வியாழன், 19 செப்டம்பர், 2013

அந்தமானில் அருகி வரும் பழங்குடி மக்கள்

ஒரு காலத்தில் அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள் முழுவதும் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த பழங்குடியினர் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தற்போது சில பழங்குடி இனங்களே எஞ்சியிருப்பதாகக் கருதப்படுகிறது.

ஜரவா என்னும் பழங்குடி மக்கள் அந்தமானின் செல்லப்பிள்ளைகளாவர். சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை தெற்கு அந்தமானில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் அவர்கள். ஆங்கிலேயரின் வருகையாலும், நகரமயமாக்கல் காரணமாகவும் வேறு வழியில்லாமல் மேற்குப் பகுதியில் வசிக்கத் தொடங்கிவிட்டனர்.

தொண்ணூறுகளின் பிற்பகுதியில் ஜரவாக்கள் நாகரிக மக்களோடு சிநேகம் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். பாராடங் செல்லும் சுற்றுலாப் பயணிகளை வழிமறித்து அவர்களிடம் உணவுப் பொருட்கள் பெற ஆரம்பித்தனர். அதுபோல ஒருமுறை உணவுக்காக வழிமறித்த பழங்குடியினரை நடனமாட வைத்து அதை இணையத்தில் பரவ விட்டிருக்கிறார்கள்.

அதற்குப் பின்னர் அந்தமான் நிர்வாகம் கடுமையான சட்ட திட்டங்களை வகுத்து, ஜரவா மக்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. எனினும் தற்போது ஜரவா மக்கள் தாங்களாகவே வெளியுலகிற்கு வரவும், ஆடைகள் உடுத்தவும், கல்வி கற்கவும் தொடங்கியிருக்கிறார்கள். கவலையளிக்கும் வகையில், ஜரவா மக்கள் தற்போது சுமார் இரு நூறிலிருந்து நானூறு பேர் வரை மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள்.

அந்நிய படையெடுப்புக்கு முன்பு அந்தமான் முழுவதிலும் வசித்து வந்த ஒத்த மொழிகள் பேசிய பத்துக்கும் மேற்பட்ட இனங்களை தற்போது ‘க்ரேட் அந்தமானீஸ்’ என்று பகுத்து வைத்திருக்கிறார்கள். இருநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை ஆறாயிரத்தை கடந்த எண்ணிக்கையில் இருந்தவர்கள், வெள்ளையர்கள் கொண்டு வந்து பரப்பிய நோய்களை சமாளிக்க முடியாமல் கிட்டத்தட்ட அழிவை நோக்கிச் சென்று பின்னர் மீண்டு வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் வெறும் பத்தொன்பது பேர் மட்டுமே எஞ்சியிருந்து தற்போது சுமார் ஐம்பது பேர் மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள். சில தலைமுறைக்கு முன்பிலிருந்தே இவர்கள் இந்தியர்களோடு இல் வாழ்க்கையில் இணைந்ததால் ஹிந்தி சரளமாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆறு சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட சிறிய தீவொன்றில் இவர்களுக்காக குடிசைகள், பாடசாலை, மருத்துவமனை போன்ற வசதிகளை செய்து கொடுத்திருக்கிறது அந்தமான் நிர்வாகம். லிட்டில் அந்தமான் தீவில் வசித்து வரும் ஆங்கீ இன மக்களின் எண்ணிக்கை நூறுக்கும் குறைவாகவே உள்ளது. தங்களது பாரம்பரிய கதைகளின் வழியாக நில நடுக்கத்தைப் பற்றியும் ஆழிப் பேரலைகளைப் பற்றியும் புரிந்து வைத்திருக்கும் ஆங்கீஸ் மக்கள் 2004 இல் சுனாமி வந்த போது ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாமல் பிழைத்திருக்கிறார்கள். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு விஷச் சாராயத்தை தவறுதலாக உட்கொண்டு எட்டுப்பேர் இறந்திருக்கிறார்கள். பெருகி வரும் மதுபான மோகம் ஆங்கீஸ் இன மக்களுக்கு ஆபத்தாக இருந்து வருகிறது. தவிர ஆங்கீஸ் இனப் பெண்கள் மிகவும் அரிதாக கருவுருவதால் ஆங்கீஸ் மக்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக் கிறார்கள்.

க்ரேட் அந்தமானீஸை போலவே நிகோபர் தீவுகளில் வாழும் பழங்குடியினரை நிகொபரீஸ் என்று அழைக்கிறார்கள். நிகோபர் தீவுகளை இன்னமும் மிகவும் பாதுகாப்பாகவும், நாகரிக மக்கள் எளிதில் நுழைய முடியாதபடியும் வைத்திருப்பதாலோ என்னவோ நிகொபரீஸ் எண்ணிக்கையில் இருபதாயிரத்திற்கு மேல் உள்ளனர்.

ஒப்பீட்டளவில் மிகவும் நாகரிகமடைந்தவர்கள். இலவசக் கல்வித் திட்டத்தின் வாயிலாக இன்னும் சில ஆண்டுகளில் நிகோபர் மக்கள் அரசு பணியிடங்களை நிரப்பக் காத்திருக்கிறார்கள்.

நிகொபரீஸ் மக்களில் சுமார் அனைவரும் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள்.

முற்றிலும் நாகரிக மனிதர்களுடனான தொடர்பற்ற மக்களும் அங்கு உள்ளனர். சுனாமி வந்த சமயம், இந்து நாளிதழ் முகப்பு பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. ஒருமுறை அந்தமான் நிர்வாகம், நாகரிக மக்கள் குழுவை, இவர்களுடைய தீவிற்கு நட்புக்கரம் நீட்ட அனுப்பி வைத்தது. குறிப்பிட்ட தொலைவு வரை படகில் சென்று அங்கிருந்து தேங்காய்களை வீசியிருக்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சியுடன் தேங்காய்களை பெற்றுக்கொண்டனர் பழங்குடியினர்.

அடுத்த கட்டமாக கரையில் இறங்க முயற்சி செய்ததும் மூர்க்கமாகத் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு அவர்களுடைய பகுதியில் அத்துமீறிய மீனவர்கள் இருவரை அம்பெய்தி கொன்றிருக்கிறார்கள். இவர்களுடைய எண்ணிக்கை கூட இதுவரையில் மர்மமாகவே இருந்து வருகிறது.

ஷாம்பென் மக்கள் ஒப்பீட்டளவில் மிகவும் சாதுவானவர்கள். இந்தோனேசிய, பர்மிய, வியட்நாமிய மக்களின் சாயலைக் கொண்டவர்கள் க்ரேட் நிகோபர் தீவில் ஆங்காங்கே சிறு சிறு பிரிவுகளாக வாழ்ந்து வருகிறார்கள். இரு நூறிலிருந்து முந்நூறு வரையில் எண்ணிக்கை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இடுப்புக்கு கீழே மட்டும் உடையணியும் வழக்கம் கொண்டவர்கள். வன விலங்குகளை வேட்டையாடியும் காய்கறி, பழங்களாலும் பசியாறுகிறார்கள். கடற்கரை ஓரம் குடியிருக்கும் பழக்கமில்லாததால் ஷாம்பென் மக்களை சுனாமி பெரிய அளவில் பாதிக்கவில்லை.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல