திங்கள், 23 செப்டம்பர், 2013

வடக்கு தமிழ் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பு

வட­மா­கா­ண­சபைத் தேர்­தலில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு அமோக வெற்­றி­பெற்­றுள்­ளது. மாகா­ணத்தில் 3 இலட்­சத்து 53 ஆயி­ரத்து 555 வாக்­கு­களைப் பெற்று 28 ஆச­னங்­களை கைப்­பற்­றிய தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு இரண்டு போனஸ் ஆச­னங்­க­ளுடன் 30 உறுப்­பி­னர்­களை பெற்­றுள்­ளது.

மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையைப் பெற்று ஆட்சி அமைப்­ப­தற்­கான அங்­கீ­கா­ரத்­தினை வட­ப­குதி மக்கள் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிற்கு வழங்­கி­யுள்­ளனர். பெரும் எதிர்­பார்ப்­பிற்கு மத்­தியில் 25 வரு­டங்­க­ளுக்­குப்­பின்னர் தனி­யான வட­மா­கா­ண­ச­பைக்கு நேற்று முன்­தினம் தேர்தல் நடை­பெற்­றி­ருந்­தது.

வடக்கில் யாழ். மாவட்டம் உட்­பட ஐந்து மாவட்­டங்­க­ளிலும், வன்­மு­றைச்­சம்­ப­வங்கள் பதி­வாகி இருந்த போதிலும் மக்கள் அச்­சு­றுத்­த­லையும் மீறி உணர்­வு­பூர்­வ­மாக வாக்­க­ளித்­தி­ருந்­தனர். யாழ்ப்­பா­ணத்தில் இரா­ணு­வத்­தினர் வன்­மு­றைச்­சம்­ப­வங்­களில் ஈடு­பட்­ட­தாக நூற்­றுக்கும் மேற்­பட்ட முறைப்­பா­டுகள் தேர்தல் கண்­கா­ணிப்­புக்­கு­ழு­வி­ன­ருக்கு கிடைத்­துள்­ளன. இந்த நிலை­யிலும், வட­ப­குதி மக்கள் அச்­ச­மின்றி துணிந்து வாக்­க­ளித்து தமது பிர­தி­நி­தி­களை தெரிவு செய்­துள்­ளனர்.

யாழ்ப்­பா­ணத்தில் 2 இலட்­சத்து 13 ஆயி­ரத்து 907 மொத்த வாக்­குக்­களைப் பெற்று தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு 14 ஆச­னங்­களை கைப்­பற்­றி­யுள்­ளது. இங்கு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 35 ஆயி­ரத்து 995 வாக்­கு­களை மட்­டுமே பெற்று இரண்டு ஆச­னங்­களை கைப்­பற்­றி­யுள்­ளது. இதேபோல் முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் தமிழ் தேசி­யக்­கூட்­மைப்பு 28 ஆயி­ரத்து 266 வாக்­கு­களைப் பெற்று 4 ஆச­னங்­க­ளையும், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 7 ஆயி­ரத்து 209 வாக்­கு­களைப் பெற்று ஒரு ஆச­னத்­தையும் பெற்­றுள்­ளன.

வவு­னியா மாவட்­டத்தில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு 41 ஆயி­ரத்து 225 வாக்­கு­களைப் பெற்று 4 ஆச­னங்­க­ளையும் ஐக்­கி­ய­மக்கள் சுதந்­திர முன்­னணி 16 ஆயி­ரத்து 633 வாக்­கு­களைப் பெற்று இரு ஆச­னங்­க­ளையும் கைப்­பற்­றி­யுள்­ள­ன. இதேபோல் கிளி­நொச்சி மாவட்­டத்தில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு 37 ஆயி­ரத்து 79 வாக்­கு­களைப் பெற்று 3 ஆச­னங்­க­ளையும், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 7 ஆயி­ரத்து 897 வாக்­கு­களைப் பெற்று 1 ஆச­னத்­தையும் கைப்­பற்­றி­யுள்­ள­ன.

மன்னார் மாவட்­டத்தில் 33 ஆயி­ரத்து 118 வாக்­கு­க­ளைப்­பெற்று தமிழ்த் தேசிய ­கூட்­ட­மைப்பு 3 ஆச­னங்­க­ளையும், 15 ஆயி­ரத்து 104 வாக்­கு­களைப் பெற்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 1 ஆச­னத்­தையும், 4571 வாக்­கு­களைப் பெற்று முஸ்லிம் காங்­கிரஸ் ஒரு ஆச­னத்­தையும் கைப்­பற்­றி­யுள்­ளன.

கடந்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு யாழ். மாவட்­டத்தில் 65 ஆயி­ரத்து 119 வாக்­கு­க­ளையும், வன்னி மாவட்­டத்தில் 41 ஆயி­ரத்து 671 வாக்­கு­க­ளையும் பெற்று மொத்­த­மாக 1 இலட்­சத்து 6 ஆயி­ரத்து 792 வாக்­கு­க­ளையே பெற்­றி­ருந்­தது. ஆனால் இம்­முறை யாழ்ப்­பா­ணத்­திலும், வன்­னி­யிலும் 3 இலட்­சத்து 53 ஆயி­ரத்து 555 வாக்­கு­களை கூட்­ட­மைப்பு பெற்று பெரு வெற்றி ஈட்­டி­யுள்­ளது.

வட­மா­கா­ண­சபைத் தேர்தல் நீதி நியா­ய­மாக நடத்­தப்­ப­ட­வேண்டும் என்­பதில் சர்­வ­தேச சமூகம் பெரும் அக்­கறை காட்­டி­யி­ருந்­தது. இந்தத் தேர்­தலில் முறை­கே­டுகள் இடம் பெறலாம் என்ற அச்­சத்தின் கார­ண­மாக வெளி­நாட்டு கண்­கா­ணிப்­பா­ளர்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டு­மென்று தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு உட்­பட எதிர்க்­கட்­சிகள் கோரிக்கை விடுத்­தி­ருந்­தன. இதற்­கி­ணங்க பொது­ந­ல­வாய நாடுகள் அமைப்பின் தேர்தல் கண்­கா­ணிப்­புக்­கு­ழுவும் சார்க் நாடு­களின் கண்­கா­ணிப்­புக்­கு­ழு­வி­னரும் தேர்தல் கண்­கா­ணிப்­புக்­க­ட­மை­களில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

இவ்­வாறு சர்­வ­தேச கண்­கா­ணிப்­பா­ளர்கள் கண்­கா­ணிப்பு பணியில் ஈடு­பட்­டி­ருந்த போதிலும், யாழ். குடா­நாடு உட்­பட பல பகு­தி­க­ளிலும், வன்­மு­றைகள் இடம் பெற்­றி­ருந்­தன. தேர்தல் தினத்­திற்கு முதல் நாள் அதி­காலை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் வேட்­பாளர் அனந்தி சசி­த­ரனின் வீட்­டுக்குள் புகுந்த ஆயு­த­தா­ரிகள் தாக்­கு­தலை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

இதேபோல் கூட்­ட­மைப்பின் வேட்­பா­ளர்கள் மீது பல்­வேறு அச்­சு­றுத்­தல்கள் விடுக்­கப்­பட்­டி­ருந்­தன. தேர்தல் தினத்­தன்றும் இரா­ணு­வத்­தினர் பல்­வேறு வன்­மு­றைச்­சம்­ப­வங்­களில் ஈடு­பட்­ட­தா­கவும் மக்­களை வாக்­க­ளிக்க விடாது தடுக்கும் முயற்­சி­களில் ஈடு­பட்­ட­தா­கவும் நூற்­றுக்கும் மேற்­பட்ட முறைப்­பா­டுகள் தேர்தல் கண்­கா­ணிப்பு குழுக்­க­ளிடம் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.

இந்த நிலை­யிலும், வட­மா­காண மக்கள் பெரு­ம­ளவில் திரண்டு வந்து வாக்­க­ளித்து தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிற்கு தமது அங்­கீ­கா­ரத்தை வழங்­கி­யுள்­ளனர்.

வடக்கில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி,. அகில இலங்கை முஸ்லிம் காங்­கிரஸ், ஈ.பி.டி.பி. மற்றும் இட­து­சா­ரிக்­கட்­சிகள் இணைந்து போட்­டி­யிட்­டி­ருந்­தன. யாழ். மாவட்­டத்தில் ஈ.பி.டி.பி. யின் சார்பில் 11 பேர் போட்­டி­யிட்­டி­ருந்­தனர். சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் சார்பில் 8 பேர் போட்­டி­யிட்­டி­ருந்­தனர். இவர்­களில் இருவர் மட்­டுமே தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர். கடந்த 2010 ஆம் ஆண்டு நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் யாழ். மாவட்­டத்தில் 47 ஆயி­ரத்து 622 வாக்­கு­களை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி பெற்­ற­துடன் மூன்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் பெற்­றி­ருந்­தது. ஆனால் இம்­முறை யாழ். மாவட்­டத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கு 35 ஆயி­ரத்து 995 வாக்­குகள் மட்­டுமே கிடைத்­துள்­ளன. இதேபோல், கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி 12 ஆயி­ரத்து 624 வாக்­கு­களைப் பெற்று ஒரு பாரா­ளு­மன்றப் பிர­தி­நி­தித்­து­வத்தைப் பெற்­றி­ருந்­தது. ஆனால் இம்­முறை யாழ். மாவட்­டத்தில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கு 855 வாக்­குகள் மட்­டுமே கிடைத்­துள்­ளன.

வட­மா­கா­ணத்தில் ஐந்து மாவட்­டங்­க­ளிலும் இத்­த­கைய நிலையே காணப்­ப­டு­கின்­றது. இதி­லி­ருந்து தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­னையே தமது பிர­தி­நி­தி­யாக தமிழ் மக்­களில் பெரும்­பான்­மை­யானோர் தெரிவு செய்­துள்­ளமை நிரூ­பண­மா­கின்­றது.

தேர்தல் பிர­சா­ரங்­களின் போது ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி மக்­க­ளுக்கு பல சலு­கை­க­ளையும் உத­வி­க­ளையும் வழங்­கி­யது. குடா­நாடு உட்­பட வட­ப­கு­தியை அபி­வி­ருத்தி செய்­துள்­ள­தா­கவும், இந்த அபி­வி­ருத்தி தொட­ர­வேண்­டு­மானால் தமக்கு வாக்­க­ளிக்­கு­மாறும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி கோரி­யி­ருந்­தது. இத­னை­விட வடக்கில் பெரு­ம­ள­வான மக்­க­ளுக்கு வேலை வாய்ப்­புகள் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், சுய­தொழில் உத­விகள் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், இதனால் மக்கள் தமக்கே வாக்­க­ளிப்­பார்கள் என்றும் அர­சாங்கத் தரப்­பினர் நம்­பிக்கை கொண்­டி­ருந்­தனர்.

இதற்­கி­ணங்­கவே வட­மா­கா­ண­ச­பை­யினை கைப்­பற்ற முடியும் என்ற தோரணையில் அமைச்­சர்கள் பலரும் கருத்­துக்­களை தெரி­வித்து வந்­தனர்.

ஆனால், அபி­வி­ருத்­தி­களும் சலு­கை­களும் வேண்டாம். அடிப்­படை உரி­மை­களே எமக்கு வேண்டும் என்­பதை கூட்­ட­மைப்­பினர் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர். தேர்­தலை முன்­னிட்டு தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு வெ­­ளியிட்ட தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் இணைந்த வடக்கு-, கிழக்கில் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிக்கக்கூடிய தீர்வு வேண்டும். இத்தகைய தீர்வு முஸ்லிம் மக்களும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அமையவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்தத் தேர்தல் விஞ்ஞாபனமானது தனிநாட்டுக்கான கோரிக்கை எனவும் நாட்டைப் பிரிக்க தமிழ் தேசியக்கூட்டமைப்பு முயல்வதாகவும் அரசாங்கத்தரப்பினர் பெரும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தனர். ஆனாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கைகளுக்கு தேர்தலில் தமிழ் மக்கள் அமோக ஆதரவினை வழங்கியுள்ளமை நிரூபணமாகியுள்ளது.

இதிலிருந்து அபிவிருத்திகளும் சலுகைகளும் எமக்கு வேண்டாம். ஆனால் அதனைவிட எமக்குரிய உரிமைகள் வழங்கப்படவேண்டியது இன்றியமையாததாகும் என்பதை தமது தீர்ப்பின் மூலம் வடபகுதி தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு நன்கு உணர்த்தியுள்ளனர். இதனை உணர்ந்து இனியாவது அரசாங்கம் செயற்படவேண்டும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல