நாள் முழுவதும் வியர்வை சிந்தி உழைப்பவர்களுக்கு இரவு உடல் வலி எடுத்து சோர்வு ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல. இரவு நன்றாக தூங்கினால் அலுப்பு நீங்கிவிடும். ஆனால் நன்றாக ஓய்வு எடுத்த பின்னரும் உடல் வலி தீராமல் சோர்வு நீடித்தால் என்ன செய்வீர்கள்? இன்னும் கொஞ்சம் ஓய்வு எடுப்பீர்கள். ஆனால் அப்படியும் சோர்வு நீடிக்கிறது என்றால் அப்போது ஏதோ பிரச்சனை என்று தானே அர்த்தம். நீங்கள் நன்றாக தூங்கிய போதும், நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தாலும் கூட, உடலில் ஆற்றல் திறனே இல்லாமல் இருக்கிறதா?
எப்போது பார்த்தாலும் சோர்வாக இருந்தால் எரிச்சல் வரத்தானே செய்யும். அதுவும் அதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் இருக்கும் போது எரிச்சல் இன்னமும் அதிகரிக்கும். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக இந்த சோம்பலுக்கு காரணமாக விளங்கும் 10 காரணங்களை நாங்கள் விளக்கியுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தூங்கச் செல்லும் முன் பயன்படுத்தும் எலெக்ட்ரானிக் பொருட்கள்
இதனை இப்படி எடுத்துக் கொள்வோம்; நீங்கள் சிறிது நேரம் எலெக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்தினால், பயன்படுத்தி முடித்ததும் கூட அதன் தாக்கம் சிறிது நேரம் இருக்கும். இது உண்மையே. படுக்க போகும் முன் கைப்பேசி, மடிக்கணினி, கணிப்பொறி, தொலைக்காட்சி பார்ப்பது அல்லது வீடியோ கேம் விளையாடுவது, படுக்க சென்ற பிறகு ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று பல ஆய்வுகள் கூறுகிறது. எலெக்ட்ரானிக் பொருட்கள் பயன்படுத்திய பிறகு அதிகரிக்கும் இரத்த அழுத்தம் மற்றும் நாடித் துடிப்பால் தான் தூக்கம் வருவதில்லை. அதனால் தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு இருந்து, இவைகளை பயன்படுத்தாதீர்கள்.
மோசமான உணவுப்பழக்கம்
கலோரிகளை குறைப்பதால், உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புக்களைக் கரைக்கலாம். ஆனால் போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டால், உடலுக்கு சோர்வு உண்டாகும். அதே போல் உணவில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்திருந்தால், அப்போதும் இதே நிலை தான் ஏற்படும். அதனால் நற்பதமான பழங்கள் மற்றும் காய்கறிகள், மெலிதான புரதங்கள், மற்றும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ள சமநிலையிலான உணவுகளை உண்ணவும். இது உங்களை அந்த நாள் முழுவதும் ஆற்றல் திறனுடன் விளங்க வைக்கும். அதனால் ஒரு நாளைக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை 3 வேளையும், ஊட்டச்சத்துள்ள நொறுக்குத் தீனிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உங்களுக்கு மன அழுத்தம் இருக்கிறதா?
மன அழுத்தம் என்பது மனதில் எழும் ஒருவித நீங்கா குழப்பமாகும். விளக்க முடியாத சோர்வு, பசியின்மை மற்றும் எதிர்மறையான உணர்வுகளுக்கு முக்கிய காரணமாக மன அழுத்தமும் செயல்படும். இதன் விளைவாக ஆற்றல் திறனை இழக்க நேரிடும். மன அழுத்தம் உள்ளவர்கள், முதலில் மருத்தவரை சந்தித்து அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் ஆற்றல் திறனை மீண்டும் வளர்க்க வேண்டும். அதற்கு உடற்பயிற்சி, ஆலோசனை பெறுதல், மருந்து உண்ணுதல் போன்றவைகளில் ஈடுபடுங்கள்.
சிறுநீரக பாதையில் தொற்று அல்லது ஈஸ்ட்
தொற்று பொதுவாக சிறுநீரக பாதையில் (ஈஸ்ட் தொற்று) தொற்று எப்போது ஏற்படும் என்பது பெண்களுக்கு நன்றாக தெரியும். இருப்பினும் அதற்கான சிகிச்சையை சமீபத்தில் எடுத்திருந்தால், அது மீண்டும் ஏற்படுவதை போன்ற உணர்வு உண்டாகும். அந்த தொற்று இன்னமும் இருந்தால், உடல் சோர்வடையும். அதனால் மருத்துவரை சந்தித்து தொற்று முழுவதுமாக நீங்கி விட்டதா என்பதை சோதனை செய்து கொள்ளுங்கள்.
தூங்கும் போது மூச்சுத்திணறல்
ராத்திரி நன்றாக தூங்குவதை போல் இருந்தாலும் உண்மையில் அப்படி நடக்காமல் போகலாம். தூக்க மூச்சின்மை பிரச்சனையால் நீங்கள் அவதிப்படலாம். அப்படியென்றால் என்னவென்று தெரியுமா? தூக்கத்தின் போது பல முறை உங்களால் மூச்சு விட முடிவதில்லை. இதனால் உங்கள் உடல்நலம் கெடும். ஆனால் இது எதுவுமே உங்களுக்கு தெரியாது. அதை தெரிந்து கொள்ள வேண்டுமானால், நீங்கள் குறட்டையால் உங்கள் கணவன்/மனைவியின் தூக்கத்தை கெடுக்கிறீர்களா என்பதை அவர்களிடம் கேளுங்கள். அப்படியானால் நீங்கள் உங்கள் எடையை குறைக்க வேண்டிய நேரம் இது. மேலும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும் அல்லது தூக்கம் சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். தூக்கத்தில் உங்கள் மூச்சுக்குழாய் திறந்திருக்க CPAP கருவியை உபயோகிக்க அவர் பரிந்துரைப்பார்.
தைராய்டு பிரச்சனைகள்
தாழ் தைராய்டிசம் இருந்தால், மெட்டபாலிச அளவை (அல்லது நீங்கள் உண்ணும் உணவை ஆற்றல் சக்தியாக மாற்றும் அளவு) கட்டுப்படுத்தும் சுரப்பி சரிவர வேலை செய்யாது. அதே போல் உயர் தைராய்டிசம் இருந்தால், மெட்டபாலிச செயல்முறையை மந்தமாக்கும். அதனால் ஆற்றல் திறன் குறைந்து, உடல் எடை அதிகரிக்கும். ஆகவே உங்களுக்கு தைராய்டு இருக்கிறதா என்ற சந்தேகம் இருந்தால், உடனே மருத்துவரை அணுகி, உங்கள் ஹார்மோன் அளவுகளை சோதனை செய்து கொள்ளுங்கள்.
இரத்த சோகை இருக்கிறதா?
இரத்த சோகை இருந்தால் கண்டிப்பாக உடல் சோர்வடையும். குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாயின் போது அதிக அளவில் இரத்த கசிவு ஏற்படும். அதனால் அவர்களுக்கு இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பு அதிகம். இரத்த சோகை இரும்புச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும். அதனால் இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறையும். நம் உடலில் உள்ள அங்கங்களுக்கும் தசைகளுக்கும் ஆக்சிஜன் மற்றும் ஆற்றல் திறன் செல்வதற்கு இரத்தச் சிவப்பணுக்கள் கண்டிப்பாக தேவைப்படும். இரத்த சோகையை எதிர்த்து போராட இரும்புச்சத்து நிறைந்த கடல் சிப்பி, பீன்ஸ், முழு தானியங்கள் மற்றும் மாட்டு ஈரல் போன்ற உணவுகளை உண்ணுங்கள்.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோயின் ஆரம்ப கட்டத்தில் பலருக்கு அது தெரிவதே இல்லை. அளவுக்கு அதிகமான சர்க்கரையை இரத்த ஓட்டத்தில் தேங்கச் செய்வது தான் சர்க்கரை நோய். அதற்கு காரணம், அதனை இன்சுலினாக மாற்ற அதனால் முடிவதில்லை. அதனால் உடல் சோர்வடையும். உங்கள் குடும்பத்தில் பரம்பரையாக சர்க்கரை நோய் இருந்தாலோ அல்லது எடை பருமன் பிரச்சனை இருந்தாலோ, உடனே மருத்துவரை சந்தித்து தேவையான சோதனைகளை மேற்கொள்ளவும்.
அளவுக்கு அதிகமான காப்ஃபைன்
காபி, காப்ஃபைன் கலந்த டீ, சோடா, எனர்ஜி பானம், சில மருந்துகள் மற்றும் சாக்லெட் ஆகியவைகளில் காப்ஃபைன் இருப்பதால், தூக்கம் இல்லாத போது அது பெரிதும் துணை நிற்கும். ஆனால் அதற்காக அளவுக்கு அதிகமாக அதை உபயோகித்தால் அதிகமான இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், மற்றும் சோர்வு நிலை ஏற்படும். அதனால் அளவுக்கு அதிகமாக காப்ஃபைன் பயன்படுத்தினால், அதை முதலில் குறைக்கவும்.
உடல் வறட்சி
உடல் சோர்வுக்கு தண்ணீர் பருகுவது மிகவும் எளிய மற்றும் விரைவான நிவாரணியாக கருதப்படுகிறது. உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லையென்றால் உடல் வறட்சி ஏற்பட்டு சோர்வடையச் செய்யும். உடல் வறட்சி ஏற்படுவதற்கு சிறுநீர் ஒரு அறிகுறியை காட்டும். அது சிறுநீர் கடும் மஞ்சள் நிறத்தில் இருந்தால், நீர்ச்சத்து குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். அதனால் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
Thatstamil

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக