கையொன்றை இழந்த பின்னரும் வாழ்வை முழுமையாக வாழப் போவதாக சூளுரைப்பு
உடலின் தசைப்பகுதி எலும்பாக மாறும் விநோத பாதிப்புக்குள்ளாகி கையொன்றை இழந்த பெண்ணொருவர், தனது நிலையால் மனம் தளர்ந்துவிடாது தனது வாழ்வை முழுமையாக வாழ்வதற்காக திடசங்கற்பம் பூண்டுள்ளார்.
அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டு பிரித்தானிய எஸெக்ஸில் வாழும் அஷ்லி கர்பியல் (31 வயது) என்பவரே இவ்வாறு திடசங்கற்பம் பூண்டுள்ளார்.
அவருக்கு பிப்ரோடிஸ்பிளாஸியா ஒஸிபிகன்ஸ் புறொகிரஸிவா என்றழைக்கப்படும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இத்தகைய பாதிப்புக்குள்ளான 700 பேர் மட்டுமே இதுவரை உலகில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தனக்கு ஏற்பட்ட பாதிப்பால் தன்னுடைய கையொன்றை இழந்தும் கால் ஒன்று பாதிக்கப்பட்டும் வருகின்ற நிலையில், தனது தாடைகளை அசைக்கக்கூடிய வல்லமையை இதுவரை இழக்கப்படாமை காரணமாக தான் ஒரு அதிர்ஷ்டசாலி என்று அஷ்லி கூறினார்.
தனது வாழ்வை முழுமையாக வாழ்வதே தனது இலட்சியம் என அவர் கூறினார்.
''எனக்கு ஏற்பட்டுள்ள நிலையானது நான் மனபலமும் வெற்றியடைவதற்கான தீர்மானமும் கொண்ட ஒருத்தி என்பதை எனக்கு உணர வைத்துள்ளது. நான் எதையாவது செய்ய வேண்டுமானால் அதற்கான வழிமுறையை கண்டு பிடிக்கிறேன். எனது உடலில் எவ்வளவு காலம் உடல் இயக்கங்கள் இருக்கும் என்பது தெரியாது. அதனால் நான் தற்போது என்னால் இயன்ற அளவில் அனுபவங்களைப் பெற விரும்புகிறேன்’’ என அவர் தெரிவித்தார்.
2002 ஆம் ஆண்டு இணையத்தளம் மூலம் அறிமுகமாக ஷவுன் கீன்லி என்பவரை திருமணம் செய்த அஷ்லி, 3 வருடங்கள் கழித்து விவாகரத்துப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக