்தும் அசுத்த ஆவிகளிடம் இருந்தும் விடுதலை பெறுவது சர்வ நிச்சயம்.

ஆம் மிஷினரி இருளிலிருந்து தருமத்தின் ஒளிக்குச் செல்லும் பாதை என்மனதில் தெளிவாகத் தெரிகின்றது.அந்தக் கூட்டம் பக்கத்துக்கு வீட்டு கதவுகளை தட்டும் சப்தம் கேட்கின்றது. அந்தச் சைத்தான்களை விரட்ட நான் கிளம்பி விட்டேன்; நீங்களும் வருகிறீர்களா?


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல