மட்டக்களப்பு, மாவடிவேம்பு பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் தாயொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். மாவடிவேம்பு நாவுக்கரசர் வீதியைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை நிர்மலா (வயது 25) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
கட்டாரில் தொழில் புரியும் தனது கணவரோடு ஸ்கைப்பில் பேசிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் வீட்டு வளையில் தூக்கிட்டு மரணிக்கப்போகிறேன் என்று சொல்லி விட்டு கணவர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உடனடியாக இவரின் உறவினர்களுக்கு விடயத்தை கணவர் தொலைபேசி மூலம் அறிவித்ததுடன் உறவினர்கள் இவரின் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டு வளையில் தூக்கிட்டு மரணித்திருப்பதை அவதானித்துள்ளனர்.
ஏறாவூர் பொலிசார் மற்றும் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் செங்கடகல வைத்தியசாலையில் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக