மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜி சிலையால் ஏற்படும் போக்குவரத்து இடையூறு தொடர்பான மனு தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட போக்குவரத்து உதவி ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-ஆம் ஆண்டில் பி.என்.ஸ்ரீநிவாசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,”கடற்கரை காமராஜர் சாலையும் ராதா கிருஷ்ணன் சாலையும் சந்திக்கும் இடத்தில் சிவாஜி சிலை வைக்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்துக்கு இடை யூறாக உள்ளது. அவ்வாறு போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளில் சிலை வைக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதனால், எனவே, சிலையை அகற்ற வேண்டும்” என கூறியுள்ளார்
இந்த மனுவுக்கு உயர்நீதிமன்றம் அப்போது தடை ஏதும் விதிக்காததால் அரசு அங்கு சிலை வைத்தது.இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை (அக்டோபர் 23) விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி சிலை இருப்பதால் போக்குவரத்து நெரிசலுக்கு எந்த இடையூறும் இல்லை என்று வாதாடினார்.
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி ஆஜராகி, காமராஜர் சாலையிலிருந்து ராதாகிருஷ்ணன் சாலைக்கு வலது பக்கம் திரும்பும் போது வாகன ஓட்டிகள் பார்ப்பதற்கு இடையூறு ஏற்படுகிறது என வாதாடினார்.
இருவரது வாதங்களை கேட்ட நீதிபதிகள், போக்குவரத்து இடையூறு தொடர்பாக மனு தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட போக்குவரத்து உதவி ஆணையர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக