இலங்கையின் சிவில் பாதுகாப்புப்படையில் இணைக்கப்பட்டுள்ள முன்ளாள் விடுதலைப்புலிகளான மூன்று ஜோடிகளுக்கு இலங்கை ஜனாதிபதியின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தலைமையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
இந்தத் திருமண வைபவம் கிளிநொச்சி மாவட்டம் விசுவமடுவில் உள்ள சிவில் பாதுகாப்புப் படையணி தலைமையகத்தில் அந்தப் படையணிக்குப் பொறுப்பான ரியர் அட்மிரல் ஆனந்த பீரிசின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இவர்களில் உயரம் குறைந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினருக்கு அதே உயரமுடைய யாழ்பபாணத்தைச் சேர்ந்த பெண்ணைப் பேசி ஒழுங்கமைக்கப்பட்டு, அவர்களின் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடந்திவைக்கப்பட்டது.
இதேவேளை, காதலர்களாக இருந்த இருவருக்கு இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. அத்துடன் சிவில் பாதுகாப்புப் படையணியைச் சேர்ந்த மதவாச்சியைச் சொந்த இடமாகக் கொண்ட இளைஞர் ஒருவருக்கும் சிவில் பாதுகாப்புப் படையணியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையில் எற்பட்டிருந்த காதலைத்தொடர்ந்து, அவர்கள் இருவருக்கும் பௌத்த மத முறைப்படி திருமணம் நடத்திவைக்கப்பட்டது.
மூன்று திருமணங்களுக்கும் அந்தந்த மத ஆசார முறைப்படி அமைக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட இடத்தில் இந்தத் திருமணங்கள் நடைபெற்றன. சமயாசாரப்படி திருமணம் நடந்தேறிய பிறகு உடனடியாகவே திருமணப் பதிவும் இடம்பெற்றது. இந்தத் திருமணங்களுக்குச் சாட்சியாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் சிவில் பாதுகாப்புப் படையணியின் பொறுப்பதிகாரி ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர்.
கிளிநொச்சி மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன் மற்றும் முக்கிய படையதிகாரிகள், சிவில் பாதுகாப்புப் படையணியைச் சேர்ந்தவர்கள் ஊர்ப் பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
யுத்தம் முடிவடைந்து நாட்டில் அமைதி ஏற்பட்டுள்ளதையடுத்து, இனங்களுக்கிடையிலேயும், மதங்களுக்கிடையிலேயும் நல்லுறவைப் பேணும் நோக்கத்துடன் இந்தத் திருமணங்கள் நடத்தப்பட்டதாகவும். இதற்கும் அரசியலுக்கும், தேர்தலுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்றும் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்தார்.
பி.பி.ஸி தமிழோசை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக