பைலை மற்றவர்கள் மாற்றாமல் இருக்க: எக்ஸெல் தொகுப்பில், நீங்கள் தயாரிக்கும் ஒர்க் புக்கினை நீங்கள் மட்டுமே பயன்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என ஒரு கட்டத்தில் எண்ணலாம்; கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்ற யூசர்கள் அதில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடாது என்று எண்ணினால், அதனை அவ்வாறே செட் செய்திடலாம்.
Tools மெனுவில் Share Workbook என்பதனைத் தேர்ந்தெடுத்தால் எக்ஸெல் ஷேர் ஒர்க்புக் டயலாக் பாக்ஸைக் காட்டும். அதில் அடூடூணிதீ இடச்ணஞ்ஞுண் என்ற வரிக்கு முன் உள்ள பாக்ஸில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
ஸ்ப்ரெட் ஷீட்டில் மாற்றங்கள்: எக்ஸெல் ஒர்க் புக் தயாரிப்பில், ஒரே நேரத்தில் பல ஒர்க்ஷீட்களைத் திறந்து வைத்து நாம் பயன்படுத்த விருப்பப்படுவோம். இதற்கென விண்டோவில் ஒவ்வொரு ஒர்க்ஷீட்டிற்கும் மாறுவதற்கு, கீழாக உள்ள டேப்பிற்கு மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று செயல்படுத்த வேண்டும். கீ போர்டினையே பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது சற்று சிரமத்தைத் தரும். இதற்கான சுருக்கு வழி ஒன்று எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் தரப்பட்டுள்ளது. ஒர்க் ஷீட் மாற விருப்பப்படுகையில், Ctrl+F6 கீகளை அழுத்தவும். இந்த கீகளை அழுத்துகையில், ஒர்க் புக்குகளின் டேப்கள் வரிசையாகத் தேர்ந்தெடுக்கப் படுவதனைப் பார்க்கலாம். ஐந்து ஒர்க்புக்குகள் திறந்திருந்தால், ஐந்தாவது ஒர்க் ஷீட் செல்ல, ஐந்து முறை Ctrl+F6 கீகளை அழுத்த வேண்டும்.
பல செல்களில் ஒரே டேட்டா: எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டா அமைக்கையில், ஒரே டேட்டாவினை பல செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். இதற்கு டேட்டாவினைக் காப்பி செய்து, செல்களில் சென்று பேஸ்ட் செய்திடும் பல முனை வேலையில் இறங்க வேண்டாம். எந்த செல்களில் காப்பி செய்திட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுங்கள். இவை வரிசையாக இல்லை என்றால், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு தேர்ந்தெடுங்கள். பின்னர் டேட்டாவினை ஒரு செல்லில் டைப் செய்திடுங்கள். பின் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு என்டர் தட்டுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த செல்களில் எல்லாம் டேட்டா காப்பி செய்யப் பட்டிருக்கும்.
எக்ஸெல் ஷார்ட் கட் கீகள்: காமென்ட்ஸ் உள்ள செல்களை மட்டும் செலக்ட் செய்திட கண்ட்ரோல்+ஷிப்ட்+ஓ (Ctrl+Shft+O) அழுத்தவும். எந்த செல்லிலும் கமென்ட்ஸ் இல்லை என்றால் No cells found என்ற செய்தி கிடைக்கும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும்.
Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.
ஷிப்ட் + ஆரோ கீ (Shft+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shft+Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
ஷிப்ட் + ஹோம் கீகள் (Shft+Home) அழுத்தப்படுகையில் படுக்கை வரிசையின் முதல் செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல்+ஷிப்ட்+ ஹோம் (Ctrl+Shft+ Home) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க் ஷீட்டின் முதல் செல் வரை நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல்+ஷிப்ட் + எண்ட் (Ctrl+Shft+End) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க்ஷீட்டில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட செல் வரையில் நீட்டிக்கப்படும்.
என்டர் கீ (Enter) அழுத்தப்படுகையில் அந்த செல் முடிக்கப்பட்டு கர்சர் கீழாக உள்ள செல்லுக்குச் செல்லும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக