சனி, 26 அக்டோபர், 2013

பேட் செக்டார்களும் (bad sector) பாதுகாக்கும் வழிகளும்

ஹார்ட் டிஸ்க் பயன்படத் தொடங்கிய சில வாரங்களில் அல்லது மாதங்களில், அதில் பேட் செக்டார் எனப்படும் கெட்டுப் போன பகுதிகள் ஏற்படும். இதில் டேட்டா எதுவும் எழுதப்பட மாட்டாது. இதனை விண்டோஸ் சிஸ்டமே அறிந்து அதற்கான ஏற்பாட்டினைச் செய்து கொள்ளும். இதற்கான காரணம் என்ன? எதனால் இவ்வாறு ஏற்படுகிறது? இவை ஏற்படாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கு பார்க்கலாம்.

ஹார்ட் ட்ரைவில் ஒரு பேட் செக்டார் (bad sector) என்பது, நாம் டேட்டா ஸ்டோர் செய்யும் இடத்தில் சிறிய பழுதான இடம் ஆகும். இந்த இடத்தில் எந்த டேட்டாவினையும் எழுதவோ, அதிலிருந்து படிக்கவோ முடியாது. பேட் செக்டார் என்பது, நாம் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் காந்த சக்தியில் இயங்கும் ஹார்ட் ட்ரைவ்களிலும் ஏற்படலாம்; தற்போது பழக்கத்திற்கு வந்து கொண்டிருக்கும் சாலிட் ஸ்டேட் ட்ரைவ்களிலும் உருவாகலாம்.

பழுதான பகுதிகள் என இவற்றை அழைக்கலாம். இவை இரண்டு வகைப்படும். முதலாவது, சாதனப் பாதிப்பு வழியாக ஏற்படுவது. இரண்டாவது சாப்ட்வேர் புரோகிராம்களினால் ஏற்படுவது. இரண்டாவது வகையினைச் சரி செய்திடலாம். ஆனால், முதல் வகையில் பழுது ஏற்பட்டால், அதனைச் சுற்றி வேலி போன்ற டிஜிட்டல் தடையை அமைத்து, பயன்படுத்துவதிலிருந்து ஒதுக்கி வைக்கலாம்.

பேட் செக்டார் வகைகள்: இரண்டு வகையான பேட் செக்டார்கள் உள்ளன. இவற்றை "physical” and “logical” bad sectors என அழைக்கின்றனர். அல்லது சிலர் “hard” and “soft” எனவும் அழைக்கின்றனர்.

இவற்றில் முதலாவது வகையானது, (physical — or hard — bad sector) நேரடியான பாதிப்பில் ஏற்படுவது. ஹார்ட் ட்ரைவின் எழுதும் முனை, அந்தப் பகுதியில் தொட்டு பழுதினை ஏற்படுத்தி இருக்கலாம். சிறு தூசி அந்த இடத்தில் அமர்ந்து, இடத்தைப் பாழாக்கி இருக்கலாம். சாலிட் ஸ்டேட் டிஸ்க்கில், குறிப்பிட்ட செல் பயன்படுத்தும் வாழ்நாள் காலத்தினை இழந்திருக்கலாம்.இது போன்ற பழுதுகளைச் சரி செய்திட முடியாது.

இன்னொரு வகையான logical — or soft — bad sector என்பது, குறிப்பிட்ட அந்த பகுதி செயல்படாமல் இருப்பது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் அந்தப் பகுதியில் உள்ள டேட்டாவினைப் படிக்க முயன்று, பின் பழுதினை நீக்கும் தன் குறியீடுகள் அதனுடன் ஒத்துப் போகாமல் இருப்பதனைக் கண்டறிந்து, அங்கு ஏதோ பிரச்னை இருப்பதை அறிந்து உணர்த்துவதாகும். இந்த பகுதி பேட் செக்டார் எனக் குறிக்கப்படும். இதனை, அந்தப் பகுதியில் zeros எழுதுவதன் மூலம் சரி செய்துவிடலாம். முன்பு இதனை குறுகிய அளவில் (lowlevel format) பார்மட் செய்து சரி செய்து வந்தனர். விண்டோஸ் சிஸ்டம் கொண்டிருக்கும் Disk Check டூல், இத்தகைய பழுதுகளை சரி செய்திடலாம்.

ஹார்ட் பேட் செக்டார் பழுதுகள் ஏற்படக் காரணங்கள்: உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க், அது தயாரிக்கப்பட்ட இடத்திலிருந்து வரும்போதே, பழுதான செக்டார்களைக் கொண்டிருந்திருக்கலாம். என்னதான் அதி நவீன தொழில் நுட்ப தயாரிப்பு வழிகள் மூலம் இவை தயாரிக்கப்பட்டாலும், அவற்றிலும் ஓரளவு தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் தான், புதிய சாலிட் ஸ்டேட் டிஸ்க்குகளில், அடிக்கடி பழுதுகள் இருப்பது தெரியவருகின்றன. இவை பழுதானவை என்று குறிக்கப்பட்டு, கூடுதலாக உள்ள இடத்தில் உள்ள செக்டார்கள், இவற்றிற்கு இழப்பீடாக பார்மட் செய்யப்பட்டு தரப்படுகின்றன.

வழக்கமான காந்த சக்தி அடிப்படையில் செயல்படும் ஹார்ட் ட்ரைவ்களில், பேட் செக்டார்கள், நேரடியாகப் பழுது ஏற்படுத்தப்படுகின்றன. இந்த ஹார்ட் ட்ரைவ்களில், தயாரிப்பு முறை பிழைகள் இருக்கலாம். தொடர்ந்த செயல்பாட்டினால், இயற்கையாகவே பழுது ஏற்பட்டிருக்கலாம். ட்ரைவின் எழுதும் முனை சற்றுப் பலமாக இதில் மோதி பழுது ஏற்படலாம். காற்றுப் புகா வண்ணம் ஹார்ட் ட்ரைவ் மூடப்பட்டிருந்தாலும், சில வேளைகளில், காற்றும் அதனுடன் சேர்ந்து தூசும் உட் சென்று பழுதினை ஏற்படுத்தி இருக்கலாம்.

சாப்ட் பேட் செக்டார்கள் பழுதுகள் ஏற்படக் காரணங்கள்: சாப்ட்வேர் புரோகிராம்களின் செயல்பாட்டினால், சாப்ட் பேட் செக்டார் பழுதுகள் ஏற்படுகின்றன. எடுத்துக் காட்டாக, கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் சக்தி திடீரென நிறுத்தப்பட்டு, அல்லது கம்ப்யூட்டரின் இயக்கத்தினை நிறுத்தாமல், அதற்கு மின் சக்தியை எடுத்துச் செல்லும் வயரை வெளியில் இழுப்பது போன்ற செயல்களினால், ஹார்ட் ட்ரைவில் எழுதும் பணி நடைபெறுகையில் அதன் இடையே பழுது ஏற்படலாம். இவற்றுடன் வைரஸ் மற்றும் பிற மால்வேர் புரோகிராம்களும் இது போன்ற பழுதுகளை ஏற்படுத்தலாம்.

டேட்டா இழப்பும் ஹார்ட் ட்ரைவ் முடக்கமும்: பேட் செக்டார்கள் ஏற்படுவதனால், நமக்கு ஏற்படும் இழப்பு நம்மை பதற்றப்பட வைத்திடும். ஹார்ட் ட்ரைவ் இந்த பழுது இருந்தும் நன்றாகச் செயல்பட்டாலும், பழுதான இடத்தில் உள்ள டேட்டா இழப்பு உறுதியானதுதான். பழுதான இடத்தில் உள்ள பழுது மற்ற செக்டார்களுக்கும் பரவி, டேட்டா இழப்பினை அதிகப்படுத்தலாம். எனவே தான், பைல்கள் பேக் அப் எடுக்கக் காரணமாக, இந்த பழுதுகள் ஏற்படுவதனைக் கூறுகின்றனர். பைல் ஒன்றுக்குப் பல நகல்களை எடுத்து வைப்பது இது போன்ற இழப்புகளை ஈடு கட்டும்.

கம்ப்யூட்டர் ஒரு பகுதியினைப் பழுதானது என்று கண்டு கொண்டால், உடனே அந்தப் பகுதியினை பழுதானது என்று குறிக்கிறது. அடுத்து வரும் காலத்தில், அதனை எழுதும் பணியிலிருந்து புறக்கணிக்கிறது. இந்த குறிப்பிட்ட பகுதி, நன்றாக உள்ள ஹார்ட் டிஸ்க்கின் இன்னொரு பகுதிக்கு மாற்றப்படுகிறது. "Reallocated Sectors” என இவற்றை அழைக்கின்றனர்.

பொதுவாக, இந்த பேட் செக்டார்கள் தாங்கள் உருவாகியுள்ளதைக் காட்டிக் கொள்வதில்லை. ஆனால், திடீரென ஒரு நாள், ஹார்ட் டிஸ்க் இதனால் இயங்காமல் போகும்போது நாம் இதனை உணர்கிறோம். உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட் ட்ரைவில், பேட் செக்டார்கள் ஏற்படுகிறது என்று தெரிய வந்தால், பின்னர் கவனமாக இருக்க வேண்டும். நம் ஹார்ட் டிஸ்க் திடீரென ஒரு நாள் முடங்கப்போகிறது என்பதனை உணர்ந்து கொண்டு, பைல்களை நகல் எடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும். ஹார்ட் ட்ரைவினை மாற்றுவதலான வழிகளை எதிர் கொள்ள வேண்டும்.

இந்த வகை பழுதுகளைக் கண்டறிய விண்டோஸ் இயக்கத்தில், டிஸ்க் செக் டூல் ஒன்று தரப்பட்டுள்ளது. இதன செக்டிஸ்க் எனவும் அழைப்பார்கள். இந்த டூல், கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் ட்ரைவ்களை அவற்றில் உள்ள பேட் செக்டார்களைக் கண்டறிய ஸ்கேன் செய்திடும். ஹார்ட் பேட் செக்டார்களை, குறியிட்டு தடுக்கும். சாப்ட் பேட் செக்டார் பழுதுகளை, அவற்றை மீண்டும் பயன்படுத்தும் வகையில் சரி செய்திடும். ஹார்ட் டிஸ்க்கில் இந்த வகை பழுது உள்ளது என விண்டோஸ் சிஸ்டத்திற்குத் தெரிய வந்தால், கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்குகையில், அது தானாகவே இந்த டூலை இயக்கி, சரி செய்திட முயற்சிக்கும். நாமாகவும் இந்த டூலை எந்த நிலையிலும் இயக்கலாம்.
விண்டோஸ் போலவே, லினக்ஸ் மற்றும் ஓ.எஸ். எக்ஸ் சிஸ்டங்களும் இது போன்ற டூல்களைக் கொண்டிருக்கின்றன. பேட் செக்டார் என்பது, கம்ப்யூட்டர் ஹார்ட் ட்ரைவில் வழக்கமாக ஏற்படும் ஒரு சிக்கல் தான். எனவே, ட்ரைவில் பேட் செக்டார் உள்ளது எனத் தெரியவந்தால், பயம் கொள்ளத் தேவையில்லை. இவை தொடர்ந்து பெருகி வரும்போதுதான், ஹார்ட் ட்ரைவ் முடங்கப் போகிறது என்பதனை நாம் உணர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல