விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டத்திற்க்கு மாறிக் கொண்டு வருபவர்கள், கையோடு தங்கள் ஆபீஸ் தொகுப்பினையும், ஆபீஸ் 2003லிருந்து, ஆபீஸ் 2007 அல்லது ஆபீஸ் 2010க்கு மாற்றிக் கொள்கின்றனர். இதில் வேர்ட் தொகுப்பு 2007 மற்றும் 2010 பயன்படுத்துபவர்கள், ஒரு புதிய வசதியினை எதிர்கொள்கின்றனர். அதுதான் மினி டூல்பார்.
வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்தால், உடனே அந்த சொல்லின் மேலாக, ஒரு மினி டூல்பார் காட்டப்படுகிறது. சொல்லில் மாற்றங்களை மேற்கொள்ள, பார்மட் மாற்றி அமைக்க, நீங்கள் மெனு செல்ல வேண்டியதில்லை. அந்த சொல்லை பார்மட் செய்வதற்காக (அழுத்தமாக, அடிக்கோடிட, சாய்வாக அமைக்க), இந்த டூல்பார் மிகவும் வசதியாக இருக்கும். சொல்லைத் தேர்ந்தெடுத்துப் பின், கர்சரை எடுத்து, மேலே மெனு பாருக்குச் செல்ல வேண்டியதில்லை. இந்த மினி டூல்பாரிலேயே அதற்கான பட்டன்களும், ஐகான்களும் கிடைக்கின்றன.
ஆனால் பலர் இந்த மினி டூல்பார் எதற்கு என்று கருதுகின்றனர். பல வேளைகளில் இது தேவை இல்லை எனக் கருதுகின்றனர். ஏனென்றால், எப்போதும் பார்மட்டிங் பணிகளுக்காக நாம் டெக்ஸ்ட் செலக்ட் செய்வதில்லையே. மற்ற நேரங்களில் செலக்ட் செய்திடுகையில், இந்த டூல்பார் தேவையற்றதாகவே கருதப்படுகிறது. நமக்குத் தேவை என்றால், தேவைப்படும்போது, மேலே மினி டூல்பார் சென்று, செட் செய்திடலாமே என்று எண்ணலாம். அப்படியானால், இந்த மினி டூல் பாரினைக் காட்டவிடாமல் இருக்க என்ன செய்திடலாம்? இதோ! அதற்கான செட்டிங்ஸ் உத்திகள்.
ஆபீஸ் 2007 தொகுப்பில்
1. Office பட்டன் கிளிக் செய்திடவும்.
2. Word Options கிளிக் செய்க.
3. இடது பக்கம் உள்ள பிரிவில் Popular என்பதில் கிளிக் செய்திடுக.
4. இங்கு கிடைக்கும் பிரிவில் Show Mini Toolbar என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
5. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
ஆபீஸ் 2010 தொகுப்பில்
1. File டேப்பில் கிளிக் செய்திடவும்.
2. இடது பக்கம் உள்ள பிரிவில் Help என்பதன் கீழாக உள்ள Options என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு General என்பதில் கிளிக் செய்திடுக.
4. இங்கு User Interface Options என்ற பிரிவில், Selection என்ற தலைப்பில், என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக