அது ஒரு பெரிய கம்பெனி. அதனுடைய முதலாளி வழக்கமாக கம்பெனிக்குள் ரவுண்ட்ஸ் வந்து கொண்டிருந்தார். அது எல்லாருக்கும் தெரியுமாகையால் எல்லாரும் அவர்களுடைய வேலையைக் கவனமாகச் செய்து கொண்டிருந்தார்கள்.ஒரே ஒருவன் மட்டும் எந்த வேலையும் செய்யாமல் சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான்.
முதலாளி அவனிடம் சென்று கனிவாகக் கேட்டார்.""தம்பி மாதம் எவ்வளவு ரூபாய் சம்பாதிக்கிற?''
""2 ஆயிரம் ரூபாய். அதையேன் கேட்கிறீங்க?'
'அதற்கு முதலாளி எந்தப் பதிலும் சொல்லவில்லை. தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்த பர்ஸை எடுத்து அதில் இருந்து 6 ஆயிரம் ரூபாயை அவனிடம் கொடுத்தார்.
அவர் எதற்குத் தனக்கு ரூபாய் தருகிறார்? என்று புரியாமல் அவன் விழித்தான். ரூபாயை வாங்கிக் கொண்டான்.
முதலாளி சொன்னார்:""நீ இங்கே வேலை செய்றதுக்குத்தான் சம்பளம் தர்றேன். சும்மா சுவரில் சாய்ந்து நிற்கிறதுக்கில்ல. இந்த மூணு மாத சம்பளத்தை எடுத்துக்கிட்டு ஓடிடு. இந்தப் பக்கம் இனிமேல் திரும்பிக் கூட பார்க்கக் கூடாது''முதலாளி கோபத்துடன் போய்விட்டார்.
அவனும் ரூபாயை வாங்கிக் கொண்டு எந்த உணர்ச்சியும் காட்டாமல் வெளியே போனான்.
முதலாளி நடந்த சம்பவத்தை கம்பெனியின் உயர் அதிகாரியிடம் சொன்னார்:""வேலை செய்யாம நின்னுக்கிட்டிருந்தான். கையில ரூபாயைக் கொடுத்து வெளியே துரத்திட்டேன்''
அதற்கு உயர் அதிகாரி பணிவோடு சொன்னார்:""சார்... நீங்கள் பணம் கொடுத்து அனுப்பியது நமது கம்பெனிக்குக் கொரியர் கொண்டு வந்த ஆளை''

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக